கோபத்தில் கொந்தளித்த சீமான்.. மைத்துனரை இழுத்த செய்தியாளரிடம் தரக்குறைவாக பேச்சு - சிஎம்பிசி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்திரிகையாளர் சந்திப்பில் தனது மைத்துனருக்கு நாம் தமிழர் கட்சியில் சீட் வழங்கியதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை பைத்தியம் என கடுமையாக விமர்சித்த சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

சென்னையில் இன்று சீமான் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், செய்தியாளர் ஒருவர், "திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் ஈழத் தமிழர்கள் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துகிறார்கள். தமிழ் தேசியவாதிகள் ஆதாயத்திற்காக வாய்திறக்க மறுக்கிறார்கள் என்று சவுக்கு சங்கர் குற்றச்சாட்டை வைத்து உள்ளார்." என கேள்வி எழுப்பினார்.

அப்போது பதிலளித்த சீமான், "குஜராத்தில் அதானி துறைமுகத்தில் 20,000 கோடிக்கு ஹெராயின் வந்தது. அதை யாருமே பேசவில்லை. தடுப்பு காவலில் இருப்பவர்களால் எப்படி கடத்த முடியும்? அதை கண்காணிப்பது உங்கள் வேலை. நடப்பது திராவிடர் ஆட்சி. போதைப்பொருள் கடத்தலில் தமிழ்தேசியவாதிகள் ஆதாயத்துக்கு பேசுகிறார்கள் என்றால்.. வெறுப்பாகுமா இல்லையா?" என்றார்.

உனக்கும் சங்கருக்கும் பிரச்சனை

உனக்கும் சங்கருக்கும் பிரச்சனை

உடனே செய்தியாளர், "சவுக்கு சங்கர் இதை சொல்லி இருக்கிறாரே?" என்று கேட்டவுடன், "சவுக்கு சங்கருக்கும் உனக்கும் ஏதோ பிரச்சனை உள்ளது. அதனால் நீ அவரை பற்றி பேசுகிறாய். சவுக்கு சங்கரின் கருத்து அது. நான் அதை ஏற்கிறேனா? ஆட்சியில் இருப்பவர்கள் யார்? யார் என்ன பேசினாலும் ஒட்டு கேட்கிறீர்கள். இதை கண்காணிக்காமல் என்ன செய்கிறீகள்? போதைப்பொருள் கடத்தினால் நடவடிக்கை எடுங்கள்." என்று கூறினார்.

வேறு கேள்வி கேளுங்க

வேறு கேள்வி கேளுங்க

"தமிழ்நாடு அரசும் போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கிறது என்பதும்தான் சவுக்கு சங்கரின் குற்றச்சாட்டு." என்று அப்போது அதே செய்தியாளர் மீண்டும் கேட்க சீமான், "விடுப்பா வேறு ஏதாவது கேளுங்க" என்றார். அதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்கப்பட்டதை வைத்து வாரிசு அரசியல் விமர்சனத்தை சீமான் முன்வைத்து பேசினார்.

மைத்துனருக்கு சீட்

மைத்துனருக்கு சீட்

அப்போது அந்த செய்தியாளர், "உங்களுடைய உறவினர் அருண்மொழிக்கு நீங்களும் சீட் கொடுத்ததாக குற்றச்சாட்டு உள்ளது." என்று தெரிவிக்க, அதற்கு பதிலளிக்காத சீமான், செய்தியாளரை பார்த்து, "அவனுக்கு ஒரு பிரச்சனை. நீ ஒரு நல்ல மனநல மருத்துவரை பாருடா டேய். பைத்தியக்காரன் மாதிரி கேள்வி கேட்காதே. திமுக, அதிமுகவில் இடம் கொடுத்தால்தான் அவன் வாரிசு." என்று பதிலளித்தார்.

உனக்கு ஏதோ பிரச்சனை

உனக்கு ஏதோ பிரச்சனை

"கருத்து சுதந்திரம் பேசும் நீங்கள் கேள்வி கேட்டால் பைத்தியகாரன் என்கிறீர்கள்." என்று செய்தியாளர் மீண்டும் கேள்வி எழுப்ப, சீமான் "உனக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது. எந்த கேள்வியும் சரியாக கேட்பது இல்லை. மற்றவர்களையும் கேட்க விடுவதும் இல்லை. யோ! ஏதாவது பேசிக்கொண்டு இருக்காதே. எங்க மாமா திமுக, அதிமுகவில் இருந்தார். அவரது மகனுக்கு சீட் கொடுத்தோம். அவன் என்ன என்னுடைய வாரிசா?" என்று சீமான் பதிலளித்தார்.

ஒருமையில் பதில்

ஒருமையில் பதில்

அதற்கு அந்த செய்தியாளர், "ஏன் மரியாதை குறைவாக பேசுகிறீர்கள்?" என்று கேட்க, "ஏய்.. நீ எந்த கேள்வியும் உருப்படியாக கேட்கவில்லை. இனி நீ என்னை சந்திக்க வராதே. அன்றிலிருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறேன். உனக்கு ஏதோ பிரச்சனை உள்ளது. தேவையில்லாத கேள்விகளை கேட்டு வருகிறாய்." என்று ஒருமையில் பதிலளித்தார். சீமானின் இந்த பேச்சால் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

சிஎம்பிசி கண்டனம்

சிஎம்பிசி கண்டனம்

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம், "சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி கேட்டதற்காக பத்திரிகையாளர் கரிகாலனை தரக்குறைவாக பேசி, மிரட்டியதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த அநாகரீக போக்கை அவர் கைவிட வேண்டும். உடனே மன்னிப்பும் கேட்க வேண்டும்." என்று கண்டனம் தெரிவித்து உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+