ட்ரெஸ் இல்லாமல் செல்ஃபி! நித்யானந்தா மீது பகீர் புகார் கூறிய சிஷ்யை! சமாதி ஆனாலும் விட மாட்டாங்க போல

Subscribe to Oneindia Tamil

சென்னை : டிஸ்கவரி ப்ளஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 'My Daughter Joined a Cult' என்ற ஆவணப்படத்தில் பேசியுள்ள நித்யானந்தாவின் முன்னாள் சீடர்கள் பலர் ஆண் பெண் என்ற பேதமின்றி சிஷ்யர்களை பாலியல் ரீதியாக நித்யானந்தா வன்கொடுமை செய்ததாக புகார் கூறியுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை, ஆட்கடத்தல், மோசடி என்று இந்தியாவின் பல மாநிலங்களில் வழக்குகளில் சிக்கி கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தனது சில சீடர்களுடன் தலைமறைவானவர் சாமியார் நித்தியானந்தா.

தன்னை நம்பிவந்தவர்களிடம் சித்துவேலைகளை காட்டி மோசடி செய்தும், அடித்துச் சென்ற பணத்தில் தனித் தீவு ஒன்றை குத்தகைக்கு எடுத்துக்கொண்டு, கைலாசா என்ற நாட்டை அறிவித்தார்.

சாமியார் நித்யானந்தா

சாமியார் நித்யானந்தா

இந்தியாவில் இருந்து ஆட்டைய போட்டுச்சென்ற ஆயிரம் கோடி அளவிலான பணத்தை தங்க கட்டிகள் ஆக்கி வெளிநாட்டு வங்கிகளில் வைத்திருந்த துணிச்சலில் இந்திய அரசுக்கே சவால் விட்டு தப்பித்து வந்தார். கைலாசாவை நாடு என்று அவர் சொல்லிக்கொண்டாலும் உண்மையில் அவர் வசிப்பது கடல் சூழ்ந்த ஒரு தீவு பகுதி. திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்த நித்தியானந்தாவிற்கு ஆரம்பத்தில் கைலாசா குஜாலாக இருந்தது.

உடல்நிலை மோசம்

உடல்நிலை மோசம்

ஆனால் போக போக அதுவே ஆபத்தாக மாறியது. கடற்காற்றும் இந்திய முறை உணவு கிடைக்காததாலும் நித்திக்கு தொடர் தொந்தரவுகள் தொடங்கின. உடல் மெலிந்து சோர்வான நித்திக்கு கல்லீரல் அலர்ஜியும், சிறுநீரக தொந்தரவும் ஏற்பட்டுள்ளது. போக போக நுரையீரல் தொற்றுவரை சென்று தற்போது மூச்சு விட முடியாமல் ஆக்சிஜன் உதவியுடன் இருந்து வருகின்றார்.

கோமா நிலையில் சிகிச்சை

கோமா நிலையில் சிகிச்சை

இந்திய அரசால் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளி என்பதால் நித்தியானந்தாவால் கோடி கணக்கில் பணம் இருந்தும், தனி விமானம் இருந்தும் சிகிச்சைக்காக வேறு எங்கும் செல்லமுடியாத நிலை உள்ளது. கடந்த இரண்டு வாரமாக முற்றிலும் முடங்கிய நிலையில் இருந்த நித்தியானந்தாவின் உடல் நிலை மேலும் மோசமடைந்து கோமா நிலைக்கு சென்றுள்ளது. இந்நிலையில் தான் நித்யானந்தா குறித்த ஆவணப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

புதிய ஆவணப்படம்

புதிய ஆவணப்படம்

டிஸ்கவரி ப்ளஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 'My Daughter Joined a Cult' என்ற ஆவணப்படம், தமிழ், இந்தி, தெலுங்கு ,கன்னடம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மூன்று பாகங்களாக வெளியாகியிருக்கிறது. இந்த ஆவணப்படத்தில் அவரது சீடர்களாக இருந்தவர்களே நித்தியானந்தா குறித்த பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக ஆண் பெண் என்ற பேதமின்றி சிஷ்யர்களை பாலியல் ரீதியாக நித்யானந்தா வன்கொடுமை செய்ததாக புகார் கூறியுள்ளனர்.

பாலியல் புகார்

பாலியல் புகார்

அந்த ஆவணப்படத்தில் பேசியுள்ள நித்யானந்தாவின் சிஷ்யையாக இருந்த பெண் ஒருவர் ஆன்லைன் மூலம் நித்தியானந்தாவின் சீடராக தான் சேர்ந்த பொழுது முதல் பல்வேறு உபன்யாசங்கள் தனக்கு வழங்கி, தனது பேச்சின் மூலம் நித்யானந்தா தன்னை கட்டுப்படுத்துவதாகவும் பின்னர் ஆடையின்றி செல்ஃபி எடுத்து தனக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டதாக பகீர் புகாரை தெரிவித்துள்ளார். தான் செய்வது சரியா என தவித்த தருணத்தில் தொடர்ந்து மூளைச் சலவை செய்யும் வகையில் பேசிய நித்யானந்தா தனது காரியத்தை சாதித்துக் கொண்டதாகவும் ஆன்லைன் மூலமே தனக்கு பாலியல் தொந்தரவு தந்ததாகவும் கூறியுள்ளார் .மேலும் அந்த ஆவணப்படத்தில் பல புகார்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+