வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..17 வயதானவர்களுக்கு நல்ல வாய்ப்பு.. தேர்தல் ஆணையர் சத்யபிரதா!
சென்னை: ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கவுள்ளது. நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளை சரி செய்யும் நோக்கில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணி கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 3.14 கோடி பேரும், ஆண் வாக்காளர்கள் 3.09 கோடி பேரும் உள்ளனர். இவர்களில் மொத்தமாக 3.15 கோடி பேர் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் - ஆதார் இணைப்பு
ஆதார் இணைப்பு திட்டத்தை நிறைவு செய்யவும், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கம் ஆகிய பணிகளை மேற்கொள்ள இம்மாதம் சிறப்பு முகாம்களை நடத்த தேர்தல் கமிஷன் முடிவெடுத்து உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கடிதம் எழுதியுள்ளார்.

ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல்
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி கடந்த மாதம் 25 தேதி தொடங்கி, கடந்த 7ம் தேதியோடு நிறைவடைந்தது. இந்த நிலையில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார். இதன் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம், முறையான வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் தேர்தல் பங்கேற்பு என்ற விழிப்புணர்வு பேரணியை நடத்தவுள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தம்
அதேபோல் வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிகள் தொடங்யுள்ளது. டிச. 8ம் தேதி வரை வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறும். இந்த காலகட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் மாற்றம், முகவரியில் திருத்தம், புதிய வாக்காளா் பெயா் சோ்ப்பு ஆகியவற்றுக்காக மனுக்களை அளிக்கலாம். இந்த ஆண்டில் வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்பு
அதன்படி 17 வயது நிரம்பியவா்கள் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விண்ணப்பிக்கலாம். அவா்கள் 18 வயது பூா்த்தி அடைந்தவுடன் பட்டியலில் பெயா் சோ்க்கப்பட்டுவிடும். வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாக்காளா்கள் தங்களது ஆதாா் எண்ணைத் தெரிவிப்பதற்கான படிவம் 6பி-ஐ பூா்த்தி செய்து அளிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications