நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க
சென்னை: கூட்டுறவு சங்கம் நகைக்கடனை தள்ளுபடி செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள நிலையில், கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த அரசாணை வெளியாகி உள்ளது.. இது ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளதுடன், பல்லாயிரக்கணக்கான ஊழியர்களின் நீண்ட நாள் காத்திருப்பு ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது..!!
சில நாட்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.. இதில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தாலும், மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது கவனம் பெற்றது..

கூட்டுறவு சங்க நகைக்கடன் தள்ளுபடி
இதற்கு காரணம், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த 5 சவரன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி வாக்குறுதி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதே ஆகும்.. எனவே, திமுகவின் தேர்தல் அறிக்கையில் மீண்டும் நகைக்கடன் தள்ளுபடி வாக்குறுதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது..
அதேபோல இன்று நடிகர் விஜய் மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. குறிப்பாக இதில் நகைக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு இடம்பெறலாம் என்ற தகவல் பரவி வருகிறது.. திமுக இந்த வகை அறிவிப்பை எப்படியும் வெளியிடும் என்ற கணிப்பில், அதற்கு போட்டியாக விஜய் அறிவிப்பு இருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது..
ஊதிய உயர்வு அரசாணை
கூட்டுறவு சங்கம் மீதான இப்படியான எதிர்பார்ப்புகள் நிலவி வரும்நிலையில், அச்சங்கத்துக்கு குட் நியூஸ் ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது..
தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ரேஷன் கடைகளில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களின் நீண்ட நாள் காத்திருப்பு ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.. கடந்த மாதத்துடன் பழைய ஊதிய ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், புதிய ஊதிய நிர்ணயம் தொடர்பாக நிலவி வந்த இழுபறி தற்போது முடிவுக்கு வந்துள்ளது..
தமிழக அரசு குட் நியூஸ்
ஊதிய உயர்வுக்கான குழு அமைக்க கோரி பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், ஊழியர் சங்கங்களின் ஆலோசனைகளை பெற்று பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டன..
இருந்தாலும் அரசாணை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால், நேற்று முன்தினம் மார்ச் 6ஆம் தேதி பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட ஊழியர் சங்கங்கள் அதிரடியாக திட்டமிட்டிருந்தன.. இந்த நெருக்கடியான சூழலில் தான், தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று புதிய ஊதிய உயர்வுக்கான அரசாணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது..
இந்த புதிய அறிவிப்பின்படி, புதிதாக பணியில் சேரும் விற்பனையாளர்களுக்கு மாதம் 7,500 ரூபாயும், கட்டுநர்களுக்கு 6,000 ரூபாயும் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது..
ஓராண்டு பணி நிறைவுக்கு பிறகு விற்பனையாளர்களுக்கு 9,900 முதல் 39,600 ரூபாய் வரையிலான ஊதிய விகிதமும், கட்டுநர்களுக்கு 9,000 முதல் 35,000 ரூபாய் வரையிலான விகிதமும் அமலுக்கு வரும்.. இது தவிர அடிப்படை சம்பளத்துடன் 100 சதவீத அகவிலைப்படியை இணைத்து, அதனுடன் கூடுதலாக 15 சதவீதத்தை கூட்டி புதிய அடிப்படை ஊதியம் கணக்கிடப்படும் என்பது ஊழியர்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பலனாகும்..
வீட்டு வாடகைப்படி
வீட்டு வாடகைப்படியாக அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் வழங்கப்பட உள்ளது.. மேலும் ரேஷன் கடைகளில் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கடைப்படி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.. 1,500 அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்களுக்கு 2,000 ரூபாயும், கட்டுநர்களுக்கு 1,500 ரூபாயும் கூடுதலாக கிடைக்கும்..
நகர ஈட்டுப்படி மற்றும் மலைவாழ் பகுதி படிகளும் இந்த புதிய அரசாணையின் மூலம் உயர்த்தப்பட்டுள்ளன.. புதிய ஊழியர்களுக்கு 55 சதவீத அகவிலைப்படி அனுமதிக்கப்பட்டுள்ளது..
ரேஷன் கடை ஊழியர்கள்
இந்த அதிரடி மாற்றங்கள் குறித்து தமிழ்நாடு அனைத்து ரேஷன் கடை ஊழியர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறும்போது, வரலாற்றிலேயே முதல் முறையாக ஊதிய உயர்வுக்கான உத்தரவு மிக விரைவாக பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்..
இந்த அரசாணையின் மூலம் புதிய பணியாளர்களுக்கு 2,000 ரூபாய் வரையிலும், சீனியர் ஊழியர்களுக்கு 8,000 ரூபாய் வரையிலும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது..
இருந்தாலும் சில கோரிக்கைகள் இன்னும் நிலுவையில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.. குறிப்பாக அகவிலைப்படியை 55 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும், மருத்துவப்படி மற்றும் வீட்டு வாடகை படிகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.. இது தொடர்பாக விரைவில் பதிவாளரை சந்தித்து முறையிட ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன..!!
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications