Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா அதிகரிப்பு... தளர்வுகள் அற்ற முழு லாக்டவுன் ஒரு வாரம் நீடிப்பு - முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தளர்வுகள் அற்ற லாக்டவுன் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா பரவல் சென்னை தவிர பல மாவட்டங்களில் வேகமாக பரவி வருவதால் மேலும் ஒரு வார காலத்திற்கு அதாவது ஜூன் 7ஆம் தேதி வரைக்கும் தமிழகத்தில் தளர்வுகள் அற்ற லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். காய்கறிகள், பழங்கள் போல மளிகை சாமான்களும் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும், தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபோதிலும், தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துவந்தது

கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே உள்ளதால் ஒரு வார காலத்திற்கு கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திங்கட்கிழமை காலை 6 மணி முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 31ஆம் தேதி வரை தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் தளர்வுகள் அற்ற லாக்டவுனை நீட்டிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் தளர்வுகள் அற்ற லாக்டவுன் ஜூன் 7ஆம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு

ஊரடங்கு உத்தரவு

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

ஊரடங்கு உத்தரவு

ஊரடங்கு உத்தரவு

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

லாக்டவுன் அமல்

லாக்டவுன் அமல்

இந்நிலையில், கடந்த 22-5-2021 அன்று அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், முன்னதாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டறிந்தும், ஆலோசனை மற்றும் கருத்துகளைப் பரிசீலித்தும், கொரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, கடந்த 24-5-2021 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஜூன் 7 வரை நீடிப்பு

ஜூன் 7 வரை நீடிப்பு

இந்த ஊரடங்கு வரும் 31-5-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு 7-6-2021 காலை 6-00 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன்.

மளிகை சாமான்கள்

மளிகை சாமான்கள்

எனினும், பொதுமக்கள் அத்தியாவசிய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில், அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி / பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும். மேலும், மளிகைப் பொருட்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்யவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7-00 மணி முதல் மாலை 6-00 மணிவரை அனுமதிக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+