வீரர்கள் உயிரோடு விளையாடலாமா? பிசிசிஐ எடுக்கும் பெரிய ரிஸ்க்.. மாட்டிய இளம் இந்திய வீரர்கள்!
சென்னை: தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி வரும் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் காரணமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் முக்கியமான சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
உலகம் பல்வேறு நாடுகளில் பரவி வரும் B.1.1.529 வகை கொரோனா வைரசுக்கு ஓமிக்ரான் கொரோனா என்று உலக சுகாதார மையம் பெயர் வைத்துள்ளது. இதுவரை 113 பேருக்கு உலகம் முழுக்க ஓமிக்ரான் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க நாடுகளில் ஓமிக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.
அதோடு ஹாங்காங், இஸ்ரேல், யு.கே ஆகிய பல்வேறு நாடுகளிலும் ஓமிக்ரான் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை, பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

எதுவும் செய்யவில்லை
உலகமே ஓமிக்ரான் கொரோனாவை பார்த்து அரண்டு போய் இருக்கும் நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ மட்டும் எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. தென்னாப்பிரிக்காவில் இந்திய ஏ அணி டெஸ்ட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இளம் வீரர்கள் இதில் இந்தியா சார்பாக ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.

தகவல் செல்லவில்லை
இவர்களை இந்தியா கொண்டு வர இதுவரை பிசிசிஐ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதேபோல் மிக முக்கியமாக அங்கு இருக்கும் வீரர்களுக்கு ஓமிக்ரான் குறித்த எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. வீரர்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக எந்த அறிவிப்பும் பிசிசிஐ தரப்பில் இருந்து செல்லவில்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த டூர்
இது மட்டுமின்றி மேலும் ஒரு ரிஸ்க்கை பிசிசிஐ எடுக்க உள்ளது. அதன்படி இந்திய சீனியர் அணி ஓமிக்ரான் பரவலுக்கு இடையிலும் தென்னாப்பிரிக்காவிற்கு செல்கிறது. அங்கு மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள், 4 டி 20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. டிசம்பர் 17ம் தேதி இந்த தொடர் நடக்க உள்ளது. இந்த தொடரை ஒத்திவைக்கவும் பிசிசிஐ எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

தடை செய்யவில்லை
இந்திய அணியின் இளம் வீரர்களையும் கொண்டு வரவில்லை. சீனியர் வீரர்களையும் பாதுகாக்க பிசிசிஐ இதுவரை முயற்சி எடுக்கவில்லை. ஓமிக்ரான் பரவலுக்கு இடையே பிசிசிஐ அமைப்பின் இந்த மெத்தனம் விமர்சனங்களை சந்தித்துள்ளது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தோடு ஆலோசனை செய்த பின் இதில் முடிவு எடுப்போம் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சிக்கல்
எந்த தகவலும் கிடைக்காமல் இப்போது இதனால் இந்திய அணியின் இளம் 'ஏ' அணி வீரர்கள் தென்னாப்பிரிக்காவில் சிக்கி உள்ளனர். பல்வேறு பயண கட்டுப்பாடுகள் உலகம் முழுக்க விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்திய இளம் வீரர்கள் மீண்டும் நாடு திரும்புவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications