சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவிற்கு இடையிலும்.. பேருந்துகள் இயங்கும்.. +2 தேர்வுகள் நடக்கும்.. தமிழக அரசு அதிரடி முடிவு

சென்னையில் நாளை 50% பேருந்துகள் இயக்கப்படும், தமிழகம் முழுக்க மற்ற மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நாளை 50% பேருந்துகள் இயக்கப்படும், தமிழகம் முழுக்க மற்ற மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Recommended Video

    மருத்துவ ஊழியர்களுக்காக கைதட்டி ராயல் சல்யூட் !

    தமிழகத்தில் ஏற்கனவே மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் பரவியது. ஏற்கனவே 3 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், நேற்று மேலும் மூவருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

    தமிழகத்திலும் மக்கள் சார்பாக ஜனதா ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. சென்னையில் மட்டுமின்றி தமிழகம் முழுக்க எல்லா மாவட்டங்களில் இந்த ஊரடங்கு பின்பற்றப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை காலை 5 மணி வரை இந்த லாக் டவுன் தொடர உள்ளது. ஆனால் அதற்கு பிறகு ஊரடங்கு நீக்கப்பட்டு இயல்புவாழ்க்கை திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை நிலை

    சென்னை நிலை

    சென்னையில் பயணிகளின் நலன்கருதி 50% மாநகர பேருந்துகள் இயக்கப்படும் நாளை காலை 5 மணி முதல் மாநகர பேருந்துகள் இயக்கப்படும். மருத்துவமனை பணியாளர்கள் மருத்துவமனை வந்து செல்ல வசதியாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் பேருந்துகள் இயங்கும். அதேபோல் கடைகள், பொது நிறுவனங்கள் செயல்படும். ஆனால் மக்கள் கூட்டமாக வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

    கடலூர் எப்படி

    கடலூர் எப்படி

    கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலை தற்போது மூடப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு அண்டை மாநில வாகனங்கள் அனுமதி இல்லை என புதுவை முதல்வர் அறிவித்த நிலையில் தற்போது தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு இரண்டு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட எந்த வாகனமும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

    மெட்ரோ இல்லை

    மெட்ரோ இல்லை

    சென்னை நகரில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவைகள் நாளை முதல் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.லாக் டவுன் அறிவிக்கப்பட்ட ஈரோடு, சென்னை, காஞ்சிபுரத்தில் பேருந்துகள் இயங்கும். மூன்று மாவட்டங்களை தனிமைப்படுத்துதல் என்பது இப்போது வரை பரிந்துரை மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

    ரயில் சேவை

    ரயில் சேவை

    இதில் அரசு விரைவில் முடிவினை அறிவிக்கும்.தமிழகத்தில் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக மக்கள் தேவையற்ற பதுக்கல் அல்லது பயத்தை கைவிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது.

    English summary
    Coronavirus: Lock Down in Chennai may create huge confusion because of Chengalpattu, The new district.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X