சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பாதித்த காஞ்சிபுரம் இளைஞர் குணமடைந்தார்.. தமிழக சுகாதாரத்துறை அசத்தல்.. விஜயபாஸ்கர் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதித்த காஞ்சிபுரம் நபர் குணமடைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்த காஞ்சிபுரம் நபர் குணமடைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மொத்தம் 58 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் அதிகமாக 17 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது.

புனேவில் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகம் எப்படி

தமிழகம் எப்படி

இரண்டு நாட்களுக்கு முன் தமிழகத்திலும் முதல் நபர் ஒருவருக்கு கொரோனா பரவியது. இவருக்கு ஓமன் நாட்டிற்கு சென்று திரும்பிய பின் கொரோனா ஏற்பட்டுள்ளது.இவரை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இவர் தொடர்பு கொண்ட நபர்களை எல்லாம் தற்போது சோதனை செய்து வருகிறது. வைரஸ் பாதிக்கப்பட்ட இந்த நபர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எப்படி வந்தது

எப்படி வந்தது

இவர் ஓமன் நாட்டில் பணியாற்றி வருகிறார். அங்கு இவர் கட்டிட தொழிலாளியாக இருக்கிறார். 12 வருடமாக அங்கு பணியாற்றும் இவர், அவ்வப்போது தமிழகம் வந்து சென்றுள்ளார். இந்த நிலையில் அங்கு கொரோனா பாதிப்பு வந்ததை அடுத்து சரியாக 10 நாட்களுக்கு முன் இந்தியா வந்துள்ளார். காஞ்சிபுரம் வந்த இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

உறுதி செய்யப்பட்டது

உறுதி செய்யப்பட்டது

இதையடுத்து இவர் சிகிச்சைக்காகக் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார். அவரின் ரத்த மாதிரியை சோதித்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் உள்ளது உறுதி செய்யப்பட்டது. அதன்பின் அவருக்கு தனையாக் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது .

குணம்

குணம்

இந்த நிலையில் கொரோனா பாதித்த காஞ்சிபுரம் நபர் குணமடைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இவருக்கு தொடர்ச்சியாக அளித்த சிகிச்சை பலன் அளித்துள்ளது. சிகிச்சையின் பயனாக இவர் குணமடைந்துள்ளார். ஆனால் இவரை 14 நாட்கள் மேலும் கண்காணிப்பில் வைப்போம். அதன்பின்தான் வெளியே செல்ல அனுமதிப்போம்.

தமிழகம் எப்படி

தமிழகம் எப்படி

தமிழகம் கொரோனா இல்லாத மாநிலம் ஆகியுள்ளது, என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் யாருக்கும் இப்போது கொரோனா இல்லை. நாளை இரண்டு பேருடைய கொரோனா சோதனை ரிப்போர்ட் வரும். கொரோனா தொடர்பாக மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மிக கொடுமையான கொரோனவை தமிழக மருத்துவ துறை வெற்றிகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Coronavirus: Kanchipuram patient with COVID -19 now testes negative says TN Govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X