Lockdown: தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர லாக்டவுன்..ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு! அரசு அதிரடி
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா கேஸ்கள் 2500ஐ தாண்டி உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 121 பேருக்கு ஓமிக்ரான் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஓமிக்ரான் கேஸ்கள் அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமா என்பது குறித்து நேற்று முதல்வர் ஆலோசனை செய்தார்.
கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். சுகாதாரத்துறை வல்லுனர்கள், மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

ஆலோசனை
இந்த கூட்டம் 2 மணி நேரம் நடைபெற்றது. கொரோனா கேஸ்கள் தமிழ்நாட்டில் உயர்வது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் நேற்று அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதேபோல் தமிழ்நாட்டில் என்ன மாதிரியான கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என்பது குறித்தும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அதன்படி கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர கண்காணிப்புகளை நடத்த வேண்டும், இரவு நேர லாக்டவுன் கொண்டு வர வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு லாக்டவுன்
மேலும் வார இறுதி நாட்களில் கட்டுப்பாட்டு, தியேட்டர் , பார்கள் மூடுவது குறித்து ஆலோசனைகள் செய்யப்பட்டன. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய விவரங்களை கேட்டதாக கூறப்படுகிறது. அதாவது ஓமிக்ரான் பரவும் வேகம், ஓமிக்ரான் கேஸ்களில் இரட்டிப்பு வேகம் உள்ளிட்ட விவரங்களை கேட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் அறிவியல் பூர்வமாக எப்படி லாக்டவுன் போட்டால் பயன் அளிக்கும். பொருளாதாரத்தை பாதிக்காத வகையில் லாக்டவுன் போட வேண்டும்.

தமிழ்நாடு கொரோனா
தமிழ்நாடு கொரோனா இது குறித்த டேட்டா வேண்டும் என்று முதல்வர் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பிற்கான புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை நடத்தினார். மருத்துவத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார். கலைவாணர் அரங்கில் முதல்வர் ஸ்டாலின் விவாதித்தார். கொரோனா தொடர்பான டேட்டாக்களை வைத்து இதில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இரவு நேர லாக்டவுன்
இரவு நேர லாக்டவுன் இந்த மீட்டிங்கை தொடர்ந்து தமிழ்நாட்டில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு.ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடைபெறும். வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத்தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனுமதி
இந்த நேரத்தில் உணவகம், தியேட்டர் அனுமதிக்கப்படவில்லை. தேவையின்றி வெளியே செல்ல கூடாது. மாறாக பால் விநியோகம், மருத்துவம், பத்திரிக்கை, பாதுகாப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் இரவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இரவு நேரத்தில் வேளைக்கு செல்வதாக இருந்தால் அடையாள அட்டையை காட்ட வேண்டும். அதேபோல் இவர்கள் இரண்டு டோஸ் வேக்சின் போட்டு இருக்க வேண்டும். இதற்கான சான்றிதழை அளிக்க வேண்டும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications