சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கவர்ச்சி பேச்சு.. சிக்கி கொண்ட 60 பேர்.. 4 கோடி ரூபாயாம்.. வளைத்து வளைத்து சீட்டிங்கில் ஈடுபட்ட ஜோடி

மோசடியில் ஈடுபட்ட தம்பதி சென்னையில் கைதானார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: மோசடி வேலை செய்து, கோடிக்கணக்கில் பணத்தையும் கையாடல் செய்து, 2 பேர் ஜோடியாக கைதாகி உள்ளனர்..!

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர்கள் ரவிசந்திர பிரபு - சசிபிரியா தம்பதி... இவர்கள் காந்தா என்பவரின் மகனுக்கு ஏர்போர்ட்டில் Immigration Officer வேலை வாங்கி தருவதாக கூறி, 20,00,000 ரூபாய் கடந்த 2019 ஆண்டு பணத்தை பெற்றுள்ளனர்.

புதுச்சேரியில் திடீரென வெடித்த மர்மப் பொருள்... தரைமட்டமான வீடு.. 3 பேர் கவலைக்கிடம்! புதுச்சேரியில் திடீரென வெடித்த மர்மப் பொருள்... தரைமட்டமான வீடு.. 3 பேர் கவலைக்கிடம்!

ஆனால் சொன்னபடி அவர்கள் வேலை வாங்கி தராததால் ஏமாற்றமடைந்த காந்தா, ரவிசந்திர பிரபு - சசிபிரியா தம்பதி மீது, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் தந்தார்.

 வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

அந்த புகாரில் உள்ளதாவது: என்னுடைய மகனுக்கு ஏர்போர்ட்டில் அதிகாரி வேலை வாங்கி தருவதாக ரூ.20 லட்சத்தை கடந்த 2019ம் ஆண்டு சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த சசிபிரியா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரபாபு ஆகியோர் பெற்றனர். ஆனால் சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை. இதுகுறித்து கேட்டால் தகாத வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட தம்பதி மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

 வழக்கு பதிவு

வழக்கு பதிவு

இந்த புகாரின்படி போலீசாரும் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அப்போதுதான் இவர்களின் பல்வேறு மோசடிகள் வெளியே வந்தன.. சசிபிரியா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரபாபு இருவரும் கடந்த 2017ம் ஆண்டு சென்னை ஆழ்வார்திருநகர் வீரப்பா நகர் அனெக்ஸ் பகுதியில் மாஸ் மேன் பவர் என்ற பெயரில் வேலைவாய்ப்பு நிறுவனம் தொடங்கி உள்ளனர்..

 ஆசிரியர் பணி

ஆசிரியர் பணி

கல்வித்துறையில் ஆசிரியர் பணி, என்எல்சி நிறுவனத்தில் கான்ட்ராக்டர், இன்ஜினியர் வேலை, சுகாதாரத்துறையில் செவிலியர் வேலை, கோர்ட்டில் ஓஏ, ஜெஏ பணிகள், ஏர்போர்ட்டில் அதிகாரி வேலை, மின்சார துறையில் ஓஏ, இணை பொறியாளர், இளநிலை பொறியாளர் பணி, அறநிலையத்துறையில் வேலை என்று ஒவ்வொரு அரசு துறைகளிலும் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

 கோர்ட்டில்

கோர்ட்டில்

இப்படியே 60க்கும் மேற்பட்டோரிடம் தலா ரூ.16.32 லட்சம் பணம் பெற்று மோசடி செய்துள்ளனர்.. கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக சொல்லியே 7 பேரை ஏமாற்றி உள்ளனர்.. ரூ.40 லட்சம் வரை அவர்களிடம் மோசடி செய்துள்ளனர்.. பிறகு வேலைவாய்ப்பு நிறுவனம் பெயரில் 60க்கும் மேற்பட்டோரிடம் ரூ.4 கோடிக்கு மேல் பணம் பெற்றுள்ளனர்.. ஒவ்வொரு துறையிலும் இந்த தம்பதி கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதை அறிந்து போலீசார் அதிர்ந்து போனார்கள்.

மோசடி

மோசடி

இதையடுத்து, இவர்களை போலீசார் கைது செய்தனர்.. சசிபிரியாவுக்கு 43 வயதாகிறது.. ரவிச்சந்திரபாபுவுக்கு 51 வயதாகிறது.. இவர்களிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்திய போலி அரசு முத்திரையுடன் கூடிய கடிதங்கள், போலியான பணி நியமன ஆணைகள், 1 லேப்டாப், 10 செல்போன்கள், ஒரு டேப்லெட் பறிமுதல் செய்யப்பட்டது. இப்போது இந்த தம்பதிகள் மீது மேலும் மேலும் புகார்கள் குவிந்து வருகிறதாம்.. இதையடுத்து, 5 நாள் போலீஸ் காவலில் அவர்களை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

English summary
Couple arrested for cheating 4 crore rupees for 60 people in Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X