சிதம்பரம் கோவிலுக்குள் அதிகாரிகளை அனுமதிக்க மறுத்த தீட்சிதர்கள்... நானே வரேன்...கிளம்பிய சேகர்பாபு
சிதம்பரம் நடராஜர் கோவிலில் விசாரணை மேற்கொள்ள சென்ற துணை ஆணையர் தலைமையிலான குழுவை கோவிலுக்குள் அனுமதிக்க தீட்சிதர்கள் மறுத்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள துணை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் நேரடியாக சென்று விசாரணை செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டபூர்வமாக அவர்கள் மீது படி படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற்று வரும் முறைகேடுகள் தொடர்பாக துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த விசாரணைக்கு அங்கு உள்ள தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை ராயப்பேட்டை உள்ள சித்திபுத்தி விநாயகர் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். மேலும் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு கோவில்களை புணரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டு மானிய கோரிக்கையில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள கோவில்களை சீரமைக்க 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நடராஜர் கோவில் விவகாரம்
சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள துணை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் நேரடியாக சென்று விசாரணை செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. மேலும் அதிகாரிகள் ஆய்வு செய்ய மறுக்கப்பட்டு உள்ளதை பதிவு செய்துள்ளோம்.

நேரடி கள ஆய்வு
சட்டபூர்வமாக அவர்கள் மீது படி படியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாத இறுதிக்குள் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆணையருடன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளோம் என அமைச்சர் சேகர்பாபு கூறினார். அமைச்சர் சேகர்பாபுவே நேரடியாக செல்ல உள்ளதால் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் பிரச்சினை பெரிய அளவில் வெடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

பட்டினப்பிரவேசம்
ஆதீன பட்டினப்பிரவேச விவகாரத்தை பொறுத்தவரை, பயத்தின் அடிப்படையில் பட்டினப் பிரவேசம் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆதினங்கள் கோரிக்கைக்கு ஏற்ப அனுமதி வழங்கப்பட்டது. எதிர்காலங்களில் பட்டினப்பிரவேசம் போன்ற நிகழ்வுகளுக்கு சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்.

அனைவருக்குமான அரசு
மனித உரிமை மீறல்கள் இல்லாமல் வரும் காலங்களில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்விஷயத்தில் மேலும் கீ.வீரமணி அவரது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். மற்றபடி உண்மையில் இந்த அரசு ஆத்திகர், நாத்திகர் என அனைவருக்குமான அரசாக உள்ளது. அவ்வளவுதான் என தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications