சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜனநாயகத்தை பாஜக அழித்து வருகிறது.. ஒவ்வொரு இந்தியரும் எச்சரிக்கையாக இருக்கணும்.. ப சிதம்பரம்

Google Oneindia Tamil News

சென்னை: உலகின் மிகப் பெரிய ஜனநாயகமான இந்தியா ஜனநாயகக் குறியீட்டின் உலகளாவிய தரவரிசையில் 10 இடங்கள் குறைந்து விட்டது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.

ஆளும் பாஜக தலைமையிலான அரசாங்கம் ஜனநாயக நிறுவனங்களை பலவீனப்படுத்துவதாகவும் ஜனநாயகத்தை அரிக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.

democracy has been eroded and democratic institutions have been debilitated: Chidambaram

உலகம் முழுவதும் உள்ள 167 நாடுகளின் அரசியல் அமைப்புகள் செயல்படும் விதம் குறித்து ஆய்வு மேற்கொண்டு 019ம் ஆண்டுக்கான பட்டியலை தி இகனாமிஸ்ட் இண்டெலிஜென்ஸ் யூனிட் அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் ஒட்டுமொத்த மதிப்பெண் 2018 இல் 7.23 லிருந்தது. இதில் 2019ல் 6.90 ஆகக் குறைந்தது.

இதன் காரணமாக ஜனநாயகக் குறியீட்டின் உலகளாவிய தரவரிசையில் கடந்த 2018ல் 41வது இடத்தில் இருந்த இந்தியா, பத்து இடங்களைக் குறைத்து 51 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

கூட்டணி தர்மத்துக்காக அமைதியாக இருக்கிறேன்.. ஜெயக்குமாரை நேரில் பார்க்கும் போது.. பொன் ராதா காட்டம்கூட்டணி தர்மத்துக்காக அமைதியாக இருக்கிறேன்.. ஜெயக்குமாரை நேரில் பார்க்கும் போது.. பொன் ராதா காட்டம்

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ப சிதம்பரம், நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் ஜனநாயகம் அழிக்கப்பட்டு பலவீனமடைந்துள்ளது. அதை கவனிப்போருக்கு ஜனநாயகம் எப்படி பலவீனமடைந்துள்ளது என தெரியும் என்றார்.

இநதியா எத்திசை நோக்கி செல்கிறது என்பதை ஒவ்வொரு இந்தியரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் ப சிதம்பரம் தெரிவித்தார்.

English summary
who has closely observed the events of the last two years “knows that democracy has been eroded and democratic institutions have been debilitated”: says P Chidambaram
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X