"ஜாக்கிரதை".. பாஜகவை விடுங்க.. இதான் உங்க ரியாக்‌ஷனா.. வந்தாச்சு WING 2.0.. திமுக டிஆர்பி ராஜா அதிரடி

திமுகவின் ஐடி விங் செயலாளர் டிஆர்பி ராஜா, முதல்வர் ஸ்டாலின் குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொந்த கட்சியான திமுக மீதான, தன்னுடைய வருத்தத்தை வெளிப்படையாகவே பதிவு செய்துள்ளார் அக்கட்சியின் ஐடி பிரிவின் செயலரும் மன்னார்குடி எம்எல்ஏவுமான டிஆர்பி ராஜா.. இதற்கு என்ன காரணம்?

ஒரே வாரத்தில் 2 முறை முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுரை தந்து, கடிதம் எழுதியிருந்தார்.. இந்த கடிதம், எதிர்க்கட்சியினரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த கடிதத்தை பார்த்தால், பொதுமக்களுக்காக அறிவுறுத்தல் போல் தெரியவில்லை, திமுகவினருக்காகவே ஸ்டாலின் தந்த அட்வைஸ் போலுள்ளதாக கிண்டலும், குற்றச்சாட்டுகளும் கிளம்பி உள்ளன. இந்நிலையில்தான், நம் ஒன் இந்தியா தமிழுக்கு, திமுகவின் ஐடி பிரிவின் செயலாளர் டிஆர்பி ராஜா விளக்கம் ஒன்றை தந்துள்ளார்.. அதன் சுருக்கம்தான் இது:

ஜாக்கிரதை

ஜாக்கிரதை

இயல்பு நிலையை ஒப்புக்கொள்ளாவிட்டால் ஒருவர் அரசியல்வாதியாகவே இருக்க முடியாது.. "கவனமாக இருங்க" என்று முதல்வர் திமுகவினருக்கு சொல்வதில் என்ன தவறு? கீழ்த்தரமான எதிரிகள் இருக்கிறார்கள், அதனால் நீங்கள் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்ல வேண்டி உள்ளது. கட்சிக்குள், புதிய ரத்தம் பாய்ச்சப்படும்போது, இளைஞர்கள் ஏராளமாக வந்து சேரும்போது, மாற்று கட்சியில் உள்ளவர்கள் இணையும்போது, அவர்களுக்கெல்லாம் சொல்ல வேண்டியது இருக்கே.. அதனால்தான், தலைவர் அறிவுறுத்துகிறார்.. இதெல்லாம் இப்போது ஒன்றும் நடக்கும் செயல்பாடுகள் இல்லையே..

 பச்சை பச்சை பொய்கள்

பச்சை பச்சை பொய்கள்

ஏமாற்று வேலைகள், பொய் வேலைகள், இல்லாததை இருப்பது போல ஏமாற்றி, இந்த இனத்தையே அழித்தவர்களை எல்லாம் எதிர்த்து நாம் போராடி கொண்டிருக்கிறோம்.. திமுகவுக்கு எதிராக என்ன செய்தார்கள் என்ற வரலாறுகள் ஏற்கனவே தெரியும் என்பதால்தான், இப்படிப்பட்ட அறிவுரைகளை சொல்ல வேண்டி உள்ளது.. 2016-ஐயே எடுத்துக் கொள்ளுங்கள், அந்தம்மா எவ்வளவோ திமுக மீது பொய் சொன்னாங்க.. இந்த இனத்துக்கு, தமிழகத்துக்கு, எல்லாவித நன்மைகளையும் செய்த ஒரே இயக்கம் திமுகதான்.. தலைவர் சொன்னாலும் சிலர் திருந்த மாட்டார்கள்.. ஆனால் தலைவர் மீண்டும் வலியுறுத்துவார்.

 மைனஸாயிடுச்சே

மைனஸாயிடுச்சே

எதிரணியில் நிறைய குற்றச்சாட்டுகள் வைத்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. நாங்களும் பதில் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம்.. இன்னொன்னையும் புரிஞ்சிக்கணும்.. நாங்கள் பதில் சொல்வது அவர்களுக்கு கிடையாது.. மக்களுக்கு சொல்கிறோம்.. திமுகவின் சாதனைகளை தொடர்ந்து மக்களிடம் கொண்ட சென்று சேர்த்து கொண்டே இருக்க வேண்டும்.. பெருமை பிதற்றிக் கொள்ள வேண்டும் என்பார்களே, அதை செய்யாததுதான் பெரிய மைனஸா போயிடுச்சு.. ஒன்னுமே செய்யாமல் பல பேர், என்னென்னமோ செய்ததா கதை விட்டுட்டு இருக்காங்க.. நாம செய்த விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும்.. காரணம், மக்களுக்கு யார் நிறைய செய்தது என்ற போட்டியே இத்தனை நாட்களும் ஓடிக்கொண்டிருந்தது..

 IT WING

IT WING

நாங்கள் தான் நிறைய நலத்திட்டங்களை செய்தோம் என்று அவர்கள் சொன்னால், அவர்களைவிட அதிகமாக செய்து காட்டுவதிலேயே திமுக இருந்துவிட்டதே தவிர, செய்த செயல்திட்டங்களை வெளிக்காட்ட தவறிவிட்டது. திமுகதான் இதை செய்தது என்று வரலாற்றில் பதிவாகி, மக்களுக்கு தெரியும் அளவுக்கு எடுத்து சொல்லவில்லை.. தலைமையும் அதை ஒப்புக் கொள்கிறது.. ஐடி விங் போன்ற அமைப்புகள் வந்ததும் அதற்காகத்தான்.

 விங் 2.0

விங் 2.0

Wing 2.0 என்பது It Wing + Social Media Wing.. இப்போதுதான் சோஷியல் மீடியா விங் என்பதே உருவாகி உள்ளது.. இத்தனை நாளும் சோஷியல் மீடியாவுக்கென்று ஒருவரை மட்டுமே மாவட்ட அளவில் நியமித்திருந்தார்கள்.. இந்த விங் 2.0 என்பது, ஐடி விங் + சோஷியல் மீடியா இவை இரண்டையுமே தனித்தனியாக கவனிக்கிறோம்.. மூன்றாவதாக, ஐடி விங்கிலேயே பெண்கள் துறை வரப்போகிறது.. வீட்டை விட்டு வெளியே வந்து அரசியல் செய்ய முடியாத சூழல் இருந்தால், பொது இடங்களில் நெரிசல் உள்ள இடங்களுக்கு வருவதற்கு தயக்கம் இருந்தால், எங்கிருந்து வேண்டுமானாலும் இருந்து இந்த ஐடி விங் பணியை செய்யலாம்..

 ஆர்எஸ்எஸ்

ஆர்எஸ்எஸ்

ஆனால், எங்களின் நோக்கம் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்பதுதான்.. அதற்கு உறுதுணையாக இந்த பெண்கள் பிரிவு இருக்கும். இதுவரை சில ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள்தான் இருந்தனர்.. 6 மாதத்தில் இப்போது 5 லட்சமாகிவிட்டது.. இன்னும் 2 மாதத்தில் 10 மில்லியன் மாற்றுவதற்கான வேலையில் உள்ளோம்.. இதெல்லாம் நிறைய பேருக்கு தெரியாது.. ஆர்எஸ்எஸ் மட்டும் வீடுவீடாக போகவில்லை.. அதை விட நாங்கள் அதிகமாக செய்து கொண்டிருக்கிறோம்.

 செருப்பு வீச்சு

செருப்பு வீச்சு

பிடிஆர் கார் மீது செருப்பு வீசியதெல்லாம் கீழ்த்தரமான அற்பமான விஷயம்.. பாஜ தவிர வேறு யார் இதுபோன்ற காரியங்களை செய்ய முடியும்? ஆனால், அதற்கான எதிர்வினை என்பது இங்கே குறைவாக இருந்தது.. அந்த சம்பவம் எப்படி நடந்தது என்பதற்கான ஆடியோ லீக்கையும் கேட்டிருப்பீங்க.. அதையெல்லாம் கேட்டும்கூட, ரியாக்ட் செய்யாவிட்டால் எப்படி? நான் அங்கு இருந்து இருந்தால், எதிர்ப்பு வேறு மாதிரி இருந்திருக்கும். ஆவேச பதிலடியை தரவில்லை என்பதை நான் ஏற்கனவே வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறேன்.

சர்வே

சர்வே

விமர்சிப்பதில் ஓவர் நாகரீகம் பார்ப்பது தவறானது.. திமுகவில் அனைவருக்குமே கருத்து சுதந்திரம் உண்டு.. என்னவேண்டுமானாலும் பேசலாம்.. தலைவர் சொல்வதுதான் இறுதி முடிவு என்றாலும், அதற்காக எதை சொன்னாலும் கேட்டுக் கொண்டிருக்கும் இயக்கம் திமுக கிடையாது.. திமுகவின் பலமே அதுதான்.. அனைவருக்குமே தனித்துவம் உள்ளது.. அற்புதமான தொண்டர்கள் கொண்ட இயக்கம் இது.. அதனால்தான் இந்த இயக்கம் இன்றும் சர்வே ஆகிகொண்டிருக்கிறது.. எந்த இயக்கமாவது 13 வருஷமாக எதிரணியில் உட்கார்ந்து சர்வே செய்துவிட முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார் டிஆர்பி ராஜா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+