Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்தால் கல்வி தரம் உயராது.. முதலில் இதை பண்ணுங்க.. தங்கர் பச்சான் ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : 'நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்' திட்டத்தின் மூலம் நிதி பெறுவதால் பள்ளிக்கூடக் கட்டமைப்பு தான் மேம்படும், கல்வியின் தரம் மேம்படாது. அரசு பள்ளிகள் மீது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தாமல் வெறும் பணத்தை மட்டுமே வாங்கி பள்ளியின் தரத்தை உயர்த்த முடியாது. அதனால் தமிழக அரசு, அரசு ஊதியம் வாங்கும் அமைச்சர், நீதிபதி, காவல்துறையினர் என அனைவரும் அவர்களது அடுத்த தலைமுறையினரை அரசு பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான்.

முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து, அந்த பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க 'நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்' என்ற திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ளது. சமீபத்தில், இத்திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்து, தனது சார்பாக ரூ. 5 லட்சம் நிதியையும் வழங்கினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கி வைத்த 'நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்' திட்டம் குறித்து அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

கட்டமைப்பு தான் மேம்படும்

கட்டமைப்பு தான் மேம்படும்

அந்த வகையில் இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான் 'நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்' திட்டம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். தங்கர் பச்சான் இயக்கிய 'பள்ளிக்கூடம்' திரைப்படத்தில் முன்னாள் மாணவர்கள் இணைந்து பள்ளிக்கூடத்தை மேம்படுத்துவதாக காட்சிகள் இடம்பெற்றன. 'நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்' திட்டம் பற்றி தங்கர் பச்சான் கூறுகையில், "அரசுப் பள்ளிகளை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு எடுத்த முயற்சி இந்தத் திட்டம். செல்வம் உடையவர்கள், பெரிய வணிகர்கள் இந்தத் திட்டத்துக்கு பணம் தந்து உதவுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அப்படி பண உதவி கொடுத்தால் தரமான மேஜை, தரமான நாற்காலி, பெரிய கட்டடங்கள் என பள்ளிக்கூடக் கட்டமைப்பு தான் மேம்படும். பள்ளிக்கல்வி ஒரு தரமாக மேம்படாது.

மக்களுக்கு நம்பிக்கை இல்லை

மக்களுக்கு நம்பிக்கை இல்லை

மக்களுக்கு பள்ளிகள் மீது என்ன சிக்கல் என்றால், அரசு பள்ளிகள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. எப்போது தமிழை மறந்து வேறு மொழியின் ஆதிக்கம் வந்ததோ, அப்போதே நம்முடைய தமிழ் மொழிக் கல்வி மறைந்துவிட்டது. அதனால், மக்கள் தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். எனவே, வேலைவாய்ப்பில் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கே அரசு கல்லூரிகளிலும் முன்னுரிமை வேண்டும். இப்படி ஒரு சட்டத்தை அரசு அறிவித்தால் தான் அரசு பள்ளிகளின் தரம் உயரும். இதன் மூலம் மக்களும் நம்பிக்கையோடு ஆர்வம் காட்ட ஆரம்பித்து விடுவார்கள்.

தரம் உயராது

தரம் உயராது

இதைச் செய்யாமல் வெறும் பணத்தை மட்டுமே வாங்கி பள்ளியின் தரத்தை உயர்த்த முடியாது. அரசு, மக்களுக்கான கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொடுக்க வேண்டும். எந்த ஒரு அமைச்சரோ, ஆளுநரோ அல்லது முதலமைச்சரோ உடல்நிலை சரியில்லாத போது எங்கே போகிறார்கள்? அரசு மருத்துவமனைக்கா செல்கிறார்கள்? முதலில் தனியார் மருத்துவமனைக்கு தான் செல்கிறார்கள். இதுவரை இருந்த எல்லா முதல்வர்களும் அப்படித்தான். இதைப் பார்க்கையில் அரசு மருத்துவமனைகள் எதற்காக நடத்தப்படுகிறது.. அதனால் அவர்கள் முதலில் அரசு மருத்துவமனைக்கு வரவேண்டும். இதன் மூலம் அரசு மருத்துவமனையின் தரம் தானாக உயரும். அதே போலத்தான் நமது பள்ளிகளும்.

சட்டம் கொண்டு வாங்க

சட்டம் கொண்டு வாங்க

அறிஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் எனப் பலர் அரசுப் பள்ளிகளில் படித்து முன்னேறி இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஒரு வழிகாட்டியாக இருந்துள்ளார்கள். அதனால் தமிழக அரசு, அரசு ஊதியம் வாங்கும் அமைச்சர், நீதிபதி, காவல்துறையினர் என அனைவரும் அவர்களது அடுத்த தலைமுறையினரை அரசு பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வரவேண்டும். அந்தச் சட்டம் தான் சரியானதாக இருக்கும். மேலும், அரசு அதிகாரிகள் மக்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, காசு கொடுங்கள் என்றால் உயராது. இதனை 'பள்ளிக்கூடம்' திரைப்படம் எப்போதோ செய்துவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+