மணி பிளாண்ட்டை விட சக்தியா? காந்தம் போல பணத்தை ஈர்க்கும் லக்கி பாம்பு செடி.. வாஸ்து ஷாக்கிங் ரகசியம்
சென்னை: வீட்டின் வரவேற்பறையில் ஒரு சிறிய கண்ணாடி ஜாடியில் பச்சை பசேலென சுருள் சுருளாக வளர்ந்து நிற்கும் அந்தச் செடியை நீங்கள் பார்த்திருக்கலாம்.. பார்ப்பதற்கு பாம்பு போலவே வளைந்து நெளிந்து காணப்படுவதால் இதற்கு "லக்கி பாம்பு" அல்லது "லக்கி மூங்கில்" என்று பெயர் வந்தது.. ,இந்த செடியை வீட்டில் வளர்ப்பதால் வரும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
பொதுவாக செடி வளர்ப்பது என்பது ஒரு கலை, ஆனால் இந்த லக்கி பாம்பு செடியை வளர்ப்பது என்பது ஒரு நம்பிக்கை சார்ந்த விஷயமாக இன்று பல வீடுகளில் மாறிவிட்டது..

வாஸ்து பலன்கள்
ஃபெங் ஷூய் மற்றும் வாஸ்து சாஸ்திரப்படி இந்தச் செடி ஒரு வீட்டின் அதிர்ஷ்டத்தை மாற்றும் சக்தி கொண்டது என்று நம்பப்படுகிறது.. வீட்டின் உள்ளே இருக்கும் கெட்ட ஆற்றலை நீக்கிவிட்டு, நேர்மறையான நல்ல எண்ணங்களை இது உருவாக்கும் என்பதால் மக்கள் இதை அதிகம் விரும்புகிறார்கள்..
இந்த லக்கி பாம்பு செடியைப் பொறுத்தவரை அதில் இருக்கும் தண்டுகளின் எண்ணிக்கைதான் மிக முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.. எத்தனை தண்டு இருக்கிறதோ அதற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும் என்பது மக்களின் ஆழமான நம்பிக்கையாகும்.
லக்கி பாம்பு செடி
உதாரணமாக, உங்கள் செடியில் 3 தண்டுகள் இருந்தால் அந்த வீட்டில் மகிழ்ச்சியும் குடும்ப அமைதியும் குடிகொள்ளும் என்று சொல்லப்படுகிறது.. அதுவே 5 தண்டுகள் இருக்கும் பட்சத்தில் அந்த வீட்டில் செல்வம் பெருகும் மற்றும் பண வரவு அதிகரிக்கும் என்பது ஐதீகம்.. நல்ல அதிர்ஷ்டம் தேடி வர வேண்டும் என்று நினைப்பவர்கள் 6 தண்டுகள் கொண்ட செடியை வளர்க்கிறார்கள்.
அதேபோல் உடல் ஆரோக்கியம் மிக முக்கியம் என்று கருதுபவர்கள் 7 தண்டுகள் கொண்ட செடியை தேர்வு செய்கின்றனர்.. இவ்வாறு ஒவ்வொரு தண்டு எண்ணிக்கைக்கும் பின்னால் ஒரு சுவாரஸ்யமான காரணம் ஒளிந்துள்ளது..
வாஸ்து டிப்ஸ்
வாஸ்து சாஸ்திரப்படி இந்தச் செடியை வீட்டின் எந்தப் பகுதியில் வைக்கிறோம் என்பதும் மிக முக்கியம்.. பொதுவாக கிழக்கு திசை அல்லது தென்கிழக்கு திசையில் இந்தச் செடியை வைப்பதுதான் சிறந்தது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.. இந்த திசைகள்தான் ஒரு குடும்பத்தின் வளர்ச்சி மற்றும் செல்வத்தோடு தொடர்புடையவை.
இதனால்தான் பலரும் தங்கள் வீட்டின் ஹால் பகுதியிலோ அல்லது பணம் வைக்கும் பெட்டிக்கு அருகிலோ இந்தச் செடியை வைத்து வளர்க்கின்றனர்.. செடி பசுமையாக வளர வளர வீட்டின் செல்வமும் வளரும் என்பது ஒரு அழகான நம்பிக்கை..
பணம், செல்வம் பெருக
இன்றைய காலத்தில் நகரங்களில் வசிக்கும் பலருக்கும் இந்தச் செடி ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.. இதற்கு அதிக மண் தேவையில்லை, சிறிய கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தால் போதும்.. அவ்வப்போது தண்ணீரை மட்டும் மாற்றினால் இது நீண்ட நாட்களுக்கு வாடாமல் பசுமையாக இருக்கும். பராமரிப்பது மிகவும் எளிது என்பதால் பலரும் இதை ஒரு அலங்காரப் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும், இந்தச் செடியை வைத்தவுடன் திடீரென வானத்திலிருந்து பணம் கொட்டும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை கிடையாது.. இது முழுக்க முழுக்க மக்களின் நம்பிக்கை மற்றும் அவர்களுக்குத் தரும் மனநிறைவு சார்ந்த விஷயம் மட்டுமே..
பாம்பு செடி அதிர்ஷ்டம்
முடிவாக சொல்லப்போனால், லக்கி பாம்பு செடி என்பது ஒரு அழகான இயற்கை அலங்காரம் என்பதில் சந்தேகமில்லை.. அதே நேரத்தில் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ள விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல அடையாளமாக இருக்கிறது.
நீங்கள் நம்பிக்கையோடு ஒரு விஷயத்தைச் செய்யும்போது அது உங்களுக்கு நல்ல பலனைத் தரும் என்பார்கள், அந்த வகையில் இந்த லக்கி பாம்பு செடியும் பலரது வாழ்க்கையில் ஒரு நம்பிக்கைக் கதிராகவே பார்க்கப்படுகிறது.. உங்கள் வீட்டிற்கு அழகு சேர்க்கவும், அதே சமயம் ஒரு நல்ல அதிர்ஷ்டத்தை வரவேற்கவும் இந்தச் செடியை வளர்ப்பதில் எந்தத் தவறும் இல்லை..!!
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications