Premalatha: 20+1 கேட்கும் தேமுதிக! கறார் காட்டும் திமுக! பிரேமலதாவிடம் கனிமொழி போனில் பேசினாரா?
சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்துடன், திமுக துணை பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு கனிமொழி மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வது, தொகுதி பங்கீடு, பூத் கமிட்டி அமைப்பது, பிரச்சாரங்களை திட்டமிடுவது உள்ளிட்ட பணிகளில் ஜரூராக நடந்து வருகிறது.

திமுக கூட்டணியில் அங்கம் வகித்திருக்கும் காங்கிரஸ் கட்சியில் உள்ள சில நிர்வாகிகள், அமைச்சர் பதவியை கேட்டு மல்லுகட்டி வருகிறார்கள். கூட்டணி குறித்து யாரும் பொது வெளியில் பேசக் கூடாது என டெல்லி காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியும் அதே நிலைதான் தொடர்கிறது.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறதா என்ற கேள்விக்கு தமிழக காங்கிரஸ் தேர்தல் மேலிட பொறுப்பாளர் கிரீஷ், இதை திமுகதான் அறிவிக்க வேண்டும். அப்போதுதான் பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை திமுக நிர்வாகி தளபதி கடுமையாக விமர்சித்ததை தொடர்ந்து தற்போது இரு தரப்பிடையே மோதல் போக்கு ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில்தான் நேற்று முன் தினம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை திமுக எம்பி கனிமொழி நேரில் சந்தித்து பேசியிருந்தார்.
அப்போது இருவரும் கூட்டணி குறித்தும், தமிழக அரசியல் குறித்தும் பேசியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திமுகவிடம் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
அதிலும் பிரேமலதா விஜயகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கனிமொழி, கூட்டணி குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. ஆனால் திமுகவாக இருந்தாலும் சரி என்டிஏ கூட்டணியாக இருந்தாலும் சரி 15 முதல் 20 சட்டசபை தொகுதிகள் + 1 ராஜ்யசபா சீட் வேண்டும் என கேட்டு பிடிவாதம் பிடிக்கிறாராம்.
ஆனால் திமுகவோ 5 இடங்களை மட்டுமே தேமுதிகவுக்கு ஒதுக்க முடியும் என்கிறார்கள். 5 என்பது மிஞ்சி போனால் 6 வரை செல்லலாம் என்றும் இரட்டை இலக்கத்திற்கு வாய்ப்பே இல்லை என்றும் சொல்லப்படுகிறது. மேலும் ராஜ்யசபா சீட்டெல்லாம் வாய்ப்பே இல்லை என சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது.
எனவே 5 அல்லது 6 சீட்டுகளுக்கு தேமுதிக ஓகே சொன்னால் மேற்கொண்டு பேச்சு நடத்தப்படும். இல்லாவிட்டால் தேமுதிகவை லேசில் விட்டுவிடலாம் என திமுக தரப்பு முடிவு செய்துள்ளதாம்.
இந்த நிலையில் பிரேமலதாவுடன் பேச்சுவார்த்தை குறித்து கனிமொழியிடம் கேட்ட போது அவர் மறுத்துள்ளார். தான் யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் தலைவர் ஸ்டாலின் அது குறித்து அறிவிப்பார் என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார். எனவே தேமுதிக பிரேமலதாவின் பிடிவாதத்தால் சரியான கூட்டணி அமைத்து வெற்றிவாய்ப்பின்மை தேமுதிகவுக்கு இல்லாமல் போய்விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
Rs 8000: மாற்றி யோசித்த கனிமொழி! ரூ 8000 கூப்பன் எப்படி செயல்படுத்தப்படும் என விளக்கம்! -
"தேமுதிக அங்கீகாரம் இல்லாத கட்சியா?".. எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா பதிலடி! -
விஜயகாந்தின் வலதுகரத்திற்கே சீட் இல்லையா.. தேமுதிகவில் புதிய பஞ்சாயத்து -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்!












Click it and Unblock the Notifications