திமுக, அதிமுக.. ராஜ்யசபா சீட்டிற்கு இருவரும் ஒப்புக்கொண்டனர்.. பிரேமலதா விஜயகாந்த் சொன்ன மேட்டர்
சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை இதுவரை அறிவிக்கவில்லை. இதற்கிடையே கூட்டணிக்காக ராஜ்யசபா சீட்டை தேமுதிக கேட்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழலில் இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளரான பிரேமலதா விஜயகாந்த் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். மேலும், இரு தரப்புமே ராஜ்யசபா சீட் தர ஒப்புக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் சீக்கிரம் நடைபெறுகிறது. சில வாரங்களில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. பல்வேறு கட்சிகளும் வரிசையாகத் தங்கள் கூட்டணியை இறுதி செய்து வருகின்றன. இருப்பினும், தேமுதிக சார்பில் இதுவரை கூட்டணி சார்ந்து எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் அக்கட்சித் தொண்டர்கள் கூட்டணி முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

பிரேமலதா விஜயகாந்த்
இதற்கிடையே தேமுதிக சார்பில் இன்று முதல் விருப்பமனு விநியோகம் செய்யப்படுகிறது. வரும் பிப்ரவரி 12ம் தேதி வரை விருப்பமனு விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடுவே கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தேமுதிக ராஜ்ய சபா சீட் தொடர்பாகக் கோரிக்கை வைப்பதாகத் தகவல் வெளியானது. இதற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளரான பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார். மேலும், கூட்டணி குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் உறுதியளித்தார்.
ராஜ்யசபா சீட்
இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், அதிமுக கூட்டணியில் இணைய ராஜ்ய சபா சீட் தொடர்பாகக் கோரிக்கை முன்வைக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு, "அது முந்தைய தேர்தலின் தொகுதிப் பங்கீட்டில் எடுக்கப்பட்ட முடிவு.. 2024 லோக்சபா தேர்தலில் எங்களுக்கு 5 லோக்சபா இடங்கள், ஒரு ராஜ்யசபா இடத்தைத் தருவதாக உறுதியளித்தார்கள். அந்தக் கூட்டணி ஒப்பந்தத்தை தான் அதிமுக தலைமை எங்களுக்குக் கொடுத்தது. ஆனால், கடைசி நேரத்தில் 2025ல் ராஜ்யசபா சீட் தர முடியாது. 2026ல் தான் தர முடியும் எனச் சொன்னார்கள்.
அதிமுகவை நம்பினேன்
தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் இறுதியானபோதே, ராஜ்யசபா சீட் வருடம் குறிப்பிடவில்லையே என நான் கேட்டேன். அதற்கு அதிமுக தலைமை அது தங்கள் கட்சியின் பழக்கம் இல்லை என்றார். ராஜ்யசபா சீட் என மட்டுமே ஒப்பந்தம் போடுவோம்.. வருடத்தை எப்போதும் குறிப்பிட மாட்டோம் என அவர் சொன்னார். மேலும், எனது வார்த்தையை நீங்கள் நம்பலாம்.. லெட்டரை விட எனது வார்த்தைக்கு பவர் அதிகம் என்றெல்லாம் அப்போது சொன்னார். எனவே, அவரை அப்போது நான் நம்பினேன்.. ஆனால், திடீரென 2025ல் முடியாது.. 2026ல் தான் தர முடியும் என்றார்.
இருவருமே ராஜ்யசபா சீட்டிற்கு ஒப்புக்கொண்டனர்
சரி, பரவாயில்லை என நானும் விட்டுவிட்டேன். இப்போது நாங்கள் ராஜ்யசபா சீட்டை மனதில் வைத்து எதையும் கேட்கவில்லை. அது முடிந்துவிட்டது. அது போன தேர்தல் தொடர்பானது. இப்போது நாங்கள் சட்டசபைத் தேர்தலைத் தான் எதிர்கொள்கிறோம். சட்டசபைத் தேர்தலுக்குத் தான் கவனம் செலுத்தி வருகிறோம். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!
அதேநேரம் இப்போது இரு கூட்டணிகளுமே சட்டசபை இடங்களுடன் ராஜ்யசபா இடங்களையும் தருவதாகவே சொல்கிறார்கள். நாங்கள் ஆலோசனை செய்து இறுதி முடிவு எடுப்போம்.. யாருடன் கூட்டணி, எத்தனை இடங்கள் எல்லாம் இறுதியானவுடன் நானே அது தொடர்பாக அறிவிப்பேன்." என்றார்.
-
அமர், வினோஜ், சூர்யா.. அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் சீட் இல்லை.. பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி -
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
இவங்க ஜெயிச்சா அவங்கதான் CM.. வேடசந்தூர் டூ ராமநாதபுரம்! இந்த 4 இடத்தை மட்டும் கவனிங்க! ஏன் தெரியுமா -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
Election-லிருந்து Escape சரி! 3000000 ரூபாயை எப்போ திருப்பி தருவீங்க கமல்? எதிர்ப்பார்ப்பில் மநீம -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
என்னது திமுகவுக்கு வாழ்த்தா? பெரம்பலூர் நாம் தமிழர் வேட்பாளரை மாற்றிய சீமான்.. என்ன நடந்தது? -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங்











Click it and Unblock the Notifications