கருணாஸ் கட்சியும், நாங்களும் ஒன்னா.. கொதிக்கும் வேல்முருகன்.. திமுக கூட்டணியில் தொடர்வாரா?
சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி இம்முறை அதிக இடங்களில் போட்டியிட தொகுதிகள் ஒதுக்கிடாவிட்டால், கூட்டணியை விட்டு வெளியேற முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கருணாஸ் கட்சிக்கும் ஒரு தொகுதி, தங்களுக்கும் ஒரு தொகுதியா என்று தவாகவினர் முனுமுனுக்க தொடங்கி இருக்கின்றனர்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிட்ட சூழலில், திமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு இன்னும் அமைக்கப்படவில்லை. இருப்பினும் பல்வேறு கட்சிகளுடனும் திமுக சீனியர்கள் பிரத்யேகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விசிக, மதிமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி இறுதியாகிவிட்ட நிலையில், இன்னும் தொகுதிகள் பங்கீடு குறித்து மட்டும் ஆலோசனை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இந்த திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம், கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை, தமீமுன் அன்சாரி, தனியரசு, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். அதேபோல் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை கடைசி கட்டத்தில் இருக்கிறது. இதனால் திமுக தலைமை எப்படி தொகுதிகளை ஒதுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கோரி வருகின்றனர். அதேபோல் காங்கிரஸ் கட்சியும் 38ல் இருந்து 41 தொகுதிகள் வரை கேட்டு வருகிறது. ஆனால் திமுக தரப்பிலோ 28 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று பிடிவாதமாக உள்ளது. மறுபக்கம் விசிக, சிபிஐ மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகளுக்கு 7 தொகுதிகள் வரை ஒதுக்க முன் வந்துள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
அதேபோல் மதிமுக சொந்த சின்னத்தில் போட்டியிடும் முடிவில் இருப்பதால், தொகுதிகளை குறைக்க பேசி வருகிறது. அதேபோல் தமிழக வாழ்வுரிமை கட்சியிடம் கடந்த முறை கொடுக்கப்பட்ட அதே தொகுதி எண்ணிக்கையை வாங்கி கொள்ளுங்கள் என்று பேசி வருகிறது. இதனால் தவெக தலைவர் வேல்முருகன் உட்பட அக்கட்சியின் நிர்வாகிகள் கொந்தளிக்க தொடங்கியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் கருணாஸ், தமீமுன் அன்சாரி, தனியரசு உள்ளிட்ட தரப்பும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயாராகி வருகின்றனர். இதனால் தவாகா வேல்முருகன் தரப்பு ஆதரவாளர்கள் கட்சி ரீதியாகவும், கட்டமைப்பு ரீதியாகவும் வளர்ந்திருக்கிறோம்.. கருணாஸ் கட்சியும் நாங்களும் ஒன்றா என்று கேள்வி எழுப்பி தொடங்கி இருக்கின்றனர்.
இதனால் தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த முறையை காட்டிலும் இம்முறை கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்றால், கூட்டணியை விட்டு வெளியேறும் முடிவில் வேல்முருகன் தரப்பு இருப்பதாக விவரம் அறிந்த சிலர் கூறுகின்றனர்.
-
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!











Click it and Unblock the Notifications