விடாமல் சீண்டும் பாஜக.. உற்று கவனித்த திமுக ‘தலை’ மீண்டும் களத்தில்- அதிரடி மூவ்! தேதி குறிச்சாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை : இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தி திணிப்புக்கு எதிராக கடந்த அக்டோபர் 14ஆம் தேதி திமுக இளைஞரணி, மாணவரணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், அதனை எதிர்த்து பாஜக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.

திமுக தமிழை புறக்கணித்து விட்டதாகவும், இந்தி திணிப்பு எதிர்ப்பு என நாடகம் போடுவதாகவும் விமர்சித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது பாஜக.

இந்நிலையில், விரைவில் இந்தி திணிப்பை எதிர்த்து பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட இருப்பதாகவும், முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுவார் என்றும் அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இந்தி திணிப்பு

இந்தி திணிப்பு

மத்திய பாஜக அரசின் இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிராக திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், திமுக எம்.பி தயாநிதி மாறன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், இந்தி திணிப்புக்கு எதிரான முழுக்கங்கள் எழுப்பப்பட்டன.

இப்போது வெறும் ஆர்ப்பாட்டம்

இப்போது வெறும் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, "திமுகவின் முக்கியமான கொள்கை இந்தி எதிர்ப்பு, இந்தி திணிப்பை எப்போதும் எதிர்ப்போம். அதிலிருந்து நாங்கள் சற்றும் விலகமாட்டோம். விட்டுக் கொடுக்கமாட்டோம். அது எங்கள் மாநில உரிமை. இப்போது வெறும் ஆர்ப்பாட்டம்தான் நடத்தியிருக்கிறோம். இதை போராட்டமாக மாற்றுவதா வேண்டாமா என்பது உங்கள் கையில்தான் உள்ளது. மோடி அவர்களே, அமித்ஷா அவர்களே முன்புபோல இங்கு நடந்து கொண்டிருப்பது அதிமுக ஆட்சி இல்லை. இப்போது முதல்வராக இருப்பவர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்" எனப் பேசினார்.

தீர்மானம்

தீர்மானம்

மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றியது திமுக அரசு. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழுவின் பரிந்துரைகளை ஏற்கக்கூடாது, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி அக்டோபர் 18 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அண்ணாமலை விமர்சனம்

அண்ணாமலை விமர்சனம்

இந்நிலையில், திமுகவின் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பாஜகவும் ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது. திமுகவின் இந்தி திணிப்பு என்பது கபட நாடகம், திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் கூட தமிழ் கட்டாயம் இல்லை, இந்திக்கு எதிராக போராட்டம் நடத்தும் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் இந்தி படத்தை விற்பனை செய்வதற்காக, இந்தி நடிகைகளை கொண்டு வருகிறார், இந்தி படத்தை தான் பார்க்க வேண்டும் என தமிழக மக்களிடைம் இந்தியை திணிப்பது உதயநிதி ஸ்டாலின் தான் என்றெல்லாம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்தார்.

தமிழை அழித்து ஆங்கிலம்

தமிழை அழித்து ஆங்கிலம்

கடலூரில் இன்று நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது பேசிய அண்ணாமலை, இறை நம்பிக்கைகளை ஊட்டும் மொழி தமிழ், கடவுள் நம்பிக்கையை மறுத்து ஆட்சிக்கு வரவேண்டும் என்றால், அதற்கு தமிழை மறுக்க வேண்டும். தமிழை இல்லை என்ற நிலைக்கு உள்ளாக்க வேண்டும். அதற்காகவே திமுக தெளிவாக ஆங்கிலத்தை புகுத்த ஆரம்பித்தது, இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் ஆங்கிலத்தை வேண்டும் என்றுதான் கேட்கிறார்கள் எனப் பேசியுள்ளார்.

ஸ்டாலின் திட்டம்

ஸ்டாலின் திட்டம்

இந்தி திணிப்பு விவகாரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியதற்குப் போட்டியாக பாஜகவினர், திமுக அரசு தமிழை புறக்கணிப்பதாக பிரச்சாரம் செய்து வருவது, ஆர்ப்பாட்டம் நடத்துவது ஆகிய நடவடிக்கைகளை தொடர்ந்து கவனித்து வரும் திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் இதுபற்றி முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். பாஜகவினரின் பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில் இன்னும் பெரிய அளவில் இந்தி திணிப்புக்கு எதிராக களமாட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 அறிவாலய தகவல்

அறிவாலய தகவல்

அதன்படி, இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் நவம்பர் 4ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்பை எதிர்த்து பொதுக்கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலினும் இந்தப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவார் என்றும் அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+