கறார் கனிமொழி.. ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு.. என்னவாகும் திமுக காங்கிரஸ் கூட்டணி
சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. 4 முனை போட்டியால் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணியில் பனிப்போர் நிலவி வருகிறது. கூட்டணி தொடர்பாக ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவுகளை கறார் மொழியில் கனிமொழி சொன்னதை கேட்டு காங்கிரஸ் அதிர்ந்து போயுள்ளதாம்.
2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாட்டில் முதல் ஆளாக கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைத்தது காங்கிரஸ் கட்சி தான். ஆட்சியில், பங்கு அதிகாரத்தில் பங்கு என்று காங்கிரஸ் சைலன்டாக தர்மயுத்தம் நடத்தினார்கள். தவெகவுக்கு ஆதரவாகவும், திமுகவுக்கு எதிரான கருத்துகளையும் காங்கிரஸ் கட்சியில் சிலர் கருத்து கூறி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சி மதில் மேல் பூனையாக உள்ளது.

திமுக காங்கிரஸ் கூட்டணி
திமுக விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவை அமைக்க வேண்டும். எங்கள் தொண்டர்கள் வேதனையில் இருக்கிறார்கள் என்று காங்கிரஸ் கூறியிருந்தது. ஒரு வழியாக திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவை உருவாக்கிவிட்டது. தங்கள் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியுடனும் திமுக நேரடியாக பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. தொகுதி பங்கீடு, சின்னம் உள்ளிட்ட பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது வருகிறது.
ஆனால் குழுவை உருவாக்குங்கள் என்று சொன்ன காங்கிரஸ் நேரடியாக திமுக மேலிடத்திடம் பேச தொடங்கியுள்ளது. முதலமைச்சர் மு.க ஸ்டாலினை, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் சந்தித்தார். அதேபோல திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் சந்தித்து பேசியுள்ளார்.
ஸ்டாலின் அதிரடி முடிவு
அப்போது காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகளை சோடங்கர் கனிமொழியிடம் வலியுறுத்தியுள்ளார். இதற்கு திமுகவின் நிலைப்பாடு குறித்து கனிமொழி ஸ்ட்ரிக்டாக பதில் அளித்துவிட்டாராம். 2021 சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதே காங்கிரஸ் தற்போது, திமுக கூட்டணியில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தலா ஒரு சட்டமன்ற தொகுதி என 39 தொகுதிகளை கேட்கிறதாம்.
அதனுடன் ராஜ்யசபா தொகுதியையும் கேட்கிறார்களாம். ஆட்சியில் பங்கு ஒத்துவராது என முதலமைச்சர் ஸ்டாலினே நேரடியாக சொல்லிவிட்டதால் அந்த கோரிக்கையை காங்கிரஸ் கைவிட்டுவிட்டதாக தெரிகிறது. அதேநேரத்தில் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்களாம். இருப்பினும் திமுக தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்களாம்.
கனிமொழி கறார்
"காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை போல, இப்போதும் 25 தொகுதிகள் தான் ஒதுக்க முடியும். மாநிலங்களவை பற்றி பரிசீலிக்கிறோம். கூட்டணியில் புதிதாக மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. அவர்களுக்கும் நாங்கள் தொகுதிகளை ஒதுக்க வேண்டும். எனவே நீங்கள் கேட்கும் தொகுதிகளை கொடுக்க முடியாது" என்று ஸ்டாலின் சொல்லியுள்ளதாக கனிமொழி கறாராக கூறிவிட்டாராம்.
இதைக் கேட்ட சோடங்கர் அதிர்ச்சியாகியுள்ளார். வேண்டுமென்றால் 2-3 தொகுதிகள் கூடுதலாக வழங்கலாம். ஆனால் 39 தொகுதிகள் வாய்ப்பே இல்லை என சொல்லிவிட்டார்களாம். இனி காங்கிரஸ் கட்சி தான் இறுதி முடிவை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியில் சிலர் தவெகவுடன் கூட்டணி வைக்க ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
தீராத "கேரளா" தலைவலி.. வென்றாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது! என்ன செய்ய போகிறார் ராகுல்?












Click it and Unblock the Notifications