சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிளான் 1996.. சர்வேக்களை லெப்ட் ஹேண்டில் ஒதுக்கி தள்ளிய திமுக.. ப்பா.. ஸ்டாலினின் திட்டமே வேறயாம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக வெளியாகி இருக்கும் கருத்து கணிப்புகள் எதையும் திமுக பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்கிறார்கள். தொடர்ந்து வெளியாகும் கருத்து கணிப்புகள் பற்றி திமுக நிர்வாகிகளுக்கும் முக்கியமான மெசேஜ் ஒன்றை ஸ்டாலின் அனுப்பியதாக கூறுகிறார்கள்.

நிறைய கருத்து கணிப்பு இப்படித்தான் வரும்.. 2016ல் கூட இப்படித்தான் வந்தது. இதை எல்லாம் தலையில் ஏத்திக்காம வேலை பாருங்க.. தேர்தல் வேலைகள்தான் முக்கியம். கருத்துக் கணிப்புகளை பார்த்து மிதக்க வேண்டாம்.. இதுதான் திமுக தலைவர் ஸ்டாலின் முக்கியமான நிர்வாகிகளிடம் சில நாட்களுக்கு முன் சொன்ன விஷயம்.

சில வடஇந்திய ஊடகங்கள் தமிழக தேர்தல் குறித்து சர்வே வெளியிட்ட போது திமுக தலைவர் ஸ்டாலின் இப்படி கூறினாராம். தேர்தல் தொடர்பாக வெளியாகும் சர்வே எதையும் திமுக பெரிய அளவில் நம்பவில்லை என்கிறார்கள்.. இதற்கு பின் சிறப்பான காரணம் ஒன்று இருக்கிறது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இதுவரை வெளியான பல்வேறு கருத்து கணிப்புகளின்படி திமுக சராசரியாக 150-160 இடங்களை வெல்லும் என்றே கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட எல்லா கருத்து கணிப்புகளும் 160 இடங்கள் வரை திமுக வெல்லும் என்றே கூறியுள்ளன. ஆனால் இவ்வளவு பாசிட்டிவாக கணிப்புகள் வந்தாலும் அது திமுக காதில் வாங்கிகொள்ளவில்லை. கணிப்புகள் அனைத்தையும் லெப்ட் ஹேண்டில்தான் திமுக டீல் செய்து கொண்டு இருக்கிறது.

கணிப்புகள்

கணிப்புகள்

இப்படி பலர் கருத்து கணிப்புகளை சொல்வார்கள்.. 2016 இதை எல்லாம் நம்பித்தான் ஏமாந்தோம்.. இனியும் இதை நம்ப மாட்டோம் என்று திமுக நிர்வாகிகள் பலர் கணிப்புகளுக்கு எதிராக பேசுகிறார்கள். திமுக வெல்வதாக கணிப்புகள் சொல்வது உண்மைதான். ஆனால் அதற்காக நாங்கள் அசட்டையாக இருந்துவிட முடியாது, தொடர்ந்து தீவிரமாக பணியாற்றுவோம் என்று நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

நம்பிக்கை

நம்பிக்கை

அதோடு திமுக தலைவர் ஸ்டாலினின் திட்டமே வேறு என்றும் உடன்பிறப்புகள் சிலர் நம்மிடம் தகவல் தெரிவித்துள்ளனர். ஸ்டாலினின் நம்பிக்கைப்படி 160 இடங்கள் என்பது மிகவும் குறைவு. திமுக கூட்டணி 200-210 இடங்கள் வரை வெல்லும். 1996ல் திமுக கூட்டணி 221 இடங்களில் வென்றது. அதை மீண்டும் திமுக செய்யும்.

திமுக வெற்றி

திமுக வெற்றி

அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற விடாமல் செய்வதே ஸ்டாலினின் பிளான். திமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டது ஆனால் 200+ என்பதுதான் இப்போது இலக்கு என்று திமுக நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். இதுவரை வெளியான கணிப்புகள் எல்லாம் திமுகவின் வெற்றியை குறைத்து காட்டும் வகையிலேயே உள்ளது. உண்மையாக இதைவிட அதிக இடங்களை திமுக வெல்லும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

வாய்ப்பு

வாய்ப்பு

லோக்சபா தேர்தலில் திமுக 20-30 இடங்களை வெல்லும் என்றார்கள். ஆனால் நாங்கள ஒரு தொகுதி தவிர அனைத்திலும் வென்றும். அப்போது கருத்து கணிப்பை மிஞ்சி அபார வெற்றியை பெற்றோம். அதேபோல்தான் மீண்டும் வெல்வோம். கணிப்புகளை பொய்யாக்கி 200+ வெல்வதே எங்கள் இலக்கு என்று திமுக தரப்பு தெரிவிக்கிறது.

சந்தோசம்

சந்தோசம்

இதனால்தான் கருத்து கணிப்பு எதையும் பார்த்து மேல்மட்ட நிர்வாகிகள் சந்தோசம் அடையவில்லை . வெற்றிக்கு முன்பே கொண்டாட கூடாது.இப்போது தேர்தல் வேலைகளை பார்ப்போம். முடிவு தானாக சாதகமாக வரும் என்று தலைமையிடம் இருந்து நிர்வாகிகளுக்கு மெசேஜ் சென்றுள்ளதாம்.

English summary
Tamilnadu Assembly Election: DMK is expecting more seats on the result day than the pre-election survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X