• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ரேஷன் கடைப் பக்கம் போனீங்களா.. திமுககாரங்க சுத்திட்டு இருக்காங்களாமே.. ஏன் தெரியுமா?

|

சென்னை: திமுகவினர் ரேஷன் கடைகளாக பார்த்து சுத்திட்டு இருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.. இதற்கு காரணம், ஆன்லைன் வழியாக ஆள் சேர்ப்பதற்குதான் என்றும் சொல்லப்படுகிறது.

"எல்லோரும் நம்முடன்" என்ற தலைப்பில் திமுக இணையவழி உறுப்பினர் சேர்க்கையை மேற்கொண்டு வருகிறது... இது ஓரளவு வெற்றியும் தந்து வருகிறது.. இந்த திட்டம் ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே புதியதாக 2,93,355 பேர் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

அதேசமயம், பல சர்ச்சைகளையும் இது ஏற்படுத்தியது.. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் பெயரில் ஆன்லைன் உறுப்பினர் அட்டை உதயமானது.. அந்த அட்டையை சோஷியல் மீடியாவில் வைரலானது.. இதை பார்த்த அவரது ஆதரவாளர்கள், திமுகவில் மீண்டும் அண்ணனை இணைத்துக் கொண்டதற்கு நன்றி என்று கேப்ஷன் போட்டு ஷேர் செய்தனர்.

DMK is very fast in adding new members into party

அதேபோல, அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரில் அடையாள அட்டை வழங்கப்பட்டது.. டிரம்ப் எழும்பூர் தொகுதியை சேர்ந்தவர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.. இதெல்லாம் டெக்னிக்கல் தவறினால் ஏற்பட்டது என்று திமுக தரப்பில் சொல்லப்பட்டாலும், எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தபடியே உள்ளன.

தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாத நிலைமைக்கு திமுக தள்ளப்பட்டுவிட்டதாகவும், ஆன்லைன் அரசியல் இயக்கமாக மாறிவிட்டது, சுயமாக இயங்க முடியாமல் ஒரு குழுவிடம் ஒப்படைத்து திமுக அரசியல் செய்கிறது என்றும் பேச்சுக்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது.. அதன்படி, ரேஷன் கடைகளில் திமுகவினர், ஆள் சேர்க்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.. அதாவது, மாவட்ட, பகுதி, ஒன்றிய கழக செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், அதிகம் பேரை உறுப்பினராக சேர்த்து, கட்சி தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவதற்காகவே இந்த அதிரடியில் இறங்கி உள்ளனராம்.

சட்டுன்னு இப்படி பேசிட்டாரே.. சங்கடத்தில் திமுக.. ஆனால் திருமா தெளிவா இருக்காரே!

இதற்காகவே சில நிர்வாகிகள், இளைஞர்களுக்கு புதுசாக செல்போன்களை வாங்கி தந்து, ரேஷன் கடைகளின் முன்பு நிற்க வைக்கப்படுகிறார்களாம்... அவர்களும் கடைக்கு வரும் மக்களிடம், விபரங்களை கேட்டு பதிவு செய்து, தங்கள் கட்சியில் சேர்த்து விடுவதாகவும் சொல்லப்படுகிறது. இதை பற்றி கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம், ரேஷன் ஊழியர்கள் புகார் தந்தும் எதுவும் நடவடிக்கை இல்லை என்றும் முணுமுணுக்கப்படுகிறது.

காரணம், அடுத்த ஆட்சி திமுகவாக இருந்துவிட்டால் என்ன செய்வது? என்ற கலக்கம்தானாம்.. இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும், திமுகவின் பலம் நாளுக்கு நாள் கூடி வரவே செய்வதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்!

 
 
 
English summary
DMK is very fast in adding new members into party
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X