சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அப்டி போடு.. "176".. தட்றோம்.. தூக்கறோம்.. தடாலடி திமுக.. திகைத்துப் போன கூட்டணிக் கட்சிகள்..!

திமுக கூட்டணி கட்சிகளுக்கு சீட் எவ்வளவு தரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: திமுக 176 இடங்களில் போட்டியிட போவதாக ஒரு தகவல் கசிந்து வருகிறது.. தினந்தோறும் கூட்டணி தொடர்பாக பல்வேறு விஷயங்கள் வெளிவரும் நிலையில், இன்றைய தினம் இந்த தகவல் வெடித்து கிளம்பி உள்ளது.
எந்த முறை தேர்தலும் இப்படி கிடையாது.. அதிமுகவும், திமுகவும் பார்த்து பார்த்து ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து கொண்டிருக்கிறார்கள்.. அதனால்தான் இன்னும் ஒருத்தருடைய கூட்டணியும் முடிவுக்கு வரவில்லை. பேச்சுவார்த்தையும் பகிரங்கமாக ஆரம்பிக்கவும் இல்லை.

ஆனால், மறைமுகமாக பேச்சுவார்த்தை மட்டும் நடந்து கொண்டிருக்கிறது.. அந்த வகையில், காங்கிரஸ் கட்சிக்கு 20 சீட் மட்டுமே தர முடிவாகி உள்ளதாம்.. இந்த அதிர்ச்சியை காங்கிரஸ் தாங்குமா என்று தெரியவில்லை.. ராகுல் ஜல்லிக்கட்டு வரை வந்தும்கூட, இவ்வளவுதான் சீட் என்று தெரிகிறது.

சுபம்

சுபம்

அதேபோல, வைகோ விஷயத்தில் அநேகமாக எல்லாம் சுபமாக முடிந்துவிடும் என்கிறார்கள்.. முதலில் 20 கேட்டிருக்கிறார்.. இதில் 10 ஓகே ஆகும் என்கிறார்கள்.. ஆனால், விசிகவுக்கு இதைவிட குறைவாக தருவதற்கான சூழல் உள்ளது.. அதாவது 5 அல்லது 6 சீட் ஒதுக்கலாம் என்கிறார்கள்.. திருமாவுக்கு பெருத்த ஷாக்காக இது இருக்கும் என்றாலும், கடந்த வாரம் வெறும் 2 சீட்தான் விசிகவுக்கு என்று செய்திகள் பரபரத்தன. அவ்வாறு இல்லாமல் 6 சீட் வரை ஒதுக்கீடு செய்ய திமுக யோசித்து வருகிறதாம்.

கட்சிகள்

கட்சிகள்

மற்றபடி, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 8 சீட் ஒதுக்கீடு செய்யப்படலாம்.. ஆனால் இவர்கள் தான் வைகோவைவிட அதிகமாக சீட் கேட்டவர்கள்.. அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட்டணி தலைமைக்கு தற்போது வரை கட்டுப்பட்டு விசுவாசமாக நடப்பதால் ஆளுக்கு 8 சீட் வரை தரப்படலாம்.. இதர கட்சிகளான முஸ்லீம் லீக், மமகவுக்கு தலா 2 தர வாய்ப்புள்ளதாம்.. இதைதவிர, கொங்கு மண்டல ஈஸ்வரன், வாழ்வுரிமை கட்சியையும் உள்ளே இழுத்து போட்டு ஆளுக்கு ஒரு சீட் தரவும் யோசனை உள்ளதாக தெரிகிறது.

தொகுதிகள்

தொகுதிகள்

எப்படி பார்த்தாலும் கூட்டணிகளுக்கு 58 ஒதுக்கப்பட்டால், மிச்சம் 176 இடம் திமுகவின் கையில் லம்ப்பாக இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே 200 தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்பதுதான் ஐபேக்கின் திட்டம்.. 200 தொகுதிகள் என்றால் 150-ல் மெஜாரிட்டியை தக்க வைக்கலாம் என்றும், அதன்மூலம் அதிமுகவுக்கு ஒரு ஜர்க் தரலாம் என்றும் கணக்கு போடப்பட்டது.

முக ஸ்டாலின்

முக ஸ்டாலின்

ஆனால், கூட்டணிகள் ஆளுக்கு ஒரு பக்கம் முரண்டு பிடிப்பதாலும், கூட்டணிகள் இல்லாமல் திமுக இதுவரை தேர்தலை சந்தித்தது இல்லை என்பதாலும்தான், தற்போது ஒருபடி கீழே இறங்கி வந்துள்ளதாக தெரிகிறது.. ஒருவேளை கூட்டணியில் இருந்து யாராவது ஒரு கட்சி விலகி சென்றாலும் திமுகவை பலமாகவே பாதிக்கும் என்பதை மறுக்க முடியாது.. இது எல்லாவற்றிற்கும் மேலாக, கூட்டணி கட்சி தலைவர்களின் அதிருப்தியை ஸ்டாலின் சம்பாதிக்க விரும்பவில்லையாம்.. அனைவரையும் அனுசரித்து செல்லவே விரும்புவதால்தான், 58 சீட்டுகளை கூட்டணிகளுக்கு என்று ஒதுக்க யோசித்து வருவதாக தெரிகிறது..!

English summary
DMK likely to contest 176 seats in TN Assembly Election 2021
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X