அமைச்சர் செல்லும் வரை காத்திருந்து..திமுக நிர்வாகி கொடூர கொலை..ரத்த சகதியில் துடித்து அடங்கிய உயிர்
சென்னை : சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் திமுக பிரமுகர் ஒருவர் ஓட ஓட விரட்டி கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் தகராறு காரணமாக திமுக நிர்வாகி ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தேர்தலில் போட்டியிடுவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர் அவர்களை சிறையின் அடைத்தனர்.

சென்னையில் அதிர்ச்சி
இந்த நிலையில் சென்னையில் மீண்டும் திமுக பிரமுகர் ஒருவர் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லவன் சாலை காந்தி நகரில் இன்று இரவு சமீபத்தில் மறைந்த திமுக நிர்வாகியின் புகைப்படம் திறப்பில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். அவர் சென்ற நிலையில், சென்னையின் மிக முக்கிய பகுதியாக கருதப்படும் திருவல்லிக்கேணி பகுதியில் பல்லவன் சாலையில் இன்று 32 வயது திமுக நிர்வாகியான மதன் என்பவர் சாலையில் நின்று கொண்டிருந்தார்.

கொடூர கொலை
அப்போது கையில் பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் மதனை சுற்றி வளைத்து வெட்டி கொலை செய்ய முயன்றது. உயிரை காப்பாற்றிக்கொள்ள மதன் ஓடி நிலையிலும் விடாமல் துரத்திய கும்பல் அவரது தலை கை மார்பு பகுதியில் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மதன் சிறிது நேரத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

அலறியடித்து ஓட்டம்
இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மக்கள் நடமாட்ட மிகுந்த பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவத்தால் அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அலறி அடித்து ஓடினர். இதையடுத்து, அங்கு விரைந்த சென்னை திருவல்லிக்கேணி காவல் துறை உதவி ஆணையர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை
மேலும் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் உட்கட்சிப் பூசல் காரணமாக மதன் கொலை செய்யப்பட்டாரா, தேர்தல் முன்விரோதம் போன்ற வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் தான் அதிமுகவில் இருந்து திமுகவில் மதன் இணைந்துள்ளார் ஆகவே மாநகராட்சி தேர்தலில் அப்பகுதியில் திமுகவுக்கு ஆதரவாக வாக்குசேகரித்து இருந்துள்ளார்.சென்னையில் ஒரு மாத இடைவெளியில் அடுத்தடுத்து திமுக பிரமுகர்கள் கொலை செய்யப்படும் சம்பவம் தலைநகர் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications