நண்பர் பா.ரஞ்சித்.. 'சார்பட்டா பரம்பரை' படக்குழுவை.. பாராட்டி தள்ளிய உதயநிதி ஸ்டாலின்.. வேற லெவல்!
சென்னை: சார்பட்டா பரம்பரை படக்குழுவுக்கு தி.மு.க எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம்தான் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பேசும் பொருளாக இருக்கிறது.
Recommended Video
ஆர்யா, பசுபதி, கலையரசன் , ஜான் விஜய், உள்ளிட்டோர் நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது சார்பட்டா பரம்பரை.
1970-ம் ஆண்டுகளில் சென்னையில் பிரபலமாக விளங்கிய குத்துச்சண்டையை மையப்படுத்தி கதைக்கரு அமைந்துள்ளது. அரசியலில் விளையாட்டு; விளையாட்டில் அரசியல் என்ற ஒற்றை அம்சத்தை தோலுரித்து காட்டி இருக்கிறார் இயக்குனர் ரஞ்சித்.

கருணாநிதியை புகழும் வசனம்
படத்தில் வரும் அரசியல் வசனங்களும், அரசியல் காட்சி அமைப்புளும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக இந்திரா காந்தி கொண்டு வந்த எமெர்ஜென்சி குறித்து படம் அதிகம் பேசுகிறது. எமெர்ஜென்சி காலத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி அதனை எதிர்த்த விதம், கருணாநிதியை புகழ்பாடும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

அ.தி.மு.க.வுக்கு எதிரானதா?
இதனால் தி.மு.க.வினர் சார்பட்டா பரம்பரையை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அதே வேளையில் அ.தி.மு.க.வுக்கு எதிராக சில காட்சிகள் உள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. எமெர்ஜென்சியை தி.மு.க எதிர்த்த அதே வேளையில், .தி.மு.க.வினர் இந்திரா காந்திக்கு ஆதரவாக செயல்பட்டதாவும், அ.தி.மு.க.வை குண்டர்கள் போலவும், சாராயம் காய்ச்சுவது போலவும் சித்தரித்துள்ளதாக ஒரு தரப்பினர் குற்றம் சாட்டி இருக்கின்றனர்.

ஜெயக்குமார் எதிர்ப்பு
இதனால் சார்பட்டா பரம்பரை படத்துக்காக சமூக வலைத்தளங்களில் தி.மு.க, அ.தி.மு.க இடையே பெரும் மோதலே நடந்து வருகிறது. அ.தி.மு.க.வுக்கு எதிரான காட்சி அமைப்புகள் குறித்து அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் தி.மு.க எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் சார்பட்டா பரம்பரை படத்தை வெகுவாக பாராட்டியுளளார்.

உதயநிதி ஸ்டாலின் பாராட்டு
இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- 70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்துள்ள 'சார்பட்டா பரம்பரை' முக்கியமான திரைப்படம். அந்த காலத்தில் இருந்த அரசியல் நெருக்கடி நிலையையும், அதை கழகம் - கலைஞர் - கழக தலைவர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது.

இயக்குநர் ரஞ்சித்துக்கு வாழ்த்துக்கள்
கபிலனாக அசத்தியுள்ள நண்பர் ஆர்யா, கழகத்துக்கார்-ரங்கன் வாத்தியாராக வரும் பசுபதி சார்,
சார், டான்ஸிங் ரோஸ் சபீர், வேம்புலி ஜான் விஜய் என ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கதையில் வாழ செய்துள்ள நண்பர் இயக்குநர் ரஞ்சித்துக்கும், ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். உதயநிதியின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications