''சமூக பிரச்சினைக்கு குரல் கொடுத்தவர் விவேக்''.. கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!
சென்னை: நடிகர் விவேக்கின் மறைவுக்கு தி.மு.க எம்.பி கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
'சின்ன கலைவாணர்' என்று அன்புடன் அழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் உயிரிழந்தார்.

மனங்களை வென்ற விவேக்
வெறும் நடிகராக மட்டுமின்றி சமூக சேவை செய்தும், ஏழை, எளிய மக்களுக்கும் உதவி புரிந்து மக்கள் மனங்களை வென்ற விவேக் மறைவுக்கு அரசியல், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விவேக் மறைவுக்கு உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
|
கனிமொழி இரங்கல்
கனிமொழி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ' நடிகர் பத்மஸ்ரீ. விவேக் அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. அவர் பல சமூகப் பிரச்சினைகளைக் குறித்து தனது திரைப்படங்கள் மூலமும், பிற தளங்களிலும் தொடர்ந்து பேசியவர். சமூகத்தின் பல நிலைகளிலும், நிலவி வரும் பாசாங்குகளைக் கண்டித்தவர். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
|
தாங்க முடியாத பேரதிர்ச்சி
உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ' அண்ணன் விவேக் அவர்களின் மரணம் தாங்கிக்கொள்ள முடியாத பேரதிர்ச்சி. கலைஞரின் அன்பை பெற்றவர். தலைவர் அவர்களின் நண்பர்.
'மனிதன்' படத்தில் என்னுடன் நடித்தார்-வழிநடத்தினார். திரையிலும் நிஜத்திலும் சமூகம்-சூழலியலுக்காக தொடர்ந்து குரல்கொடுத்தவர். அண்ணனின் மரணம் தமிழகத்துக்கு பேரிழப்பு.

பணிகள் தொடருவோம்
தன் வாழ்நாள் முழுவதும் நேர்மறை எண்ணங்களையும், உற்சாகத்தையும் விதைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அண்ணனின் இழப்பை குடும்பத்தார் எப்படி தாங்கிக்கொள்வர்? ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பம்-நண்பர்கள்- ரசிகர்களுக்கு என் ஆறுதல். சின்னக்கலைவாணர் விட்டு சென்ற சமூக பணிகளை நாம் தொடருவோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications