விடியும்போதே எனக்கு இந்த கவலை.. ‘என்னை துன்புறுத்தாதீங்க..’ திமுக சீனியர்களால் டென்ஷன் ஆன ஸ்டாலின்!
சென்னை : என்னை துன்பப்படுத்துவது போல மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் சூழல்களை உருவாக்கினால் நான் என்ன செய்வது? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுக்குழு மேடையில் வேதனையுடன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், திமுக தலைவராக முக ஸ்டாலின், பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோரும் தேர்வாகியுள்ளனர். மேலும் துணை பொதுச்செயலாளராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள முக ஸ்டாலின் ஏற்புரை வழங்கிப் பேசினார். அப்போது சமீபத்தில் சர்ச்சையில் சில அமைச்சர்கள் சிக்கியது பற்றியும் எச்சரிக்கை விடுத்துப் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
பொது இடங்களில் சிலர் நடந்துகொண்ட செயல்கள் காரணமாக திமுகழகம் பழிகளுக்கு ஏளனத்திற்கு ஆளானது. இன்றைக்கு நம் வீட்டின் பாத்ரூம், படுக்கை அறையைத் தவிர அனைத்துமே பொது இடம் ஆகிவிட்டது. கவனமாகப் பேசுங்கள் என கட்சி நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்டுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

ஸ்டாலின் சரவெடி பேச்சு
திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டிய காலம் இது, சட்டமன்றத் தேர்தலில் வென்றுவிட்டோம், ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிட்டோம் என மெத்தனமாக இருக்க முடியாது. பெற்ற வெற்றியை தக்கவைக்க வேண்டும். நிரந்தரமாக தக்கவைக்க வேண்டும். இனி திமுக தான் தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளப்போகிறது என்பதில் துளியும் சந்தேகமில்லை. நம்மை விட நாட்டு மக்கள் அதில் உறுதியாக இருக்கிறார்கள்.

இதுதான் பயமே
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இருந்ததை விட திமுகவின் செல்வாக்கு பொதுமக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. இதுதான் எனக்கு பயத்தை கொடுக்கிறது. கழகத்தின் செல்வாக்கும், என் மீதான நம்பிக்கையும் மக்களிடையே உயர உயர, இந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் தக்க வைக்க வேண்டும் என்பதுதான் என் சிந்தனையாக இருக்கிறது. சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் சொல்வதாக இளங்கோவடிகள் எழுதியிருப்பார். எது வந்தாலும் பொறுப்பேற்க வேண்டியன் மன்னன் தான். எனவே பதவியில் துன்பமே தவிர இன்பம் இல்லை என்கிறார் இளங்கோ.

ரெண்டு பக்கமும் அடி
மழையே பெய்யவில்லை என்றாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். மழை அதிகமாகப் பெய்து வெள்ளம் வந்துவிட்டாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். பல்வேறு பக்கங்களில் இருந்தும் வரக்கூடிய பன்முனை தாக்குதல்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவன் நான். ஒருபக்கம் திமுக தலைவர், இன்னொரு பக்கம் தமிழ்நாட்டின் முதலமைச்சர். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல் இருக்கிறது என் நிலைமை.

என்னை துன்பப்படுத்துகிறீர்கள்
இத்தகைய சூழ்நிலையில் இருக்கக்கூடிய என்னை மேலும் துன்பப்படுத்துவது போல மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் உருவாக்கினால் நான் என்ன சொல்வது? யாரிடம் சொல்வது? நாள்தோறும், காலையில் கண் விழிக்கும்போதே நம்மவர்கள் யாரும் புது பிரச்சனையை உருவாக்கி இருக்கக்கூடாது என்ற நினைப்போடுதான் நான் கண் விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னை தூங்க விடாமல் கூட ஆக்கி விடுகிறது.

உங்க நல்லதுக்கு சொல்றேன்
உங்கள் செயல்பாடுகள் கழகத்திற்கும் உங்களுக்கும் பெருமை ஏற்படுவது போல் அமையவேண்டுமே தவிர சிறுமைப்படுத்துவதாக அமையக்கூடாது. பொது நன்மைக்காக மட்டுமல்ல, உங்கள் நன்மைக்காகவும் சேர்த்தே இதனைச் சொல்கிறேன். பொது இடங்களில் சிலர் நடந்துகொண்ட செயல்கள் காரணமாக திமுகழகம் பழிகளுக்கு, ஏளனத்திற்கு ஆளானது.

எச்சரிக்கை
இன்றைக்கு நம் வீட்டின் பாத்ரூம், படுக்கை அறையைத் தவிர அனைத்துமே பொது இடம் ஆகிவிட்டது. ப்ரைவேட் ப்ளேஸ் என்று எதுவும் இல்லை. எல்லோருக்கும் மூன்றாவது கண்ணாக செல்போன் முளைத்துபிட்டது. ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்படுகிறது. எனவே, ஒவ்வொரு நொடியையும் கண்ணியமாக பயன்படுத்த வேண்டும். நாம் பயன்படுத்தக்கூடிய சொற்கள் மிகமிக முக்கியமானவை ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும். பொதுமேடைகளில் மட்டுமல்ல, அடுத்தவர்களிடம் பேசும்போது கூட எச்சரிக்கையாக பயன்படுத்துங்கள்." எனப் பேசியுள்ளார் ஸ்டாலின்.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!











Click it and Unblock the Notifications