”சென்னை கனமழை பாதிப்பு" அமைதி காக்கும் அதிமுக, பாஜக.. சாதித்து காட்டியதா திமுக அரசு?
சென்னை: சென்னையில் கனமழை பாதிப்பு குறித்து எதிர்க்கட்சிகள் ஆய்வுக்கு செல்லாமல் இருக்கும் நிலை நீடித்து வருகிறது. இதற்கு திமுக அரசு கனமழையால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே அறிந்து சிறப்பாக செயல்பட்டதே காரணம் என்று திமுக ஆதரவாளர்கள் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் தொடங்கிவிட்டல் சென்னை மக்களுக்கு தானாகவே அச்சம் எழுந்துவிடும். அதற்கு வடகிழக்கு பருவமழையால் தேங்கும் மழைநீரும், அதீத பாதிப்புகளுமே காரணமாக இருந்து வந்தன.
வடசென்னை, தென் சென்னை என சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்துவிடும். ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் பெருவெள்ளம் என்று ட்ரோன் கேமராவில் எடுக்கப்பட்டு தொலைக்காட்சிகளில் காட்டப்படும் காட்சிகள் மற்ற மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

கடந்த ஆண்டு மழை பாதிப்பு
எதிர்க்கட்சிகள் மக்களுக்கு நிவாரண அளிக்க ஆய்வு நடத்தி விமர்சித்து வருவார்கள். கடந்த முறை பாஜக தலைவர் அண்ணாமலை படகில் சென்று ஆய்வு நடத்தி புகைப்படம் எடுத்தது திமுக அரசை விமர்சித்தார். இதேபோல் அதிமுக சார்பாகவும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மக்களுக்கு நிவாரணம் அளித்து திமுகவை கடுமையாக விமர்சித்தார். அண்மையில் சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழைக்கு கூட எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தி மக்களுக்கு உதவிகள் வழங்கினார்.

ஒரே நாளில் கொட்டிய மழை
ஆனால் நடப்பு ஆண்டில் அதனை எதிர்கொள்ள மழைநீர் வடிகால் பணிகளை திமுக அரசு முடுக்கிவிட்டிருந்தாலும், சென்னை மக்களிடையே அச்சம் இருந்து வந்தது. அதற்கு மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக முடிவடைந்ததா என்ற கேள்விக்கு சரியான விடை கிடைக்காததும் ஒரு காரணம். இதற்கேற்றாற் போல் அக்.29ம் தேதி இரவு முதல் தொடர் கனமழை பெய்து வந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை, ஒரு நாளில் பெய்ததாக வானிலை ஆய்வு மைய அறிக்கை தெரிவித்தது.

வேகமாக வடிந்த மழைநீர்
இதனால் சாலைகள், சுரங்கப் பாதைகள், பாலங்கள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் சாலைகளில் தேங்கிய மழைநீர், வேகமாக வடிந்தது. வடசென்னையை தவிர்த்து அனைத்து இடங்களிலும் மழைநீர் அகற்றப்பட்டு, தமிழக அரசு பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொண்டுள்ளது.

அமைதி காக்கும் பாஜக, அதிமுக
வழக்கமாக மழை காலங்களில் ஆய்வுக்கு சென்று தமிழக அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் இம்முறை எங்கும் இதுவரை ஆய்வு நடத்திவில்லை. திமுகவை கடுமையாக விமர்சிக்கும் பாஜக கூட கனமழை பாதிப்பு குறித்து எவ்வித ஆய்வும் நடத்தவில்லை. மறுபக்கம் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி வெறும் அறிக்கை மட்டும் வெளியிட்டு அமைதி காத்து வருகிறார்.

எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின்
2016ம் ஆண்டு முதல் 2020 வரை சென்னையில் எப்போதும் கனமழை பெய்து மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ, அப்போது எல்லாம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நேரடியாக களத்திற்கு சென்று மக்களை சந்தித்து உதவிகளை வழங்கினார். அதேபோல் ஆளுங்கட்சி செய்திருக்க வேண்டிய பணிகளையும் பட்டியலிட்டு விமர்சித்தார்.

உடன்பிறப்புகள் பெருமிதம்
ஆனால் நடப்பாண்டில் எதிர்க்கட்சிகள் அமைதி காக்கும் நிலையில், திமுக ஆதரவாளர்கள் தரப்பில் அதிமுக 10 ஆண்டுகளில் செய்யாத பணிகளை, ஒன்றரை ஆண்டுகளில் செய்து முடித்துள்ளோம் என்று பேசி வருகின்றனர். அதற்கு ஆட்சிக்கு வந்ததும், திருப்புகழ் தலைமையில் குழு அமைத்து மழைநீர் வடிகால் பணிகளுக்காக பணியாற்றியதாகவும், அதுமட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகள் பேச முடியாத அளவிற்கு சிறப்பாக கனமழையை எதிர்கொண்டுள்ளதாக திமுக தரப்பில் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!












Click it and Unblock the Notifications