கல்லணை கட்டப்பட்டது ஏன்?.. கரிகாலச் சோழன் டிக் அடித்த அணையின் ப்ளூபிரின்ட் எது?
சென்னை: பழங்காலத்து கட்டடக் கலைகள் மிகவும் சிறப்பானது என்பதை நாம் அறிவோம். கல்லணை உருவான வரலாறு தெரியுமா?
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் பகுதியில் உள்ளது கல்லணை. இது தமிழகத்தில் உள்ள உலக பழமைவாய்ந்த அணையாகும். இந்த அணை கரிகால சோழனால் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டது.
திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி ஆறு முக்கொம்பில் வடபுறமாக கொள்ளிடம், தென்புறமாக காவிரி என இரண்டாகப் பிரிகிறது. இவ்விடத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் மேலணை கட்டப்பட்டுள்ளது.

காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும்
காவிரிக்கும், கொள்ளிடத்துக்கும் இடையில் திருவரங்கம் ஆற்றுத்தீவு உள்ளது. அங்கிருந்து காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது. அங்கு காவிரி ஆறானது உள்ளாறு (கொள்ளிடம்), காவிரி, வெண்ணாறு, புது ஆறு என 4 ஆகப் பிரிகிறது. காவிரி டெல்டாவில் இந்த அணை கட்டுவதற்கு முன்னர் காவிரி ஆறும் அதன் கிளை ஆறுகளும் வெவ்வேறு இடத்தில் பிரிந்து காணப்பட்டது.

வண்டல் படிவுகள்
வண்டல் படிவுகளும் மண் அரிப்பும் அந்த ஆற்றின் போக்கையே நிரந்தரமாக மாற்றிவிட்டதால் பல ஆண்டுகளாக பல இடங்களில் பாய்ந்து வந்தது. சங்க காலத்தில் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வண்டல் படிவுகள் அதிகரித்ததாலும் ஆற்று படுகையின் உயரம் அதிகரித்ததாலும் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஆற்றின் கரை
இது அந்த ஆற்றின் கரை உடைவதற்கு வழி வகுத்தது. இதனால் உள்ளாறு (ஸ்ரீரங்கம் தீவில் உள்ளது) உருவாக காரணம் ஆனது. கொள்ளிடத்திலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கொள்ளிடத்திற்கு தண்ணீர் செல்வதை தடுக்க விவசாய பயன்பாட்டுக்காக காவிரி ஆற்றில் தண்ணீரை தேக்கி வைக்க, கல்லணையை உருவாக்குவது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக பொறியாளர்கள் ஆலோசனை செய்து ஒரு மேப வரையப்பட்டது.

கரிகாலச் சோழன்
இந்த வரைப்படத்தை வைத்தே கரிகாலச் சோழன் கல்லணையை உருவாக்கினார் என்றாலும் பல முறை மறு கட்டமைப்பு செய்தார் என்கிறார்கள். 1851 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சியில் காவிரி மற்றும் வெண்ணாறு ஆறுகளில் தண்ணீர் விநியோகத்தை முறைப்படுத்த இரு ரெகுலேட்டர்கள் (தடுப்பான்கள்) கட்டமைக்கப்பட்டன. இவை இரண்டும் கல்லணையிலிருந்து சில கிலோ மீட்டர் தூரமே உள்ளன.

ரெகுலேட்டர்கள்
இரு ரெகுலேட்டர்களையும் கல்லணைக்கு அருகே கொண்டு வருவது என முடிவு செய்யப்பட்டது. 1886 ஆம் ஆண்டு வெண்ணாற்றின் பாதை செயற்கையாக மாற்றப்பட்டது. காவிரி மற்றும் வெண்ணாற்றுக்கான தடுப்பான்கள் கல்லணை அருகே கட்டப்பட்டது. இதன் மூலம் கல்லணை மிப் பெரிய அளவில் உருவானது.

ஆங்கிலேயே என்ஜினியர்
இது வெறும் கல்லணை அல்ல. 1800 களில் சர் ஆர்தர் காட்டன் உள்ளிட்ட ஆங்கிலேய பொறியாளர்கள் பல தடுப்பான்களை கட்டினர். காவிரி ஆறு மற்றும் கொள்ளிடம் இடையே நீரோட்டத்திற்காக உபரிநீர் கால்வாய்கள் புனரமைக்கப்பட்டது. கல்லணை மட்டும் அல்லாமல் கல்லணை கால்வாயும் அமைக்கப்பட்டது. இறுதியாக கடந்த 1934 ஆம் ஆண்டு மேட்டூர் அருகே அணை கட்டப்பட்டது. புதிய கால்வாயானது காவிரி டெல்டா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு பாசனத்திற்கு தண்ணீரை பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டது.
Recommended Video

கல்லணை கால்வாய்
கல்லணை கால்வாய் கட்டப்பட்டதால் கல்லணை பல்வேறு தடுப்பான்கள் கொண்டு நவீனமயமாக்கப்பட்டது. அது புதிய டெல்டா என அழைக்கப்படுகிறது. கல்லணை கால்வாய் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆன நிலையிலும் 2011 ஆம் ஆண்டு வரை சமூக வேறுபாடுகள் இருந்தன. பழைய டெல்டாவில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர். புதிய டெல்டாவில் குறைந்த விகிதத்தில் உள்ளனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்











Click it and Unblock the Notifications