இன்றைய மின்தடை! ஷார்ப்பா 9 மணிக்கு ஆப் ஆகிடும்.. 2 மணி வரை மிக்ஸி, கிரைண்டர், வாஷிங்மெஷின் இயங்காது
சென்னை: சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சில இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். மக்கள் மின்சார இயந்திரங்களின் பயன்பாடுகளை முன்கூட்டியே செய்து முடிக்க வசதியாக மின்சார வாரியம் சார்பில் மின் தடை செய்யப்படும் பகுதிகள் எவை என்பது குறித்து அந்தந்த மாநகர, நகர, ஊராட்சியை சேர்ந்த மின்சார வாரியம் அறிவிக்கும்.

அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அண்ணாசாலை
உயர் நீதிமன்றம், கடற்கரை சாலை 2வது குறுக்கு தெரு, ஏரபாலு தெரு, அர்மேனியன் தெரு, ராஜா அண்ணாசாலை மன்றம், என்எஸ்சி போஸ் சாலை, மண்ணடி, முத்தியால்பேட்டை, கொத்தவால் சாவத் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் அடங்கும்
வியாசர்பாடி
சி.எம்.பி.டி.டி., வி.எஸ்.மணி நகர், ஆண்டாள் நகர், எம்.ஆர்.எச். ரோடு, சின்ன தோப்பு, கந்தசாமி நகர், விநாயகபுரம்.
போரூர்
கோவூர், பெரியபனிச்சேரி, தண்டலம், பாபு கார்டன், மேத்தா நகர், குன்றத்தூர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications