சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாண்டஸ் புயல் "இங்குதான்" கரையை கடக்கிறதா? வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட்- Exclusive

Google Oneindia Tamil News

சென்னை: வங்கக் கடலில் நாளை உருவாகவுள்ள மாண்டஸ் புயல் எங்கே கரையை கடக்கிறது என தெரியுமா?

தமிழகம் மற்றும் புதுவைக்கு பலனை தரக் கூடிய வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் மழை 4 நாட்களுக்கு வைத்து வெளுத்தது. பிறகு பரவலாக ஆங்காங்கே மிதமான மழை பெய்து வந்தது.

இந்த நிலையில் வங்கக் கடலில் நவம்பர் மாதம் 3 ஆவது வாரத்தில் ஒரு காற்றழுத்தம் உருவானது. அது புயலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது வலுவிழந்து அரபிக் கடல் பக்கம் போய்விட்டது. இதனால் தென் மாவட்டங்களுக்கு மழை பெய்தது.

சென்னையில் 30 ஆண்டுகளில் இரு முறை.. மணிக்கு 100 கி.மீ. காற்றின் வேகம்.. வெதர்மேன் தந்த அப்டேட்! சென்னையில் 30 ஆண்டுகளில் இரு முறை.. மணிக்கு 100 கி.மீ. காற்றின் வேகம்.. வெதர்மேன் தந்த அப்டேட்!

ரெஸ்ட்

ரெஸ்ட்

பிறகு ரெஸ்ட் எடுத்த மழை வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் மீண்டும் ஆங்காங்கே பெய்யத் தொடங்கியது. இந்த நிலையில் வங்கக் கடலில் நேற்றைய தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. மேலும் இது நாளை புயலாக மாறக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

புயலாக மாறினால் மாண்டஸ்

புயலாக மாறினால் மாண்டஸ்

அவ்வாறு புயலாக மாறினால் அதற்கு மாண்டஸ் என பெயரிடப்படவுள்ளது. கடந்த காற்றழுத்தத்தை போல் இது ஏமாற்றத்தை தராது என்கிறார்கள். எனினும் இயற்கையை யாராலும் 100 சதவீதம் கணிக்க முடியாது. அதே வேளையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை எடுக்காமலும் இருக்க முடியாது. அந்த வகையில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களளில் அதிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரெட் அலர்ட் எச்சரிக்கை

ரெட் அலர்ட் எச்சரிக்கை

மேலும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, சென்னை ஆகிய 6 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். அரக்கோணத்தில் இருந்து சென்றுள்ள இவர்கள் குழுவுக்கு 25 பேர் வீதம் சென்றுள்ளனர். அது போல் வடதமிழக கடற்கரையை நோக்கி புயல் வரவுள்ளதால் அது புதுவை அருகே கரையை கடக்கும் என சொல்லப்படுகிறது.

புதுவை அரசு பேரிடர் மீட்பு படை

புதுவை அரசு பேரிடர் மீட்பு படை

இதை அறிந்த புதுவை அரசு பேரிடர் மீட்பு படையை தொடர்புக் கொண்ட நிலையில் புதுவைக்கு இரு குழுக்களும் காரைக்காலில் ஒரு குழுவும் விரைந்துள்ளது. மேலும் இன்றைய தினம் புதுவை தலைமைச் செயலாளர் தலைமையில் புயலை எதிர்கொள்ள ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. புதுவை கடற்கரையில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் மீன் பிடிக்க சென்றவர்கள் உடனே கரை திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை டூ புதுவை

சென்னை டூ புதுவை

இந்த நிலையில் புயல் சென்னை டூ புதுவை இடையே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது குறித்து தமிழ்நாடு வெதர்மேனிடம் ஒன் இந்தியா சார்பில் கேட்டோம். அதற்கு புதுவையின் வடக்கு பக்கம் கரையை கடக்க வாய்ப்புள்ளது. இதனால் புதுவையில் மிக கனமழைக்கு உகந்த இடமாகும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

English summary
Do you know the Mandous Cyclone landfall will be at North of Pondicherry?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X