சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ரேட் பேசியாச்சாமே".. அன்றே சீறிய Dr. கிருஷ்ணசாமி.. மீண்டும் திமுகவுக்கு குறி.. எடப்பாடிக்கு ஆதரவு

எடப்பாடி பழனிசாமி போராட்டத்திற்கு நேடியாகவே சென்று ஆதரவு தெரிவித்தார் டாக்டர் கிருஷ்ணசாமி

Google Oneindia Tamil News

சென்னை: வரும் தேர்தலில் புதிய தமிழகம் யாருடன் கூட்டணி வைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு வரும் நிலையில், திமுகவை சரமாரியாக விமர்சித்துள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி.

அதிமுக ஒற்றை தலைமை விவகாரங்கள் இன்னும் முடியவில்லை.. ஒன்றிணைந்த அதிமுகவுக்கு மேலிட பாஜக மறைமுகமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

ஆனால், எடப்பாடி பிடிகொடுக்காமல் உள்ளார்... தன் பிடிவாதத்தையும் தளர்த்திக் கொள்ளாமல் உள்ளார்.. எடப்பாடி பழனிசாமி இணங்கி வராவிட்டால், அவரை கண்டுகொள்ளாமல் கழட்டிவிட்டுவிடுவது என்ற முடிவுக்கும் பாஜக வரலாம் என்கிறார்கள்.

ஸ்டாலினும் ஓபிஎஸ்ஸும் ரகசிய சந்திப்பு! அதிமுகவை ஒடுக்க எந்த காலத்திலும் முடியாது.. எடப்பாடி பழனிசாமிஸ்டாலினும் ஓபிஎஸ்ஸும் ரகசிய சந்திப்பு! அதிமுகவை ஒடுக்க எந்த காலத்திலும் முடியாது.. எடப்பாடி பழனிசாமி

அட்வைஸ்

அட்வைஸ்

கூட்டணி என்றில்லாமல் தனித்து போட்டியிடவும் தன்னை தயார்செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாம்.. பிரதமர் மோடி இதுகுறித்து மாநில தலைவர் அண்ணாமலைக்கு, கடந்த தேர்தலின்போதே ஒரு அறிவுரை தந்திருந்ததாக கூறப்படுகிறது.. அதாவது, தனித்து போட்டியிட்டால்தான், ஒவ்வொரு கட்சியின் முழுமையான பலம் தெரியும்... அப்போதுதான், அடுத்தடுத்த தேர்தல்களில் நம்மை பலப்படுத்தி கொள்ள, தேர்தல் வியூகங்களை அமைத்து கொள்ள முடியும் என்று சொன்னதாலேயே, தனித்து போட்டி என்ற முடிவில் உறுதியாக உள்ளதாம்..

 விஜயகாந்த்

விஜயகாந்த்

வேண்டுமானால், தங்களுடன் இணைந்து செயல்படும் டிடிவி தினகரன், விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ், கிருஷ்ணசாமி, ஜிகே வாசன், ஓபிஎஸ், சசிகலா போன்றோர்களை இணைத்து கூட்டணியாக போட்டியிட வேண்டும், அப்படியே போட்டியிட்டாலும் கூட்டணி தலைமையாக களமாட வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணமாக உள்ளதாம்.. உத்தேசமாக சொல்லப்பட்டாலும் இந்த கூட்டணி கணக்கில் டாக்டர் கிருஷ்ணசாமியும் இடம்பிடித்தே வருகிறார்..

 லிஸ்ட் எங்கே?

லிஸ்ட் எங்கே?

எனினும், பட்டியல் மாற்றம் என்பதே தேவேந்திரகுல வேளாளர்களின் நிரந்தர இலக்காகும். பெயர் மாற்றம் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய சமூக அடையாளமாக கருதப்பட்டாலும் பட்டியலினத்திலிருந்து விலக்கு பெறாமல் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் விடுதலை பெற்றதாகவோ முழு அங்கீகாரத்தையும் பெற்றதாகக் கருத இயலாது என்பதைதான் கிருஷ்ணசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

அர்ஜெண்ட்

அர்ஜெண்ட்

கடந்த வருடம் ஒரு கூட்டத்தில் கிருஷ்ணசாமி பேசும்போது, "கடந்த காலங்களில் சில இடங்களுக்கு அவசரப்பட்டு கூட்டணி வைத்து தவறிழைத்து விட்டோம்.. நமக்கு அமைந்த கூட்டணிகள் நேர்மையான கூட்டணி இல்லை.. நம்முடைய வாக்குகளை அவர்கள் பெற்று வெற்றி பெற்றார்கள்.. இனி ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும், இல்லையென்றால் தனித்து போட்டியிடுவோம்" என்று கூறியிருந்ததையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.. கிருஷ்ணசாமியை பொறுத்தவரை, எந்த தேர்தலிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை பெற்றதில்லை..

 ரேட் பேசியாச்சாமே

ரேட் பேசியாச்சாமே

அதுமட்டுமல்ல, கடந்த தேர்தலின்போது, ஜனநாயக முறையில் தேர்தல் நடக்க வேண்டும் என்பதற்காகவே, தமிழக அரசியல் கட்சிகளை இணைத்து ஒரு கூட்டத்தை சென்னையில் நடத்தியிருந்தார் கிருஷ்ணசாமி.. இந்த முறை யாருடன் இவர் கூட்டணி வைக்க போகிறார் என்று உறுதியாக தெரியவில்லை.. ஆனால், திமுகவை விடாமல் விமர்சித்து வருகிறார்.. மின்கட்டண உயர்வு முதல் அனைத்து விஷயங்களையும் தாறுமாறாக கண்டித்தும் வருகிறார்.. தமிழக போக்குவரத்து துறையை தனியாருக்கு வார்ப்பதாக ஒரு தகவல் பரவியதுமே முதல் நபராக வந்து கண்டனம் சொன்னார் கிருஷ்ணசாமி..

 தாரை வார்ப்பா

தாரை வார்ப்பா

"சென்னை மாநகரத்திற்கு உட்பட்ட 1000 பேருந்துகளையும், 300 கோடி முதல் 400 கோடி வரை மாநில அரசின் செலவில் கட்டப்பட்டு வரும் பெரும் பேருந்து நிலையங்களையும் தனியார் வசம் விட்டு விட முடிவு செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன.. அரசு பேருந்துகளையும், பேருந்து நிலையங்களையும் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பது தமிழகத்தையே விற்பதற்கு சமமாகாதா? என்று காட்டமாக கேட்டிருந்தார்.

 60 MLA-க்கள்

60 MLA-க்கள்

இதற்கு போக்குவரத்து துறை சார்பில் மறுப்பு வெளியிட்டு பதிலளிக்கப்பட்டாலும், திமுக எதிர்ப்பு என்பதில் கிருஷ்ணசாமி உறுதியாக உள்ளார்.. அந்தவகையில், வரும் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் புதிய தமிழகம் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். நேற்றுகூட, தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, நேரடியாகவே சென்று ஆதரவை தந்தார் கிருஷ்ணசாமி.. அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழக சட்டசபையில் 60க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை உள்ளடக்கிய அதிமுக எதிர்க்கட்சியாக உள்ளது.. நாடாளுமன்றம் சட்டமன்றம், நீதிமன்றம் இவை மூன்றும் நாட்டில் ஆன்மாவாக உள்ளன. ஆனால் இவை மூன்றும் ஒன்று மற்றொன்றின் அதிகாரத்தில் தலையிடுவது இல்லை.

 பச்சை படுகொலை

பச்சை படுகொலை

ஆளும் கட்சியாக இருக்கும் என்ற ஒரே காரணத்தால் திமுக நினைத்த மட்டும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறது. எனினும், அதிமுக உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி மறுக்கிறது.. அதிமுக எம்எல்ஏக்கள் சேர்ந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவரை தேர்ந்தெடுத்துள்ளனர், ஆனால் அதை சபாநாயகர் அங்கீகரிக்க மறுப்பது ஜனநாயக படுகொலை" என்றார்.. அந்தவகையில், திமுகவின் எதிர்ப்பு ஒருபக்கம் தொடர்வதுடன், அதிமுகவுக்கான ஆதரவும் புதிய தமிழகம் கட்சியில் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது..!!

English summary
Do you know why Dr Krishnasamy supports Edappadi Palanisamy and whats puthiya thamizhagam partys plan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X