பிரியாணி, மாட்டுக்கறி, மருத்துவ கல்லூரி.. Dr. Palஐ அடித்து துவைக்கும் நெட்டிசன்கள்.. என்ன காரணம்?
சென்னை: சமூக வலைத்தளங்களில் புகழ்பெற்ற டாக்டர் பால் மீது அடுக்கடுக்காகப் பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். துரித உணவுகள், மருத்துவக் கல்லூரி, மாட்டுக்கறி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இணையத்தில் இப்போது பெரிய விவாதமே நடந்து வருகிறது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இணைய உலகில் ரொம்பவே பிரபலமாக இருக்கும் மருத்துவர்களில் ஒருவர் டாக்டர் பழனியப்பன் மாணிக்கம்! டாக்டர் பால் என இவர் இணைய உலகில் பேமஸ்! தமிழகத்தைச் சேர்ந்த இவர் அமெரிக்காவில் இரைப்பை குடல் மருத்துவராக இருக்கிறார். உடலுக்குக் குறிப்பாக நமது வயிற்றுக்கு என்ன மாதிரியான உணவுகள் நல்லது என்பது குறித்து இவர் தொடர்ச்சியாகச் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவருக்குக் கோடிக்கணக்கான பலோயர்ஸ் இருக்கிறார்கள்.

வெடித்த மோதல்
பாஸ்ட் புட் மற்றும் அல்ட்ரா ப்ராசஸ்டு உணவுகளுக்கு எதிராகவே இவரது வீடியோக்கள் இருக்கும். அப்படித் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் சினிமா தியேட்டர் செல்லும்போது, நாம் சாப்பிடும் அல்ட்ரா ப்ராசஸ்டு உணவுகள் குறித்து வீடியோவை வெளியிட்டிருந்தார். அதைச் சாப்பிடுவது உடலுக்குக் கெடுதல் என்றும் அதைச் சாப்பிடக்கூடாது என்பது போலவும் வீடியோவை பதிவிட்டார். இது இணையத்தில் டிரெண்டானது.
இதற்கிடையே டாக்டர் பால் கருத்துகளை ட்விட்டரில் லிவர் டாக்டர் என்ற ஐடியில் செயல்படும் மற்றொரு மருத்துவர் கடுமையாகச் சாடியிருந்தார். அல்ட்ரா ப்ராசஸ்டு உணவுகளை எப்போதாவது குறைந்த அளவில் சாப்பிடுவதால் எந்தவொரு பாதிப்பும் இருக்காது என்றும் மக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ போடுவதை நிறுத்த வேண்டும் என்றும் சாடியிருந்தார். மக்களுக்கு உண்மையாக மருத்துவம் பற்றி சொல்லித் தர வேண்டும் என்றால் அதை எளிமையாக விளக்க வேண்டுமே தவிர இதுபோல செய்யக்கூடாது எனச் சாடியிருந்தார்.
மாறி மாறி விமர்சனம்
இந்தியாவின் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் வெளியிட்டிருந்த வழிகாட்டுதல்களிலும் கூட பதப்படுத்தப்பட்ட உணவுகளை முழுமையாகத் தவிர்க்கச் சொல்லவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய லிவர் டாக்டர், மக்களை அறிவில் குறைந்தவர்களாக நினைக்கக் கூடாது என்றும் மக்களைப் பயமுறுத்தும் வீடியோக்களை விட்டுவிட்டு, உணவை எப்படிச் சரியாக அனுபவிப்பது என்று கற்றுக்கொடுக்க வேண்டும் என பதிவிட்டிருந்தார்.
இவரது இந்த ட்வீட்டும் இணையத்தில் டிரெண்டானது. அதற்குப் பதிலளித்த டாக்டர் பால், அல்ட்ரா ப்ராசஸ்டு உணவுகளைச் சிறியளவில் மட்டும் எடுத்துக் கொள்வது தவறில்லை என்றாலும் நாம் யாரும் அதை ஒன்றுடன் நிறுத்த மாட்டோம் என்றும் முழுமையாக நிறுத்தும்படி சொன்னால் தான் குறைந்தபட்சம் 50% அல்ட்ரா ப்ராசஸ்டு உணவுகளைத் தவிர்ப்பார்கள் என்பதாலே அப்படிச் சொல்வதாகக் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், இந்த விவகாரத்தில் இரு தரப்பும் மாறி மாறி இரு தரப்பும் சாடி வந்தனர். அவர்கள் ட்வீட்களை இணையத்தில் டிரெண்டாது.
மாட்டுக்கறி சர்ச்சை
இதைத் தொடர்ந்து டாக்டர் பாலின் பழைய வீடியோக்களில் அவர் சொன்ன கருத்துகளை எடுத்தும் நெட்டிசன்கள் அடிக்க ஆரம்பித்தனர். முன்பு ஒரு வீடியோவில் அவர் மாட்டுக்கறி தொடர்பாகச் சில கருத்துகளைக் கூறியிருப்பார். அதாவது மாட்டுக்கறி உட்பட red meatஐ அதிகம் சாப்பிடும்போது அது பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை உருவாக்கும் எனச் சொல்லி இருந்தார். அதையும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.
Because I am a doctor, and a doctor means teacher, I have to correct health misinformation when I see it. Now dont take this as personal. I am educating my friends here for their own benefit.
— TheLiverDoc™ (@theliverdr) December 10, 2025
"Higher consumption of red meat is associated with colon cancer risk - this is proven… https://t.co/NzcpmkTRLb
லிவர் டாக்டரும் இதற்குப் பதிலடி கொடுத்திருந்தார். அதாவது அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் மாட்டுக்கறிக்கும் கேன்சர் ஆபத்திற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக எங்கும் கூறவில்லை எனச் சொல்லி இருக்கிறார். பிராசஸ் செய்யப்பட்ட இறைச்சி தான் பிரச்சினையே தவிர மாட்டுக்கறி இல்லை என குறிப்பிட்டார். எனவே, முறையாகச் சமைக்கப்பட்ட மாட்டுக்கறியை அளவாகச் சாப்பிடுங்கள் என சொல்ல வேண்டுமே தவிர, மாட்டுக்கறி சாப்பிட்டாலே கேன்சர் எனச் சொல்லக்கூடாது எனப் பதிவிட்டார். இதை நெட்டிசன்கள் பலரும் ரிட்வீட் செய்தனர்.
மருத்துவக் கல்லூரிகள்
அதேபோல பாடகி சின்மயி உடனான நேர்காணலில்.. தமிழகத்தில் அதிக மருத்துவக் கல்லூரிகள் இருப்பதாகவும் அதைக் குறைக்க வேண்டும் என்றும் கூறியிருப்பார். அந்த வீடியோவில் மருத்துவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது.. ஒர்க்-லைப் பேலன்ஸ் இல்லை என்று எல்லாம் சொல்லும் டாக்டர் பால், தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் அதிகமாக இருக்கிறது.. அதைக் குறைக்க வேண்டும் என்று சொல்லி இருப்பார். மேலும், மருத்துவர்களுக்கான சம்பளமும் குறைவு என பேசியிருப்பார்.
I'm surprised that Dr. Pal suggest to reduce medical colleges in Tamilnadu!! 🙄🙄@drpal_manickam https://t.co/OvUO42JqjS pic.twitter.com/WAB2Cnassj
— tnwatch (@tnwatch1) December 10, 2025
சம்பளம் குறைவு என்பது ஓகே அதிகரிக்க வேண்டும்.. ஆனால், மருத்துவர்களுக்கு ஒர்க்-லைப் பேலன்ஸ் இல்லை.. பிரஷர் அதிகம் எனச் சொல்லிவிட்டு, அடுத்த வரியே மருத்துவக் கல்லூரிகளைக் குறைக்க வேண்டும் என்றால் என்ன அர்த்தம்.! வேலைப் பளு அதிகம் என்றால் அதைக் குறைக்கக் கூடுதல் மருத்துவர்கள் தேவை.. அப்போது மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கத் தானே வேண்டும் என நெட்டிசன்கள் சொல்லி வருகிறார்கள்.

நெட்டிசன்கள்
இதை திமுக ஆதரவாளர்களும் கூட தங்கள் பக்கத்திலும் பகிர்ந்து வருகிறார்கள். Red Meat குறித்த விளக்கத்தை திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும், மருத்துவக் கல்லூரிகள் தொடர்பான அவருடைய கருத்துகளையும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தே வருகிறார்கள்.
-
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு












Click it and Unblock the Notifications