சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாரடைப்பு வந்தவர்கள் உடலுறவு கொள்ளலாமா? உடலுறவுக்கு முன் என்ன செய்ய வேண்டும்? மருத்துவர்கள் விளக்கம்

லேசான மாரடைப்பு வந்து ஸ்டன்ட் வைத்திருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் ஹெலி அட்டாக் வந்து பிழைத்தவர்கள் இதைவிட கவனமாக இருக்க வேண்டும்.

Google Oneindia Tamil News

சென்னை: மாரடைப்பு வந்த பின்னர் செக்ஸில் ஈடுபடுவது குறித்து பலருக்கும் சந்தேகம் இருந்து வருகிறது. இது குறித்து மருத்துவர்கள் சில விளக்கங்களை கொடுத்திருக்கின்றனர்.

பாலியல் செயல்பாடு அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானதாக இருந்தாலும், மனிதர்களை போல ஆண்டு முழுவதும் பாலியல் செயல்பாடுகளில் எந்த உயிரினங்களும் ஈடுபடுவதில்லை. சாதாரண மனிதர்கள் செக்ஸ் வைத்துக்கொள்வதில் எந்த பிரச்னையும் இருப்பதில்லை. ஆனால், மாரடைப்பு வந்தவர்கள் செக்ஸில் ஈடுபடுவதற்கு முன்னர் சில விஷயங்களை கவனிக்க வேண்டியுள்ளது. எப்போது செக்ஸில் ஈடுபடலாம் எப்போது ஈடுபடக்கூடாது என்பதை மருத்துவர்கள் விளக்கியுள்ளனர்.

இதயத்திற்கு செல்லும் குழாய்களில் ஏற்படும் அடைப்பே மாரடைப்பு என்று அழைக்கப்படுகிறது. இதற்கு சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தவர்கள் அன்றாட வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். அதாவது, மாரடைப்புக்கு பிறகு நோயாளிகள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றனர். அதில் முதல் வகை நோயாளிகளுக்கு இதய துடிப்பு சீரானதாக இருக்கும். இதில் எந்த மாற்றமும் வராது.

12 வயசு சிறுவன் மாரடைப்பால் பலி! குழந்தைகளுக்கு மாரடைப்பு அபாயம்! 12 வயசு சிறுவன் மாரடைப்பால் பலி! குழந்தைகளுக்கு மாரடைப்பு அபாயம்!

6 வாரம்

6 வாரம்

இரண்டாவது வகை நோயாளிகளுக்கு இதய துடிப்பில் திடீர் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஒரே சீரான நிலையில் இது இருக்காது. சில சமயம் பலவீனமாகவும், சில சமயம் மிகவும் வேகமாகவும் இருக்கும். எனவே இவர்கள் இருவருமே மிக கவனமாக இருக்க வேண்டும். முதல் வகை நோயாளியை விட இரண்டாவது வகை நோயாளிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். லேசான மாரடைப்பால் ஸ்டன்ட் பொருத்தப்பட்ட முதல் வகை நோயாளி ஓரிரு வாரங்களுக்குள் தங்களது செக்ஸ் வாழ்க்கையை தொடங்கலாம். ஆனால் இரண்டாவது நோயாளிகள் குறைந்தது 6 வாரங்களாவது காத்திருக்க வேண்டும்.

வெயிட் பண்ணுங்க

வெயிட் பண்ணுங்க

லேசான மாரடைப்பிலிருந்து தப்பியவர்கள் சாப்பிட்டவுடன் உடலுறவு கொள்வதை தவிர்க்க வேண்டும். அதுவும் அசைவ உணவு எடுத்துக்கொண்டாலோ அல்லது, எண்ணெய் பலகாரங்கள் கொண்ட ஹெவி உணவுகளை எடுத்துக்கொண்டாலோ அவர்கள் குறைந்தது 1-3 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். இப்படி காத்திருப்பதால் உணவு ஜீரணம் ஆகிவிடும். செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது இதயம் வேகமாக துடிக்கும். அதேபோல ரத்த அழுத்தமும் அதிகரிக்கும். இப்படி இருக்கையில் சாப்பிட்ட உடன் செக்ஸில் ஈடுபட தொடங்கினால் உடலின் செயல்பாடுகள் வேகமெடுத்து இதயத்திற்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.

உணவு செரிமானம்

உணவு செரிமானம்

எனவே உணவு செரிமானத்திற்கு போதுமான நேரம் ஒதுக்குங்கள். அப்போதுதான் இதயத்தின் மீதான வேளை பளு குறையும். அதேபோல இரண்டாவது வகை நோயாளிகள் செக்ஸில் ஈடுபடுவதற்கு முன்னர் சிறு சிறு உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். மாடி படி ஏறி இறங்குதல், விறுவிறுப்பாக நடைப்பயிற்சி செய்தல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். இந்த பயிற்சியின் போது உடல் களைப்பாக இருக்கிறதா? எந்த அளவுக்கு மூச்சு வாங்குகிறது? இதயத்தில் வலி இருக்கிறதா? போன்றவற்றை 'நோட்' செய்ய வேண்டும். இவையெல்லாம் இருப்பின் உடனடியாக செக்ஸ் எண்ணத்தை கைவிட வேண்டும்.

மருத்துவர்கள்

மருத்துவர்கள்

மட்டுமல்லாது இந்த வலி சிறிது நேரத்திற்கு பின்னரும் தொடர்ந்தால் அருகில் இருக்கும் மருத்துவர்களை அணுக வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேற்குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் மிகச்சரியாக பொருந்தாது. ஒவ்வொருவரின் உடல் எடை, பாலினம், உணவு பழக்கம் போன்றவற்றால் இது வேறுபடலாம். எனவே இதையே முதன்மையாக கருதாமல் தங்களது மருத்துவரை அணுகி அதன் பின்னர் செக்ஸில் ஈடுபட வேண்டும்.

English summary
Many people are skeptical about having sex after a heart attack. Doctors have given some explanations about this. People who have had a mild heart attack and have stents should be careful. But heli attack survivors should be more careful.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X