Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அழுத்தம் மட்டும் போதாது.. ஆக்கப்பூர்வமான அறிக்கை தேவை.. திமுகவுக்கு சபாஷ் சொன்ன டாக்டர் ஷர்மிளா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்விலிருந்து விலக்கு பெற அழுத்தம் மட்டும் போதாது, ஆக்கப்பூர்வமான அறிக்கை தேவை. அந்த அறிக்கையை ஏ.கே. ராஜன் குழு சமர்ப்பித்துள்ளது. எனவே இன்று இல்லாவிட்டாலும் என்றாவது நீட்டிலிருந்து விலக்கு கிடைக்கும் என டாக்டர் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.

பன்முகத் திறமை கொண்டவர்- மிகச் சிறந்த நடனக் கலைஞர், மருத்துவர், ஆங்கர், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகை, சிறந்த பாடகி- எல்லாவற்றுக்கும் மேல் சமூக அக்கறை கொண்ட சிறந்த சிந்தனையாளராக அறியப்படுபவர் டாக்டர் ஷர்மிளா.

அவர் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டி கேள்வி பதில் வடிவில்:

எப்போது அரசியல்

எப்போது அரசியல்

கே: உங்கள் கணவர் திருப்போரூர் எம்எல்ஏவாக இருக்கிறார், நீங்கள் எப்போது அரசியலுக்கு என்ட்ரி கொடுக்க போகிறீர்கள்

ப: நாம் எல்லாருமே அரசியலில் இருந்து கொண்டுதான் இருக்கிறோம். சாப்பாடு முதல் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் வரை எல்லாவற்றிலும் அரசியல் கலந்திருக்கிறது. எல்லார் வாழ்க்கையிலும் அரசியல் இருக்கிறது. ஒரு பதவியில் இருந்தால்தான் அரசியல் என்றில்லை.

கணவருக்காக பிரச்சாரம்

கணவருக்காக பிரச்சாரம்

கே: உங்கள் கணவர் பாலாஜி அவர்கள் தேர்தலில் போட்டியிட்ட போது நீங்கள் பிரச்சாரம் செய்தீர்களா

ப: நான் பிரச்சாரம் செய்தேன். நேரடியாக வீடு வீடாக தொகுதிக்கு போய் பிரச்சாரம் செய்தோம். நேரடியாக மக்களை சந்தித்து மக்களின் குறைகள் என்ன என்பதை கேட்டு தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருந்தன. கடந்த அதிமுக ஆட்சியில் எதையெல்லாம் செய்யவில்லை என்பதை மக்களிடம் கேட்டு தெரிந்து கொண்டோம். மக்களும் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற மனநிலையில்தான் இருந்தார்கள். அதை நாங்கள் நேரடியாக பார்த்தோம். களத்தில் இறங்கி வேலை பார்த்தது நல்ல அனுபவமாக இருந்தது.

ஆலோசனை சொல்வீர்களா

ஆலோசனை சொல்வீர்களா

கே: எம்எல்ஏவாகிவிட்டார் நலத்திட்டங்கள் குறித்த ஆலோசனை ஏதும் சொல்கிறீர்களா

ப: நான் அவருடைய வேலையில் தலையிட மாட்டேன். அவர் கேட்டாலொழிய எந்த ஆலோசனைகளையும் நான் கொடுக்க மாட்டேன். அது போல் என்னுடைய வேலைகளிலும் நான் கேட்டாலொழிய அவர் எந்த ஆலோசனைகளையும் சொல்ல மாட்டார். சம்பந்தப்பட்ட விஷயங்களில் என்னுடைய கருத்தை கேட்டு தெரிந்து கொள்வார்.

பத்மசேஷாத்ரி பள்ளி

பத்மசேஷாத்ரி பள்ளி

கே: பத்மசேஷாத்ரி பள்ளியில் பாலியல் புகார் குறித்து நீங்கள் பேசிய விஷயங்கள் விவாதத்தை ஏற்படுத்தியது. அது குறித்து உங்கள் கருத்து என்ன

ப: நான் கூறிய கருத்துகளில் இன்னமும் உறுதியாகவே இருக்கிறேன். வீட்டில் குழந்தைகள் செலவிடுவதை காட்டிலும் அதிக நேரம் குழந்தைகள் பள்ளிகளில்தான் செலவிடுகிறார்கள். ஒரு ஆன்லைன் வகுப்பிலேயே ஒரு ஆசிரியர் அநாகரீகமாக நடந்து கொள்கிறார் என்றால் பள்ளிகளில் இருக்கும் போது இது போன்ற ஆசிரியர்களால் மாணவிகளுக்கு எந்தமாதிரியான பாதுகாப்பு இருக்கும்?

இந்த விஷயத்தில் மதச்சாயம் பூசாமல் எந்த பள்ளியாக இருந்தாலும் எந்த மதத்தினர் நடத்துவதாக இருந்தாலும் அதன் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறையும் பள்ளி உரிமையாளர்களும் அவ்வப்போது சோதனைகளை நடத்த வேண்டும். இது ஆசிரியர் செய்த தவறு, இதற்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மேம்போக்காக கை கழுவிவிடக் கூடாது.

ஆதரவு

ஆதரவு

கே: சமீபகாலங்களாக திமுக கூட்டணிக்கு மட்டும் ஆதரிப்பது போன்று உங்கள் டிவிட்டர் பக்க கருத்துகள் இருக்கின்றனவே, இதற்கு காரணம் என்ன, கணவர் விடுதலை சிறுத்தை கட்சியில் இருப்பதால் அவர் சார்ந்த கூட்டணிக்கு ஆதரவாக பேசுகிறார் என்ற கருத்தும் நிலவுகிறதே?

ப: அப்படியெல்லாம் இல்லை, பாஜகவினர் செய்த நலத்திட்டங்களையும் நான் பாராட்டியுள்ளேன். ஒரு சிலவற்றை ரீட்வீட்டும் செய்துள்ளேன். நல்லது செய்திருந்தால் கண்டிப்பாக பாராட்டுவேன். இல்லாத போது அதுகுறித்து கேள்வியையும் கேட்பேன். துரதிருஷ்டவசமாக இவர்கள் செய்யும் விஷயத்தை பாராட்டுவதை விட கேள்வி கேட்கும் சூழல்கள்தான் அமைகிறது என்பதுதான் உண்மை.

எது தீமை

எது தீமை

கே: தமிழகத்திற்கு மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களில் எது நன்மை, எது தீமை?

ப: தூய்மை இந்தியா திட்டம் நல்ல முன்மாதிரி திட்டம். ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு வீடுகளிலும் கழிப்பறைகளை கொடுக்க வேண்டும் என்பது நல்ல திட்டம். இது ஓரளவுக்கு வெற்றி கண்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடி 100 சதவீதம் இலக்கை எட்டிவிட்டோம் என மிகவும் மிகைப்படுத்தி சொல்வதை ஏற்க முடியாது.

புள்ளி விவரங்களை எடுத்து பார்த்தால் கழிப்பறை திட்டத்தில் அவர்கள் 60 முதல் 68 சதவீதம் வரை மட்டுமே சாதித்துள்ளார்கள். அது போல் சுகாதார உள்கட்டமைப்பை நாங்கள் மேம்படுத்தியுள்ளதாக சொல்கிறார்கள். இலவச மருத்துவ சிகிச்சை என்கிறார்கள். இதெல்லாம் தேசிய அளவில் திட்டங்களை கொண்டு வருவதற்கு முன்பே தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியிலும் கருணாநிதி ஆட்சியிலும் இது போன்ற திட்டங்கள் ஏற்கெனவே இருந்துள்ளது.

விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் கூட ஊழல் நடந்துள்ளது. நல்ல திட்டங்கள் என எதை கொண்டு வந்தாலும் அதை முறையாக அமல்படுத்துகிறார்களா என்றால் அது இல்லை. பணமதிப்பிழப்பு தொடங்கி கொரோனா முதல் அலையில் திடீர் லாக்டவுன் வரை, கொரோனா இரண்டாவது அலையை சரியாக கையாளாதது , விலை வாசி உயர்வு, பணவீக்கம், வேலையின்மை உள்ளிட்டவைகளில் மத்திய அரசு தோல்விதான் கண்டது.

நீட் தேர்வு விலக்கு

நீட் தேர்வு விலக்கு

கே: நீட் தேர்வு குறித்து உங்கள் கருத்து என்ன, சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த அழுத்தம் போதும் என நினைக்கிறீர்களா

ப: கண்டிப்பாக அழுத்தம் கொடுக்க வேண்டும். திமுக அரசு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். ஏகே ராஜன் கமிட்டியை உருவாக்கியுள்ளார்கள். அதில் கருத்து பதிவு செய்த 86 ஆயிரம் பேரில் 85 ஆயிரம் பேர் நீட் தேவையில்லை என சொல்லியுள்ளார்கள். நீட் தேர்வால் பாதிக்கப்படும் குழந்தைகள், பெற்றோரிடம் கருத்து கேட்டு அதன் பாதகங்களை முன் வைத்து அடுத்த கட்ட நடவடிக்கையை திமுக அரசு எடுக்கும்.

அதிமுக அரசும் அழுத்தம் கொடுத்தது. ஆனால் வலுவான கருத்தை முன்வைக்கவில்லை. தற்போது ஏ.கே ராஜன் குழுவின் ஆய்வறிக்கை நீட் விலக்கு கோரலுக்கு வலு சேர்க்கும். இந்த ஆண்டு இல்லாவிட்டாலும் வருங்காலத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+