சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நானே ஓசில குடிச்சிட்டு வரேன்.. என்கிட்ட ஃபைன் கேக்குறீங்க.. சென்னையில் போலீஸாருடன் பெண் வாக்குவாதம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் பெண் ஒருவர் குடிபோதையில் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் வைரலாகி வருகிறது. இதையடுத்து போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் இணைந்து இரவு நேர ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் ஆங்காங்கே முக்கிய சந்திப்புகளில் நின்றுக் கொண்டு வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதில் லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டுவது, குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது, பைக்கில் 3 பேர் செல்வது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட குற்றங்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

குடிபோதை பழசு.. இப்போ நடுங்க வைக்கிறது கஞ்சா.. போதையில் தமிழக அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர்கள் குடிபோதை பழசு.. இப்போ நடுங்க வைக்கிறது கஞ்சா.. போதையில் தமிழக அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர்கள்

வாகன தணிக்கை

வாகன தணிக்கை

இந்த நிலையில் நேற்று இரவு சைதாப்பேட்டை சாலையில் வாகன சோதனைகளில் போலீஸார் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக கார் ஒன்று தள்ளாடியபடியே வந்தது. இதை கண்டதும் போலீஸார் அந்த காரை நிறுத்தினர். அப்போது உள்ளே பெண் ஒருவர் காரை இயக்கியதும் அவர் கண்கள் செருகி அதிக போதையில் இருந்ததும் தெரியவந்தது.

கீழே இறங்குமாறு அழைத்த போலீஸ்

கீழே இறங்குமாறு அழைத்த போலீஸ்

இதையடுத்து அவரை கீழே இறங்குமாறு கூறினர். அதற்கு அந்த பெண் ஏன் என கேட்டார். அதற்கு போலீஸார் குடி போதையில் இருக்கிறார்களா என்பதை செக் செய்யும் கருவியை (ப்ரீதலைசர்) கொண்டு சோதனை செய்துவிட்டு அனுப்பிவிடுகிறோம் என கூறினர். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்தார்.

கார் சாவி

கார் சாவி

உடனே போலீஸார் கார் சாவியை எடுத்துக் கொண்டு வந்துவிட்டனர். பின்னர் பின்னாடியே அந்த பெண் வந்தார். அவருக்கு மது குடிபோதை இருக்கிறதா என சோதனை செய்யும் கருவியை வைத்து ஊத சொன்னார்கள். அவர் ஊதிய போது அளவுக்கு அதிகமாக குடித்திருப்பது தெரியவந்தது. மேலும் சாலையில் நிற்கும் போதும் நிதானம் இல்லாமல் இருந்தார்.

குடித்துவிட்டவாகனம் ஓட்டுவது தவறு

குடித்துவிட்டவாகனம் ஓட்டுவது தவறு

பின்னர் போலீஸார் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது தவறில்லையா, இப்படி செய்யலாமா என கேட்டனர். அதற்கு அந்த பெண் யாருதான் சார் குடித்துவிட்டு வண்டி ஓட்டலை. நேத்துலாம் யாரையும் பிடிக்காமல் இன்னிக்கு என்ன மட்டும் வந்து ஏன் பிடிக்கிறீங்க என கேட்டார். அதற்கு அபராதம் செலுத்துவதற்கான சலானை போலீஸார் கையடக்க கருவியில் தயார் செய்தனர்.

அபராதம்

அபராதம்

அதற்கு அந்த பெண் சார் என்கிட்ட கொடுப்பதற்கு எதுவும் இல்லை, அபராதம் ஏன் போடறீங்க. என்னால் கட்ட முடியாது, பெண் என்பதால் என்னை நிறுத்தி இப்படி செய்கிறீர்களா, நீங்கள் என்கிட்ட என்ன சார் சொன்னீங்க? இந்த மெஷினில் ஊதி பார்த்துவிட்டு சாவியை கொடுக்கிறேனுதானே சொன்னீங்க. இப்ப ஏன் சாவி கொடுக்க மாட்றீங்க என கேட்டார்.

போலீஸ் ஸ்டேஷன்

போலீஸ் ஸ்டேஷன்

மேலும் வாங்க சார் வாங்க போலீஸ் ஸ்டேஷன் போகலாம் என அழைத்தார். பின்னர் சலானை ஏன் போடீங்க! யாரை கேட்டு எனக்கு ஃபைன் போட்டீங்க! என்னால இப்ப பணம் கொடுக்க முடியாது என்கிறார். பொதுவாக அந்த சலானை பெற்று கொண்டு அடுத்த நாள் போலீஸ் நிலையத்தில்தான் பணத்தை செலுத்த வேண்டும். ஆனால் இதை சொல்ல போலீஸார் முற்படும் போது அவர்களை சொல்லவிடாமல் அந்த பெண் பாட்டுக்கு புலம்பி கொண்டே இருந்தார். என்னால கொடுக்க முடியாது, நான் என்ன உங்கள மாதிரி வேலையா பார்க்கிறேன். நானே ஓசியில் குடித்துவிட்டு வருகிறேன். எனக்கு அபராதம் போடுகிறீர்கள்.

English summary
Chennai woman drinks liquor and drive the car. Police stops the car and put fine. She opposed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X