Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எம் ஆர் விஜயபாஸ்கரை விடாது விரட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை - 8 மணி நேர விசாரணை... விரைவில் கைது?

சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் ஆஜராகியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 2 வது நாளாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேற்று 8 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். விசாரணைக்கு பிறகு விரைவில் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த ஜூலை 22ஆம் தேதி சோதனை நடத்தினர். கரூரில்உள்ள வீடு, நிறுவனங்கள், மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகருக்குசொந்தமான இடங்கள், சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள விஜயபாஸ்கர் வீடு, அவரதுஉதவியாளர்கள், ஆதரவாளர்களின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடந்தது. இதில், கணக்கில் வராத ரூ.25.56 லட்சத்தை போலீஸார் கைப்பற்றினர்.

DVAC Summoned to MR Vijayabaskar appear for trial on 2nd day

சொத்து ஆவணங்கள், முதலீட்டு ஆவணங்கள், பணப் பரிவர்த்தனை ஆவணங்களையும் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எம்ஆர் விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக 55 சதவீத சொத்துகளை சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட போது தனது வேட்புமனுவில் ரூ.2.51 கோடி சொத்து இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட போது சொத்து மதிப்பாக ரூ.8.62 கோடி என வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புதுறையினர் கடந்த மாதம் 27ஆம்தேதி சம்மன் அனுப்பினர். உள்ளாட்சித் தேர்தலை காரணம் காட்டிநேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், அக்டோபர் 25ஆம் தேதி சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு 2வது முறையாக லஞ்சஒழிப்புத் துறை சம்மன் அனுப்பியது. அதன்படி, ஆலந்தூர் லஞ்சஒழிப்புத் துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் நேற்று காலை ஆஜராகினர். அவர்களிடம் 6 அதிகாரிகள் விசாரணை நடத்தினர். காலை 12 மணி அளவில் தொடங்கிய விசாரணை மாலை வரை நீடித்தது.

நேற்றைய தினம் 8 மணி நேர விசாரணை முடிந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து லஞ்சஒழிப்புத் துறை அலுவலகத்தில் ஆஜராக விஜயபாஸ்கரிடம் அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணைக்கு பிறகு விரைவில் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+