பொதுக்குழுவில் வந்து செல்வாக்கை நிரூபிங்க பார்க்கலாம்.. ஓபிஎஸ்க்கு சவால்விட்ட ‘விடாப்பிடி’ எடப்பாடி!
சென்னை : பொதுக்குழுவில் ஓபிஎஸ் செல்வாக்கை நிரூபித்து, தனக்கு தொண்டர்கள் ஆதரவு இருப்பதை நிரூபிக்கட்டும் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி.
Recommended Video
ஒன்றிணைந்து செயல்படலாம் என அழைப்பு விடுத்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை நிராகரித்துள்ளார் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, மீண்டும் இணைந்து செயல்படலாம் என எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அழைப்பு விடுத்தார் ஓபிஎஸ்.
ஆனால், ஈபிஎஸ்ஸோ, அவருடன் இணைந்து செயல்படும் முடிவை நிராகரித்து, பொதுக்குழுவில் வந்து பலத்தை நிரூபிக்குமாறு சவால் விடுத்துள்ளார். முன்னதாக, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடும் செய்துள்ளது எடப்பாடி தரப்பு.

ஓபிஎஸ்ஸின் முடிவு
ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், பொதுக்குழு செல்லாது என்றும் ஜூன் 23 ஆம் தேதி இருந்த நிலையே தொடர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, இரு தரப்பும் இணைந்து செயல்பட வேண்டும் எனும் முயற்சியில் மீண்டும் இறங்கியுள்ளார் ஓபிஎஸ். இந்நிலையில், சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கழகம் ஒன்றுபட்டு தேர்தலை சந்தித்தபோது தமிழகத்தில் எந்த சக்தியும் அதிமுகவை வெல்ல முடியாத நிலை இருந்தது. எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. அவற்றை மனதில் இருந்து அப்புறப்படுத்தி கட்சி ஒன்றுபட வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஈபிஎஸ்ஸுக்கு அழைப்பு
மேலும், நான்கரை ஆண்டு காலம் அன்புச் சகோதரர் எடப்பாடியுடன் பயணித்தோம். மீண்டும் அந்த நிலை வரவேண்டும் என்பதே எங்கள் தலையாய கோரிக்கை. எங்களது எண்ணம், செயல் எல்லாமே, இணைப்பு இணைப்பு இணைப்புதான். தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் எங்களுக்கு இல்லை. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். அவை தொலையட்டும். எங்கள் தரப்புக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் பரவாயில்லை. கட்சி ஒற்றுமையே முக்கியம். இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும்." எனத் தெரிவித்திருந்தார். இதன் மூலம் நேரடியாகவே எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஈபிஎஸ் பேட்டி
இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஒற்றைத் தலைமை என்பது தொண்டர்களின் விருப்பம். அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அடிப்படை தொண்டர்களின் பிரதிநிதிகள். தொண்டர்கள் விருப்பத்தை பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தனர். அதிமுக விதிகளை மாற்றவோ, பதவிகளுக்கு ஒப்புதல் தரவோ பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றார்.

பொதுக்குழுவுக்கு அழைப்பு
மேலும் பேசிய எடப்பாடி பழனிசாமி, தொண்டர்கள் பலம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருந்தால். தனது செல்வாக்கை பொதுக்குழுவில் நிரூபிக்கலாமே. பொதுக்குழுவுக்கு வந்து ஓபிஎஸ் தனது கருத்தை தெரிவிக்க வேண்டும். பொதுக்குழுவுக்கு வாருங்கள் என ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

முடியவே முடியாது
பொதுக்குழுவில் தனக்கு பலம் அதிகம் இருப்பதைத் தொடர்ந்தே, உயர் நீதிமன்ற உத்தரவின் ஒரு முக்கியமான பாயிண்டை பயன்படுத்தி, ஓபிஎஸ்ஸை பொதுக்குழுவுக்கு அழைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இரு தலைவர்களும் இணைந்து சட்டப்பூர்வமான முறையில் பொதுக்குழுவை நடத்தி முடிவெடுக்கலாம் என்பதே நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம். அதையொட்டியே, ஓபிஎஸ்ஸின் சமாதான நடவடிக்கையை நிராகரித்து பலத்தை நிரூபிக்குமாறு கூறியுள்ளார் ஈபிஎஸ்.
-
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications