எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்! ஹாப்பி மூட் எடப்பாடி டீம்! ஒன்னும் பண்ண முடியாதாம்! அப்போ ஓபிஎஸ்?
சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி தற்போது சில சிக்கல்களை சந்தித்து வந்தாலும் இறுதியில் தனது தரப்பே வெற்றி பெறும் என 'சில முக்கிய தகவல்கள்' கிடைத்துள்ளதால் உற்சாகத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையாக விறுவிறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது அதிமுக உட் கட்சி விவகாரம். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைமைகளுக்கு பிறகு கட்சியின் ஒற்றை தலைமையாய் யார் இருக்க வேண்டும் என்ற மோதல் அங்கு வெடித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி கட்சியிலும் ஆட்சியிலும் தனது செல்வாக்கை நிலை நிறுத்திக் கொண்டுள்ளதோடு நான்காண்டு ஆட்சியையும் நிறைவு செய்தார். அதுமட்டுமல்லாமல் கட்சியின் முதன்மை முகமாகவும் தன்னை முன்னிறுத்திக் கொண்டார்.

ஒற்றைத் தலைமை
திமுக எதிர்ப்பு என்ற ஒற்றை காரணத்திற்காக ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற பேச்சு எழுந்தபோது உடனடியாக ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு, அதிரடி அறிக்கைகள், பேட்டிகள் என அதிரடி காட்டினார். ஆனால் யாரையும் சந்திக்காமல் வழக்கம் போல அமைதியாகவே இருந்த எடப்பாடி பழனிச்சாமி இறுதியில் அதிமுக பொது குழுவில் தனது பாலத்தினை நிரூபித்தார். மேலும் இரண்டாவது பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புஸ்வானமாகி போன அஸ்திரங்கள்
தொடர்ந்து தனக்கு எதிராக செயல்பட்டவர்களை கட்டம் கட்டி தூக்கி வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓபிஎஸ் கொடுத்த அஸ்திரங்கள் அனைத்தும் புஸ்வானமாகி போனது. ஓபிஎஸ்ஐ நீக்கினால் முக்குலத்தோர் ஆதரவு பறிபோகும் என்ற சூழலில் முக்கிய பதவிகளை அந்த சமூகத்தைச் சார்ந்த மூத்த தலைவர்களுக்கு கொடுத்தார் அந்த வகையில் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், கே பி முனுசாமி உள்ளிட்ட பலர் பதவிகளைப் பெற்றனர். தற்போது ஓபிஎஸ் தனித்துவிடப்பட்டுள்ள நிலையில் தன்னிடம் இருக்கும் ஆறு மாவட்ட செயலாளர்களை தவிர மற்றவர்கள் யாரும் இதுவரை அவருக்கு ஆதரவு கரம் நீட்டவில்லை.

டெல்லி சப்போர்ட்
அதே நேரத்தில் டெல்லி சப்போர்ட்டும் தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்து இருக்கிறார். ஆனால் அனைத்தையும் அநாகசயமாக தூக்கி எடப்பாடி பழனிச்சாமி வெற்றி நடை போட்டு வருகிறார். டெல்லியின் ஆதரவு தனக்கோ அல்லது ஓபிஎஸ்-க்கு கிடைக்கிறதோ கிடைக்கவில்லையோ அதிமுகவின் வருங்கால பொதுச் செயலாளர் தான் என்ற தெம்பில் இருக்கிறார். காரணம் கட்சி விதிகளில் மாற்றம் கொண்டு வந்தது செல்லாது என ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலையில் அது குறித்த தீர்ப்பு எப்படி வந்தாலும் தேர்தல் நடத்தி அதன் மூலம் பொதுச் செயலாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் எம்ஜிஆர் வகுத்த விதிகளின்படி ஒரு வலுவான தலைவராக தன்னால் உருவெடுக்க முடியும் என்று அவர் நம்புகிறார்.

மூன்று மாதத்திற்குள் தேர்தல்
இதற்காக இன்னும் மூன்று மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டியதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தற்போது வேறு யாரும் அதிமுகவில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருக்கிறார்களா அப்படி இருந்தால் அவர்களை உடனடியாக நீக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக இருந்து வரும் நிலையில் இனிமேல் எல்லாமே நல்லதாகவே நடக்கும் என நம்புகிறார் எடப்பாடி. அதற்கான ஏற்பாடுகளை 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மூவர் கூட்டணி
மேலும் ஓபிஎஸ் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரோடு கூட்டணி சேர்ந்தாலும் சிலர் மட்டுமே அவர்கள் பின்னால் செல்வார்கள் எனவும் அதிமுகவை பொருத்தவரை தற்போது இருக்கும் மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தனக்கே இருக்கும் வகையில் முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். தற்போது அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அமைச்சர்களையும் அழைத்து பேசி சமாதானம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
Recommended Video

பலே திட்டம்
தற்போது கட்சியில் மேலும் புதிய பதவிகளை உருவாக்கி அதிருப்தியாளர்களை சமாளிக்கவும் திட்டமிட்டுள்ளார் இதற்காக மேலும் சிலருக்கு துணை பொது செயலாளர், கழக அமைப்பு செயலாளர் உள்ளிட்ட பதவிகள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் போது உறுதியாக அமைச்சர் பதவி தரப்படும் என அதிருப்தியில் இருக்கும் சில மாவட்ட செயலாளர்களை சமாதானப்படுத்தி உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது. இதனால் தனக்கு சிக்கல்கள் எழாது என உறுதியாக நம்புகிறார்.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications