“எடப்பாடி பழனிசாமிக்கு 11ஆவது படுதோல்வி On The Way”.. திருச்சியில் வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
திருச்சி: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முழுமையான சங்கியாகவே மாறி சிறுபான்மை மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார் என்றும், மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்து வருகிறது என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் திருச்சியில் இன்று கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தல் பரப்புரை பிரச்சாரங்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சூடு பிடித்து வரும் நிலையில் இன்று திருச்சியில் முதல்வர் மு க ஸ்டாலின் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

திருச்சியில் ஸ்டாலின்
திருச்சி தென்னூரில் உழவர் சந்தை மைதானத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், மணப்பாறை, துறையூர், முசிறி உள்பட 9 தொகுதிகளின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி முதலமைச்சர் மு க ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்.
இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், 2021 சட்டசபை தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் ஒன்பது தொகுதிகளையும் திமுக கூட்டணி வென்றது போல் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மீண்டும் மீண்டும் வரவேண்டும் என்றும் குறிப்பாக நான் திருச்சிக்கு மீண்டும் மீண்டும் வருவதை போல தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மீண்டும் வரவேண்டும் என அன்பு கட்டளை இட்டார்.
திருச்சியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், "நேற்று மாலை திருவாரூரில் பரப்புரையைத் தொடங்கினேன். இன்று தீரர்கள் கோட்டமாம் திருச்சிக்கு வந்திருக்கிறேன். 3 வாரத்திற்கு முன்புதான் இதே திருச்சியில மாபெரும் மாநில மாநாட்டிற்காக வந்தேன். இப்போது மீண்டும் நம்முடைய வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க வந்திருக்கிறேன்.
மீண்டும் மீண்டும்
மீண்டும் மீண்டும் நான் திருச்சிக்கு வருவதுபோல், திராவிட மாடல் ஆட்சியும் மீண்டும் மீண்டும் வரணும். அதுக்கு நீங்க தயாரா? கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய 9 தொகுதிகளையும் நீங்கள் வெற்றியைத் கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் தந்த அந்த வெற்றியால் 2 சிறப்பான அமைச்சர்களை தமிழ்நாட்டிற்கு நீங்கள் தந்திருக்கீங்க. இந்த முறையும் திருச்சியில முழு வெற்றி, 100% வெற்றி தருவீங்களா?
திருச்சிக்காக பல்வேறு முத்திரை திட்டங்களை திமுக செயல் படுத்தி உள்ளது. திருச்சியில் இரண்டு மாதிரி பள்ளிகளை கட்டியுள்ளோம். சூரியூரில் மினி ஸ்டேடியம் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது. பக்கத்து மாநிலத்தைச் சார்ந்தவங்க கூட இது என்னப்பா ஒரு பஸ் ஸ்டாண்ட் ஏர்போர்ட்டை மிஞ்சுகிற வகையில் இருக்குன்னு வியந்து போய் வீடியோ போடுகிற திருச்சி பஞ்சப்பூர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம். அது பக்கத்திலேயே பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையம். அது மட்டுமல்ல திருவரங்கம், லால்குடி மாநகராட்சிகளிலும் புதிய பேருந்து நிலையங்கள். திருச்சி மாவட்டத்தில் மட்டும் 327 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு செஞ்சிருக்கிறோம்.
திருச்சி பகுதிக்கு 9 கூட்டு குடிநீர் திட்டங்களுடன் மேலும் இரண்டு அமைச்சர்களை கொடுத்த மண் திருச்சி. திருச்சி என்றாலே பிரமாண்டம் திருச்சிக்காக பல்வேறு முத்திரை திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். திமுக ஆட்சி மீண்டும் மீண்டும் வரவேண்டும் இன்னும் ஆயிரக்கணக்கான திட்டப் பணிகளை செயல்படுத்துவோம். தலைநகர் சென்னைக்கு சவால் விடும் வகையில் திருச்சி இன்று உயர்ந்து கொண்டுள்ளது.
ஸ்டாலின் பேச்சு
தன்னோட பத்தாண்டுகால ஆட்சியில தமிழ்நாட்டை எல்லா துறைகளிலும் படுகுழிக்கு தள்ளுன அதிமுகவும், இந்தியாவை வரலாற்று காணாத சரிவுக்கு கொண்டு போயிட்டு இருக்கிற பாஜகவும் சேர்ந்து அமைச்சிருக்க கூடிய கூட்டணிக்கு, இந்தத் தேர்தல்லயும் வழக்கம்போல படுதோல்வியை தான் நீங்க பரிசா தரணும். தயாராயிட்டீங்களா?
மக்களுக்கு நேரடியாக 8,000 ரூபாய்க்கான கூப்பனை தரப்போறோம். நம்முடைய இல்லத்தரசிகள் திட்டத்தை பார்த்து இன்னைக்கு வயிறெரிஞ்சு, அது ஊழலுக்கான திட்டம்ன்னு சொல்றாரு. யாரு? பழனிசாமி சொல்றாரு. எந்த பழனிசாமி? சம்மந்திக்கு கான்ட்ராக்ட் கொடுக்குறதுக்காகவே ஆட்சியை நடத்துன பழனிசாமி.
அண்மையில மதுரையில ஒரு சம்பவம் நடந்துச்சு. இவங்க ஆட்சிக்கு வந்தா என்ன நடக்கும் என்பதற்கு டிரைலர்தான் அது. மதுரையில நடைபெற்ற கூட்டத்தினுடைய நுழைவு வாயில் தந்தை பெரியார் படத்தை வைக்கக்கூடாதுன்னு பாஜக சொன்னதும், சுயமரியாதை இல்லாம அதை எடுக்கத் துணிந்தவர்தான் பழனிசாமி. மதுரை பாஜக ஆதரவு கூட்டத்துல தந்தை பெரியாரையும், அண்ணாவையும் கொச்சைப்படுத்துகிற மாதிரி காணொளி காட்சிகள் எல்லாம் வெளியிட்டாங்க.
அண்ணா திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் 3 பேரு கொஞ்சம் கூட சுரணை இல்லாம அதைப் பார்த்துகிட்டு இருந்தாங்க. நான் கேக்குறேன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இருந்தா விட்டிருப்பாரா? அல்லது அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இருந்தால்தான் விட்டிருப்பாரா? பேரறிஞர் அண்ணாவை இப்படி அசிங்கப்படுத்தினா பார்த்துட்டு சும்மா இருந்திருப்பாங்களா?
எடப்பாடி பழனிசாமி மீது அட்டாக்
பழனிசாமியோட ஒரே சாதனை அண்ணா திமுக என்கிற கட்சியை அடிமைக் கூட்டமா சீரழிச்சிருக்கிறது தான் அவங்க சாதனை. திராவிடம் என்ற சொல்லும் அந்த கூட்டத்துல அவமானப்படுத்தப்படுகிறது. அதிமுக முன்னணியினர் கூட அதைக் கூட தடுக்கல. திராவிடம்ன்னா என்னன்னே எனக்குத் தெரியாது, நான் புராணங்கள் எல்லாம் படிச்சதில்லைன்னு கொஞ்சம் கூட வெட்கம் இல்லாம சிரிச்சுக்கிட்டே சொன்னவர்தான் பழனிசாமி. இந்த துப்புக் கெட்ட பழனிசாமி யார் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, தன்னுடைய பதவியைக் காப்பாத்திக்கிட்டா போதும்ன்னு பாஜகவுடைய பாதம் தாங்கியா இருந்து கொண்டிருப்பவர்தான் பழனிசாமி.
சிறுபான்மை சமூகத்திற்கும் இலங்கை தமிழருக்கும் துரோகம் இழைக்கக்கூடிய வகையிலே குடியுரிமை திருத்த சட்டத்தை மாநிலங்களவையில் ஆதரித்து அதை நிறைவேற துணை போன கட்சிதான் அதிமுக. ஏன், இவங்களோட சேர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி ராமதாஸும் ஆதரவா வாக்களிச்சு துரோகம் செஞ்சார். இவங்களாலதான் சிறுபான்மையினருக்கு எதிரான அந்த சட்டமே மாநிலங்களவையில நிறைவேறிச்சு.
முழு சங்கியாக மாறிய எடப்பாடி பழனிசாமி
அதைத் தொடர்ந்து நடந்திருக்கக்கூடிய போராட்டங்கள்ல ஆயிரக்கணக்கான மக்கள் மேல தாக்குதல் எல்லாம் நடத்தப்பட்டுச்சு. சுமார் 70 பேர் கொல்லப்பட்டாங்க. இவங்களோட இரத்தக் கறை இன்றைக்கு அதிமுக கையிலதான் இருக்கு. இவ்வளவிற்கும் பிறகும் பழனிசாமி என்ன பேசினார்? 'குடியுரிமை சட்டத்தால யாருக்கு எந்த பாதிப்பும் கிடையாது, எந்த முஸ்லிம் பாதிக்கப்பட்டார்ன்னு காட்டுங்க' என்று சொன்னவர்தான் பழனிசாமி.
ஆனா சிறுபான்மையினர் வாக்குகள் வேணும்னு 2024 தேர்தல்ல தனியா நின்னு நாடகமாடுனப்போ, சிஏஏ சட்டத்தை கண்டிக்கிறதா பல்டி அடிச்சார் பழனிசாமி. 'பாஜக மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துறாங்க, சிஏஏ சட்டம் ஒரு வரலாற்று பிழை'ன்னு பிளேட்டை அப்படியே திருப்பிப் போட்டார் பழனிசாமி. நான் இப்ப கேட்கிறேன், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்களே, நீங்க இப்போ அந்த சட்டத்தை ஆதரிக்கிறீங்களா எதிர்க்கிறீங்களா? தைரியம் இருந்தா வெளிப்படையா சொல்லுங்க.
பழனிசாமியோட துரோகப் பட்டியல் இதோடு நிக்கல. மூன்று வேளாண் சட்டங்களை பாஜக கொண்டு வந்தப்போ கண்ணை மூடிக்கிட்டு அதையும் ஆதரிச்சார் இந்த பழனிசாமி. மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரா போராடுன எட்டு மாநில விவசாயிகளை புரோக்கர்னு வசைபாடி கொச்சைப்படுத்தினார். இப்படி பாஜகவோட கூட்டணி சேர்ந்து முழுசா சந்திரமுகியாவே மாறி இருக்கிறார் பழனிசாமி. அதாவது முழு சங்கியாகவே மாறிவிட்டார்.
அதிமுக - பாஜக கூட்டணி யார் தலைமை?
ஊர் ஊரா போய் அதிமுக கூட்டணியில எந்த பிரச்சனையும் இல்லைன்னு பழனிசாமி சொல்லிக்கிட்டு இருக்காரு. பிரச்சனை இல்லைன்னா எதுக்காக அத்தனை தடவை டெல்லிக்கு போனீங்க? டெல்லிக்கு போய் அமித் ஷாவினுடைய அப்பாயிண்ட்மெண்ட்டுக்காக பல மணி நேரம் ஏன் காத்துக் கிடந்தீங்க? அதுவும் வேற வேற கார்ல மாறி மாறி போய் முகத்தையெல்லாம் மூடிக்கிட்டு ஏன் வெளியில வந்தார்?
சரி நான் கேட்கிறேன், கூட்டணிக்கு தலைமை அதிமுக தான் சொல்றாங்க. ஆனா எல்லா கட்சிகளும் பாஜக கிட்ட போய் ஏன் பேச்சுவார்த்தை நடத்துனாங்க? இது எப்படி தெரியுமா இருக்கு? 'மாப்பிள்ளை அவர்தான் ஆனா அவர் போட்டுருக்க சட்டை என்னோடது'ன்னு நம்ம சூப்பர் ஸ்டார் நடிச்ச படையப்பா படத்துல வர்ற காமெடி மாதிரி இருக்கு.
நான் தெரியாம தான் கேட்கிறேன், கூட்டணிக்கு அதிமுக தான் தலைமைன்னா அதுல இருக்கக்கூடிய சிறிய கட்சிகள் எல்லாம் ஏன் அதிமுக சின்னத்துல போட்டியிடாம பாஜகவோட சின்னத்துல போட்டியிடுறாங்க? பழனிசாமியை முதலமைச்சராக்குவோம்னு பிரதமர் மோடி அவர்கள் இதுவரை சொல்லி இருக்கிறாரா? அதிமுக என்ற பெயரைக் கூட அவர் சொன்ன மாதிரி எனக்கு தெரியல. 'என்டிஏ சர்க்கார், என்டிஏ சர்க்கார்'னு தான் திரும்பத் திரும்பச் சொல்றார்.
தமிழ்நாடு vs டெல்லி
ஆனா நாம 'தமிழ்நாடு வெர்சஸ் என்டிஏ, தமிழ்நாடு வெர்சஸ் டெல்லி'ன்னு சொன்னா மட்டும் 'இது என்ன டெல்லி தேர்தலா? ஏன் அப்படி சொல்றீங்க?'ன்னு பெரிய அறிவுக்கொழுந்து மாதிரி கேட்கிறார் பழனிசாமி. தன் மீதான ஊழல் புகார்கள், உறவினர் வீடுகள்ல நடந்த ரெய்டுகள்ல இருந்து தப்பிக்க மொத்த கட்சியையும் பாஜக கிட்ட பழனிசாமி அடகு வச்சிட்டார். மக்கள் வாக்களிக்காமலேயே எம்எல்ஏக்களை ஏலத்துல எடுத்து ஒருமுறை முதலமைச்சர் ஆயிட்டார். எப்படி? மக்கள் வாக்களிக்காமலேயே எம்எல்ஏக்களை ஏலத்துக்கு எடுத்து ஒருமுறை முதலமைச்சர் ஆயிட்டார்; கூவத்தூர் எல்லாம் உங்களுக்கு தெரியும். திரும்பவும் இவர்கிட்ட ஆட்சி போனா ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் டெல்லி கிட்ட அடகு வச்சிருவார்.
அதிமுகவின் ஓனர் பாஜக
அடகு என்ன மொத்தமா வித்திடுவாரு. இவருடைய ஓனரான பாஜாகவோட ஒரே நோக்கம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கிறது தான். நேரா வந்தா தமிழ்நாட்டு மக்கள் நோட்டாவுக்கு கீழ அனுப்பிச்சிடுவாங்க. அதனால்தான் கொத்தடிமை கூட்டமாக இருக்கக்கூடிய ஆதிமுகவை முகமூடி போட்டுக்கிட்டு வந்திருக்காங்க. கடந்த 11 ஆண்டுகாலத்தில் பாஜாக தமிழ்நாட்டுக்கு எதையும் செய்யல. நம்ம மக்களோட எந்த கோரிக்கையும் நிறைவேற்றல. 12 ஆண்டுகளா ஆட்சி செய்றாங்க. ஆனா தமிழ்நாட்டுக்கு இதுவரை சிறப்பு திட்டம் கூட கிடையாது.
அறிவிச்ச மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இப்ப என்ன நிலைமைல இருக்குனு தெரியும் உங்களுக்கு, அதுவும் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. நமக்கு நியாயமா கிடைக்க வேண்டிய நிதியை கூட விடுவிக்க மறுக்கிறாங்க. மதுரை, கோவை, திருச்சி இந்த மாநகர எதிர்கால வளர்ச்சிக்காக மெட்ரோ ரயில் திட்டத்தை கேட்டோம், அதுவும் கொடுக்கல, முடியாதுன்னு சொல்லிட்டாங்க. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை ஒழுங்காகத் தராமல் இழுத்தடிக்கிறாங்க. ஓசூர் விமான நிலையத்துக்கும் அனுமதி தரல. பள்ளி குழந்தைகளுக்கான கல்வி நிதியையும் தருவது தடுக்கிறாங்க. குடிநீர் திட்டத்துக்கு நிதி கிடையாது.
இவ்வளவு அநீதிகளையும் செஞ்சிட்டு தேர்தல் வந்துருச்சுன்னு தமிழ்நாட்டுக்கு கிளம்பி வர்றார் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள். கடந்த மாசம் கூட இதே திருச்சிக்கு பிரதமர் மோடி அவர்கள் வந்தார். அங்க கேட்கிறேன் அப்படி வந்தவர் இதெல்லாம் ஒன்றிய பாஜக அரசின் மூலமாக தமிழ்நாட்டுக்கு செஞ்சிருக்க கூடிய திட்டங்கள்னு எடுத்துக்காட்டினாரா சொன்னாரா? எங்களால தமிழ்நாட்டுக்கு இந்த நன்மைகள் எல்லாம் கிடைச்சிருக்குனு பட்டியல் போட்டு சொன்னாரா? இருந்தாதானே சொல்ல முடியும். சட்டியில் இருந்தாதானே அகப்பையில் வரும்." என உரையாற்றினார் ஸ்டாலின்.
திருச்சியில் நடைபெற்ற பிரச்சாரம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், "இப்போதும் எப்போதும் திருச்சி தி.மு.க. பக்கம்தான்!
🌄 திருச்சிக்கு #DravidianModel நிறைவேற்றித் தந்துள்ள பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்டு உரிமையோடு வாக்கு கேட்டேன்.
பா.ஜ.க.விடம் அ.தி.மு.கவை உள்வாடகைக்கு விட்டு, வெற்று வாய்ச்சவடால் விடும் பழனிசாமி அவர்களுக்கு 11-ஆவது படுதோல்வி On The Way!
🌄 மலைக்கோட்டை மாவட்டம் எப்போதுமே கழகக் கோட்டைதான் என்பதை 2026 தேர்தல் முடிவுகள் உறுதிபட உணர்த்தும்.
🌄 திருச்சியில் 2021-இல் பெற்றது போன்றே மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முழுவெற்றி Repeat! திராவிட மாடல் 2.0 Sure Hit!" எனத் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
ஸ்டாலின் 6.. கனிமொழி கையில் எடுத்த மேஜிக்.. தேர்தல் போக்கையே மாற்றும் அந்த 6 வாக்குறுதிகள்? -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications