கே.பி. முனுசாமியை தோற்கடிக்க 4 கோடி செலவா? அந்த மாஜி என்ன செய்தார் தெரியுமா? ஓபிஎஸ் ஆதரவாளர் சுளீர்
சென்னை: கே.பி. முனுசாமியை தோற்கடிக்க ரூ 4 கோடி செலவு செய்தோமா, யாருக்கு எதிராக யார் செயல்பட்டனர் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று என்று ஓபிஎஸ் ஆதரவாளர் மறுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் கிருஷ்ணமூர்த்தி , கோவிந்தராஜ், சூலகிரி ஒன்றிய சேர்மேன் ஹேம்நாத் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின் போது கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக நிர்வாகிகளை கோவிந்தராஜ் கருங்காலிகள என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எம்எல்ஏ அசோக் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

கட்சிக்கு துரோகம்
அப்போது அவர் கூறுகையில் கிருஷ்ணகிரி மாவட்டததில் அதிமுகவை குழி தோண்டி புதைத்துவிட்டார் முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராஜ். ஆனால் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஊத்தங்கரை ஆகிய 3 தொகுதிகளிலும அதிமுக வெற்றி பெற்றது.

கிருஷ்ணகிரி வேப்பனஹள்ளி
ஆனால கடந்த 2016ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளியில் அதிமுக தோல்வி அடைந்தது. கடந்த சட்டசபை தேர்தலில் முன்னாள் எம்எல்ஏக்களான கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் ஒரு முறை கூட வாக்கு சேகரிக்க வரவில்லை. முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமியும் நானும் தேர்தலில் வெறற பெறவே கூடாது என்பதற்காகவே ரூ 4 கோடி வரை செலவு செய்து திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு அதிமுகவுக்கு துரோகம் செய்தனர்.

கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள்
தற்போது கட்சியிலிருந்து ஓரங்கப்பட்டதால் அவர்கள் எல்லாம் ஓபிஎஸ்ஸை சந்தித்துள்ளனர் என அசோக்குமார் எம்எல்ஏ தெரிவித்தார். இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதன் மாவட்டச் செயலாளராக நியமக்கப்பட்ட கோவிந்தராஜ், செய்தியாளர்களை சந்தித்தார்.

பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தம்
அப்போது அவரிடம் முனுசாமி குறித்த விவகாரம் எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில் 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் யாருக்கு எதிராக யார் செயல்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு எதிராக இங்குள்ள நிர்வாகிகளை கே பி முனுசாமி தேர்தல் பணி செய்ய விடாமல் பென்னாகரம் தொகுதிக்கு அழைத்து சென்றார். இது அனைவருக்குமே தெரியும் என்றார்.
-
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா? -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
இன்பதுரை எடுத்த சுப்ரீம் ஆயுதம்? சபாநாயகர் போட்ட 5 நிமிட உத்தரவு! சுப்ரீம் கோர்ட்டில் சிக்கும் தவெக? -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்!












Click it and Unblock the Notifications