Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் புதிதாக லீசுக்கு குடிபோக போறீங்களா.. மறந்தும் செய்யக்கூடாத தவறுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் லீசுக்கு குடிபோக விரும்புகிறவர்கள், வீட்டை பார்த்ததும் நன்றாக இருக்கிறது என்று நினைத்து ஓகே சொல்லி அட்வான்ஸ் கொடுத்துவிடக்கூடாது. அப்படி கொடுத்துவிட்டால், அவர்கள் போடும் நிபந்தனைகள் மற்றும் அங்குள்ள பிரச்சனைகள் தெரியாமல் மாட்டிக் கொள்ளக்கூடும். அப்படி மாட்டிக்கொண்டவர்களின் அனுபவம் தான் இந்த செய்தி.

சென்னையில் வாடகைக்கு குடியிருப்பதை விட மக்கள் லீசுக்கு குடியிருப்பதை தான் அதிகம் விரும்புவார்கள். காரணம் 4 லட்சமோ அல்லது ஐந்து லட்சமோ அல்லது அதற்கு மேல் தொகையோ மொத்தமாக கொடுத்துவிட்டு ஓராண்டு வரை வாடகை இல்லாமல் வசிக்க முடியும். சில பகுதிகளில் இரண்டு வருடங்கள் கூட லீசுக்கு கிடைக்கும். ஆனால் தொகை இன்னும் அதிகமாக இருக்கும்.

exclusive : Are you going to move into a new lease in Chennai? Mistakes that should not be forgotten

சென்னை போன்ற பெருநகரங்களில் நல்ல வீடுகள் லீசுக்கு வீடு கிடைப்பது கடினமாக இருப்பதால், மக்கள் வீடு நன்றாக இருந்தாலே ஒகே சொல்லி விடுகிறார்கள். பணத்தை செலுத்திவிட்டு வீட்டிற்கு வந்த பின்னரே பிரச்சனைகள் தெரியவருகிறது.

புதிதாக சென்னையில் லீசுக்கு வர விரும்புபவர்கள், முதலில் பார்ப்பது அங்கு தண்ணீர் பிரச்சனை இருக்கிறதா என்பதை தான். தண்ணீர் பிரச்சனை எப்போது வரும், தண்ணீர் பிரச்சனையே வராதா என்பதை கேட்டு தெரிந்து கொண்டு வீட்டிற்கு போவதா வேண்டாமா என்பதை முடிவு செய்யுங்கள்.

இரண்டாவது மெயிண்டன்ஸ், வீட்டு மெயிண்டனன்ஸ் எவ்வளவு தொகை, எப்படி பராமரிப்பார்கள், கண்டிப்பாக பராமரிப்பார்களா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் மாத பராமரிப்புக்கு அதிக பணம் வசூலித்துவிட்டு, வீட்டில் எந்த பிரச்சனை என்றாலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள்.

மூன்றாவது வீட்டுக்கு விருந்தினர் வருகைக்கு கட்டுப்பாடு இருக்கிறதா என்பதை கேட்டு உறுதி செய்து கொள்ளுங்கள். வீட்டிற்கு விருந்தினர்கள் வரக்கூடாது. வந்தாலும் ஓரிரு நாளுக்கு மேல் இருக்கக்கூடாது என்று அதிக கட்டுப்பாடு இருக்கும். அப்படி கட்டுப்பாடுகள் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

exclusive : Are you going to move into a new lease in Chennai? Mistakes that should not be forgotten

4வது பிரச்சனை வீட்டில் ஏதேனும் உடைந்திருக்கிறதா, பாத்ரூம் பைப்லைன் எப்படி இருக்கிறது. கதவு ஜன்னல்கள் சரியாக உள்ளதா? டைல்ஸ் உடைந்தால் யார் மாற்றுவது? வீட்டில் உள்ள மின்சார வயர்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சவரில் தண்ணீர் வருகிறதா, என்பதையும் உறுதி செய்யுங்கள்.இதை எல்லாம் சரி செய்து வீட்டை முழுமையாக சரி செய்த பின்னரே லீசுக்கான தொகைகளை செலுத்துங்கள்.

டோக்கன் அட்வான்ஸ் செலுத்துவதாக இருந்தால் இதை எல்லாம் செய்து தருவார்களா என்பதை உறுதி செய்யுங்கள். அப்படி செய்து கொடுப்பதாக உறுதி கொடுத்தால் டோக்கன் அட்வான்ஸ் கொடுங்கள். டோக்கன் அட்வான்ஸ் கொடுத்த பின் பாதி தொகையை செலுத்தும் முன்பு, நேரில் வந்து வீட்டை பாருங்கள், நீங்கள் கேட்டது அனைத்தும் சரியாக செய்து கொடுத்திருந்தால் அட்வான்ஸில பாதியை கொடுங்கள். இல்லாவிட்டால் டோக்கன் அட்வான்ஸை திருப்பி கேட்டு வாங்கி விடுங்கள். ஏனெனில் உங்களை வரவைத்த பிறகு செய்து தருவதாக ஏமாற்றுவது நடக்கும். அப்படி வந்து ஏமாந்துவிடாதீர்கள். நீங்கள் முழு தொகையை செலுத்திவிட்டால் கண்டிப்பாக அவர்கள் செய்து கொடுத்ல் தான் நிச்சயம் , மற்றபடி அவர்கள் செய்ய மறுத்துவிட்டால் வேதனையில் தான் முடியும்

5வது பிரச்சனை,. முக்கியமானது சரி எல்லாமே சரியாக இருக்கிறது. அக்ரிமெண்ட் போட போகிறீர்கள் என்றால், அவரிடம் வீடு காலி செய்வதாக இருந்தால் எத்தனை மாதம் முன்பு சொல்ல வேண்டும். வீட்டிற்கு நோட்டீஸ் பீரியர்டு எத்தனை மாதம் என்பதை தெளிவாக கேட்டுவிட்டு போடுங்கள். 4மாதம் என்று சொல்வார்கள். சில இடங்களில் 3 மாதம் என்று இருக்கும். வீட்டு வாடகை என்றால் வீடு பிடிக்கவில்லை என்று கூறி செல்ல முடியும். ஆனால் லீசு வீட்டில் அப்படி முடியாது. உங்கள் பணமும் வேறு ஒருவரிடம் வாங்கித்தான் மாற்றிவிடுவேன் என்று சொன்னால் ஏற்க வேண்டாம். அப்படிப்பட்ட வீடுகளில் குடியேற சென்றால், பணத்தை வாங்குவது கடினமாகிவிடும்.

exclusive : Are you going to move into a new lease in Chennai? Mistakes that should not be forgotten

குடியிருக்க போகும் லீசு வீடு உண்மையில் அவர் பெயரில் தான் இருக்கிறதா என்பதை கண்டிப்பாக உறுதி செய்து கொண்ட பின்னரே அட்வான்ஸ் தொகையை கொடுங்கள். அதேநேரம் அட்வான்ஸ் கொடுக்கும் முன்பு,லீசு ஒப்பந்தத்தை அரசின் உத்தரவுப்படி ஆன்லைனில் பதிவு செய்ய போகிறேன் என்பதை அவரிடம் தெரிவித்துவிடுங்கள். வாடகை அல்லது லீசு ஒப்பந்தத்தை கண்டிப்பாக பதிவு செய்தால் மட்டுமே சட்ட ரீதியான நிவாரணம் பெற முடியும். அதற்கு வீட்டு ஓனர் ஒப்புக்கொண்டால் வீட்டை லீசுக்கு போகலாம்.மாறாக முடியாது என்றால் யோசிக்க வேண்டிய விஷயம் தான். இதேபோல் லீசுக்கு குடியிருக்க போகும் வீட்டை பற்றி அங்கு குடியிருப்பவர்களிடம் கேட்காமல் அருகில் உள்ள வீடுகள் மற்றும் அந்த பகுதி கடைகளில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அப்போது தான் உண்மை தெரியவரும்.

அதேபோல் தண்ணீர் தொட்டி பராமரிப்பு, கழிவு நீர் பராமரிப்பு ஆகியவை சரியாக செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்யுங்கள். தண்ணீர் மேல ஏற்றும் மோட்டாரில் செல்லும் தண்ணீரின் வேகம் எப்படி, வீடு சரியாக பராமரிக்கப்படுகிறதா என்பதையும் உறுதி செய்யுங்கள். எல்லாம் சரியாக இருக்கிறது என்றால், வீட்டில் மழை காலத்தில் தண்ணீர் தேங்குமா என்பதையும் பார்த்துவிடுங்கள். உங்களுக்கு முழு திருப்தி என்றால் லீசுக்கு போகலாம்.

இறுதியாக முக்கியமான விஷயம் .. லீசுக்கு போக விரும்புவர்கள், அந்த வீட்டின் உரிமையாளர் அவர் தானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதேபோல் வீட்டின் பேரில் அதிக கடன் வாங்கி வைத்துவிட்டு கடனை கட்ட முடியாமல் இருக்கிறாரா, வீட்டு ஓனர் எப்படி என்பதை விசாரித்துவிட்டு லீசுக்கு போங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+