சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

படிக்கும்போதே புல்லட்டில் சென்றவர் ஈபிஎஸ்! ஆர்.எஸ்.பாரதி அப்படியா? ஜெயக்குமார் விமர்சனம்

Google Oneindia Tamil News

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தவறு செய்தவர்கள் தண்டனை பெறுவார்கள் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று கூறியிருந்தார்.

இது குறித்து இன்று(செப்.18) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆர்.எஸ்.பாரதி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

பெரும் வசதி வாய்ப்புடன் பிறந்த எடப்பாடி பழனிசாமி குறித்து சாதாரண அன்னக்காவடியாக இருந்து வந்தவர் எப்படி விமர்சிக்கலாம் என்று ஜெயக்குமார் பேட்டியில் கேள்வியெழுப்பியுள்ளார்.

குஜராத்தில் பாஜகவுக்கு காத்திருக்குது சவால்.. டிரம்ப் கார்டை களம் இறக்கிய ஆம் ஆத்மி? பரபர தகவல்! குஜராத்தில் பாஜகவுக்கு காத்திருக்குது சவால்.. டிரம்ப் கார்டை களம் இறக்கிய ஆம் ஆத்மி? பரபர தகவல்!

ஆர்.எஸ்.பாரதி பேட்டி

ஆர்.எஸ்.பாரதி பேட்டி

தமிழ்நாடு அரசின் மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக போராட்டம் நடத்தியது. இது குறித்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, சொந்த கட்சி விவகாரங்களை திசை திருப்பவே அதிமுக போராட்டம் நடத்துகிறது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் பினாமி விசாரிக்கப்பட்டுள்ளார். விரைவில் உண்மைகள் பல வெளிவரும். தவறு செய்தவர்கள் தண்டனை பெறுவார்கள் என்ற கூறியிருந்தார்.

ஜெயக்குமார் பேட்டி

ஜெயக்குமார் பேட்டி

இது குறித்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார், கருணாநிதி வீட்டில் கொத்தடிமை செய்தவர் ஆர்.எஸ்.பாரதி என்று விமர்சித்துள்ளார். பேட்டியில் மேலும் அவர் கூறியதாவது, "ஆர்.எஸ்.பாரதி என்ன மிட்டா மிராசு, பண்ணையார் குடும்பத்திலிருந்து வந்தாரா? பாரதி சாதாரண அன்னக்காவடியாக இருந்து, திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் கொத்தடிமை வேலை செய்து அதன் மூலம் பெறப்பட்ட பதவிகள் மூலம் வெளியில் தெரிந்தவர்தான் இவர்.

அன்னக்காவடி

அன்னக்காவடி

ஆர்.எஸ்.பாரதி இன்று கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கலாம் ஆனால் அவரின் ஆரம்ப காலநிலை என்ன? சாதாரண குடும்பத்தில் பிறந்து கொத்தடிமை வேலை செய்ததால் இன்று கோடிக்கணக்கான சொத்துகளுக்கு அதிபதியாக இருக்கிறார். தொடக்க காலத்தில் திமுகவில் நங்கல்லூர் கூட்டுறவு சங்க தலைவராக தேர்வானவர். அதிலும் ஏகப்பட்ட முறைகேடுகளை செய்துள்ளார். 114 வீட்டு மனைகளை முறைகேடாக ஒதுக்கீடு செய்து அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தி அடிமாட்டு விலைக்கு பினாமிகளுக்கு விற்றுள்ளார்.

புல்லட்டில் சென்றவர் ஈபிஎஸ்

புல்லட்டில் சென்றவர் ஈபிஎஸ்

இவ்வளவு பின்னணியிலும் வார்த்தைகளை விட்டுவிட்டு வாங்கிக் கட்டிக்கொள்ளும் முதல் நபர் அவராகதான் இருக்கிறார். நீதிமன்றம் முதல் பத்திரிகையாளர்கள் வரை கடுமையான முறையில் விமர்சித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக தற்போது அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் விமர்சித்துள்ளார். இவரைப்போன்று சாதாரண சாப்பாட்டுக்கே வழியில்லாத குடும்பத்தில் பிறந்தவரா எடப்பாடியார்? அவர் கல்லூரி காலங்களிலேயே புல்லட்டில் சென்றவர். இப்படி இருக்கையில் அவர் மீது விமர்சனம் ஆர்எஸ் பாரதி விமர்சனம் செய்தது கண்டிக்கத்தக்கது" என்று கூறியுள்ளார்.

English summary
DMK organizational secretary RS Bharti had said yesterday that the Kodanad murder and robbery case has reached an important stage and the culprits will be punished. Speaking to the media today (September 18), AIADMK's former minister Jayakumar criticized RS Bharati. Jeyakumar questioned in the interview that how can a person who was an ordinary Annakkavadi criticize Edappadi Palaniswami, who was born with great opportunity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X