அண்ணா விட்ருங்க ப்ளீஸ்! காருக்குள் கதறிய இளம்பெண்! கஞ்சா போதையில் மிருகங்களான 4 பேர்! பதறிய போரூர்!
சென்னை : சென்னை போரூர் அருகே காரில் சென்ற பெண்ணை கத்தி முனையில் மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்ததோடும், அவரிடம் இருந்து பணம் நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்தியாவில் வட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக பெண்கள் குறிப்பாக 18 வயது கீழ் உள்ள சிறுமிகள் பாலியல் ரீதியான வன்கொடுமைகளுக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்திலும் அவ்வப்போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களை கவலை கொள்ள செய்துள்ளது. அந்த வகையில் வேலூரில் பெண் மருத்துவர் ஒருவர் நள்ளிரவில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சென்னையில் அதிர்ச்சி
இந்த நிலையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இளம்பெண் ஒருவர் நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை போரூர் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நேற்று முன் தினம் இரவு காரில் சென்று கொண்டிருந்தார். போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல், கொளுத்துவான்சேரி அருகே சென்று கொண்டிருந்தபோது காரை வழி மறித்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

கூட்டு பலாத்காரம்
காரை ஓட்டி வந்த டிரைவரை தாக்கி விரட்டி விட்டு காரில் அமர்ந்திருந்த பெண்ணை காரோடு கடத்தி சென்றனர். பின்னர் அங்கிருந்த காலி இடத்தில் வைத்து அந்த பெண்ணை கத்தி முனையில் நான்கு பேரும் கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணிடம் இருந்த 8 பவுன் நகையை பறித்து கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.

போலீசார் வழக்கு பதிவு
இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை கத்தி முனையில் கூட்டு பலாத்காரம் செய்து நகை பறித்து சென்ற சம்பவத்தில் நான்கு பேரை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கஞ்சா விற்பனை
கொளுத்துவான்சேரி பகுதியில் கஞ்சா விற்பனை அட்டகாசம் அதிகரித்துள்ளதால் இரு தரப்பினரிடையே கஞ்சா விற்பனை செய்வதில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவதாகவும் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் நிலையில் கஞ்சா போதையில் இதுபோன்ற வழிப்பறி மற்றும் கூட்டு பலாத்கார சம்பவத்தில் மர்ம நபர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications