பிறந்து 4 மாதமே ஆன பச்சிளம் ஆண்குழந்தைக்கு இருதய பாதிப்பு.. உயிரை காப்பாற்ற உதவுங்கள்..ப்ளீஸ்
சென்னை: திருவள்ளூரில் பிறந்து 4 மாதமே ஆன சஷ்டிவேல் என்ற குழந்தைக்கு சிக்கலான இருதய நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குழுந்தையின் உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். ஆனால் குழந்தையின் தந்தையால் அதற்கான தொகையை ஏற்பாடு செய்ய முடியவில்லை. உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த தொகயை கொடுத்து உதவி செய்யுங்கள். நீங்கள் செய்யும் சிறு உதவி கூட சஷ்டிவேலின் உயிரை காப்பாற்ற உதவும்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் சீதாராமன். இவரது மனைவிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அழகான ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சஷ்டிவேல் என்று பெயர் வைத்த சீதாராமன் தம்பதி, தங்கள் மகன் எதிர்காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று எல்லா பெற்றோரை போல கனவுடன் வளர்த்து வந்தனர்.

சிக்கலான இருதய நோய்
குழந்தை சஷ்டிவேல் 2 மாதமாக இருந்த போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் இருதயத்தில் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சென்னை மியாட் மருத்துவமனை நடத்தும் இலவச மருத்துவ பரிசோதனைக்கு குழந்தையை அழைத்து செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அங்கு செய்யப்பட்ட பரிசோதனையில் குழந்தைக்கு சிக்கலான இருதய நாள பிரச்சினைகள் இருப்பது கண்டறியபட்டது.

உடல்நிலை மேலும் மோசமடைந்தது
அதாவது, சஷ்டிவேலுக்க்கு இதயத்தில் Perimembranous Ventricular Septal Defect (VSD) மற்றும் Indirect Gerbode defect இருப்பது கண்டறியப்பட்டது. ஆரம்பத்தில் அறுவைச் சிகிச்சையை தள்ளிப் போடலாம் என்ற நம்பிக்கையில், மருந்துகள் மற்றும் நெருக்கமான தொடர்ந்து கண்காணிப்பு (follow-up) மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
துரதிருஷ்டவசமாக, ஒரே ஒரு மாதத்திற்குள் சஷ்டிவேலின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. மீண்டும் மீண்டும் ஏற்பட்ட சுவாசத் தொற்றுகள் மற்றும் உடல் எடை சரியாக கூடாத காரணத்தால், குழந்தையை இரு முறை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை எடுத்தனர்.
15 ஆயிரம் மட்டுமே வருமானம்
குழந்தையின் பலவீனமான உடல், இந்த நோயை சமாளிக்க முடியாமல் போராடி வருகிறது. தற்போது அவரது உயிரைக் காப்பாற்ற ஒரே வழியாக, உடனடி திறந்த இதய அறுவைச் சிகிச்சை அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த சிகிச்சைக்கு மொத்தம் ரூ.3,25,000- ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சஷ்டிவேலின் தந்தை பைக் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். நிலையில்லாத வருமானமே அதில் கிடைக்கிறது. மாதம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் மட்டுமே வருமானம் ஈட்டுகிறார். இந்த தொகையை வைத்து அவரது குடும்ப செலவுகளை சமாளிக்கவே அவரால் முடியவில்லை.

உயிரை காப்பாற்ற உதவுங்கள்
எனவே, மகனின் இருதய அறுவை சிகிச்சைக்காக இவ்வளவு பெரிய தொகையை திரட்டுவது என்பது சீதாராமனால் இயலாத காரியம்.
ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும் போதெல்லாம் சஸ்திவேலின் உயிருக்கு ஆபத்து மேலும் அதிகரித்து வருகிறது. காலத்திற்குள் அறுவைச் சிகிச்சை செய்யப்படாவிட்டால், சஷ்டிவேலின் ஆரோக்கியமான எதிர்காலமும் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது.
எனவே, சஷ்டி வேலின் உயிரை காப்பாற்ற உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். பெரிய தொகை என்றெல்லாம் இல்லை. உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த தொகயை கொடுத்து உதவி செய்யுங்கள். நீங்கள் செய்யும் சிறு உதவி கூட சஷ்டிவேலின் உயிரை காப்பாற்ற உதவும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications