சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திடீரென வந்த ரஜினி.. தயாரான சசிகலா டீம்.. உற்சாகத்தில் அழகிரி குரூப்.. ப்பா டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசியலில் அடுத்தடுத்து நினைத்து பார்க்காத டிவிஸ்ட்கள் நடந்து வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களுக்கும் மேல் இருக்கும் போது தமிழக அரசியல் "அதி தீவிர புயலாக" உச்சம் பெற தொடங்கி உள்ளது.

அடுத்த வருடம் மே மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் இப்போதே தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த முறை தேர்தல் வெறும் திமுக vs அதிமுக மோதலாக இருக்காது என்று கூறுகிறார்கள். இந்த முறை பலதரப்பு மோதல் நடக்க போகிறது.

கடந்த 2 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் நினைத்து பார்க்க முடியாத அரசியல் மாற்றங்கள் நடந்து உள்ளது. சட்டசபை தேர்தலில் என்ன நடக்குமோ, என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படுமோ என்ற பரபரப்பு இப்போதே தொற்றிக்கொண்டு உள்ளது.

எம்ஜிஆர் போல நல்லாட்சியை தருவார் ரஜினிகாந்த்... எல்லோரும் ஆதரவு தருவார்கள் எம்ஜிஆர் போல நல்லாட்சியை தருவார் ரஜினிகாந்த்... எல்லோரும் ஆதரவு தருவார்கள்

 பரபரப்பு

பரபரப்பு

தமிழக அரசியலில் தேர்தல் தீவிரம் எப்போது தொடங்கியது என்றால்.. அது அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட போதுதான். தேர்தல் நேரத்தில் அதிமுகவில் பிளவு ஏற்படும் என்று நினைத்தவர்கள் வாயில் எல்லாம் மண்ணை தூவி.. ஒரே குடையின் கீழ் கூடி நிற்கிறோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிரூபித்தார்.

ஆட்சி

ஆட்சி

தைரியமாக தன்னை முதல்வர் வேட்பாளராக கட்சிக்குள் முன்னிறுத்தினார். கட்சியின் உறுப்பினர்கள் இதற்கு ஒப்புக்கொள்ளவே தற்போது சட்டசபை தேர்தலை முதல்வர் பழனிசாமி தலைமையில் அதிமுக எதிர்கொள்ள இருக்கிறது. அதிமுக தொண்டர்களுக்கு இந்த அதிரடியான முடிவு கொஞ்சம் நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. லோக்சபா தேர்தல் போல இல்லாமல் சட்டசபை தேர்தலில் அதிமுக மீண்டும் தனது கேமை ஆடுவதற்கு முதல்வர் பழனிசாமி தலைமையில் தயாராகிவிட்டது.

அதிமுக

அதிமுக

அதிமுக தனது முதல்வர் வேட்பாளரை அறிவித்த சில நாட்களில் பாஜக இன்னொரு பக்கம் வேல் யாத்திரையை தொடங்கிவிட்டது. பாஜகவின் வேல் யாத்திரை முதல் 4-5 நாட்கள் கைது - பேரணி என்று பரபரப்பாக சென்றது. ஆனால் அதன்பின் பெரிய சத்தம் இல்லை. ஆனாலும் அதிமுக கூட்டணியில் பாஜக அதிக சீட் கேட்க இந்த வேல் யாத்திரை கண்டிப்பாக கட்சிக்கு உதவும்.

அமித் ஷா

அமித் ஷா

இந்த அரசியல் பீவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகைக்கு பின் தமிழகத்தில் இன்னும் அதிகரித்தது. அமித் ஷா வருகைக்கு பின் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியானது. பாஜகவும் பெரிய அளவில் இதனால் உற்சாகம் அடைந்தது. அப்போது அமித் ஷா சில முக்கியஸ்தர்களை சந்தித்து ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்தும், அழகிரியின் அரசியல் திட்டங்கள் குறித்தும் பேசியதாக தகவல்கள் வந்தது.

திமுக

திமுக

இதை எல்லாம் பார்த்துக்கொண்டு திமுக ஒரு பக்கம் சும்மா இருக்கவில்லை. திமுக தான் உண்டு தன் வேலை உண்டு என்று உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டி வருகிறது. இது போக திமுக நடத்தும் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரச்சாரமும் தொடக்கத்தில் தீவிரமாக நடந்தது. உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட பிரச்சாரம் கைது - விடுதலை என்று தொடக்கத்தில் விஸ்வரூபம் எடுக்க போக போக பெரிய அளவில் செல்ப் எடுக்கவில்லை.

அழகிரி

அழகிரி

இப்படிப்பட்டநிலையில்தான் இன்னொரு பக்கம் தமிழக அரசியலில் மீண்டும் குதிக்க திமுக முன்னாள் உறுப்பினர் அழகிரி திட்டமிட்டு வருகிறார். இதனால் மதுரையில் அழகிரிக்கு ஆதரவான சிலர் உற்சாகம் அடைந்துள்ளனர். திமுகவிற்குள் கலகம் ஏற்படுத்த இவர் களமிறங்குகிறாரோ என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இதற்கு இடையில்தான் தற்போது சசிகலா விடுதலை செய்தியும், ரஜினியின் கட்சி தொடங்கும் அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

சசிகலா

சசிகலா

2021 ஜனவரியில் சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் வந்ததும் அடுத்தடுத்து அரசியல் அதிரடிகளை செய்வதற்காக அவருக்கு நெருக்கமான டீம் மன்னார்குடியில் ரெடியாகி உள்ளது. ஏற்கனவே இதற்காக சில பிளான்கள் வகுக்கப்பட்டு இருக்கிறது. கண்டிப்பாக விடுதலை ஆன பின் சசிகலா சும்மா இருக்க மாட்டார் என்று கூறுகிறார்கள். ஆனால் இவர் யாருக்கு எதிராக அரசியல் செய்வார் என்பதே பெரிய கேள்வியாக உள்ளது.

வேறு என்ன

வேறு என்ன

இதெல்லாம்ம் நடக்கும் போதுதான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறியுள்ளார். இருக்கிற பரபரப்பு போதாதென்று இவரும் அரசியல் களத்தில் குதித்து உள்ளார். வாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி வைப்போம் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பி.எஸ் கூறிவிட்டார். இதனால் இப்போதே கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும் நிலை ஏற்பட்டடுள்ளது. யார் யாருடன் செல்வார்... என்ன நடக்கும் என்ற பரபரப்பு இப்போதே தொற்றிக்கொண்டு உள்ளது. தமிழக அரசியல் வரும் நாட்களில் இன்னும் எவ்வளவு திருப்பங்களை சந்திக்க போகிறதோ தெரியவில்லை.

English summary
From Rajinikanth announcement to Sasikala Re-Entry: Tamilnadu starts seeing Politics storm already.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X