Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தல்கள் முடிந்தன..இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது.. வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்

சட்டசபைத் தேர்தல் முடிந்து விட்ட நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது குறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். தேர்தல்கள் முடிந்தன. இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு தொடங்கிவிட்டது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Fuel Price Hike Kamal Haasan post twitter page

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

அதேபோல் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதந்தோறும் மாற்றி நிர்ணயித்து வருகின்றன.அந்தவகையில் நேற்று 137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகள், இல்லத்தரசிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இன்று 2வது நாளாக மீண்டும் பெட்ரோல் விலை உயர்ந்திருக்கிறது. அதன்படி சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.102.58 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 77 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 92.65 காசுகளுக்கு விற்பனையாகிறது.

சமையல் கேஸ் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 5 மாநில தேர்தல் காரணமாகவே பெட்ரோல் , டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்ததாகவும், தற்போது தேர்தல் முடிந்ததும் மீண்டும் விலையேற்றத்தை தொடங்கிவிட்டதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தேர்தல்கள் முடிந்தன. இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பார்கள். ஆனால் அது கீழே இறங்கியபோதும் விலையைக் குறைக்கவில்லை இவர்கள். அதில் சேர்த்த லட்சம் கோடிகளை வைத்து இப்போது சரிக்கட்டலாமே என்று பதிவிட்டுள்ளார். யார் எந்த நாடு என்று கூறாமல் பதிவிட்டுள்ள கமல்ஹாசனின் இந்த பதிவுக்கு பலரும் கிண்டலடித்து பதிவிட்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+