ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?
சென்னை: மத்திய அரசு சிறு தொழில் முனைவோர் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்த பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.. அந்த வகையில், PM SVANidhi Scheme என்ற திட்டம் தற்போது தெருவோர வியாபாரிகளுக்கு மிகப்பெரிய உதவியாக மாறியுள்ளது.. குறிப்பாக, "ஆதார் கார்டு இருந்தாலே ₹50,000 கடன் கிடைக்கும்" என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், இதன் உண்மை நிலை குறித்து பொதுமக்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது..
பிஎம் ஸ்வநிதி என்ற இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள், முடிதிருத்தும் கடை நடத்துபவர்கள், சலவை தொழிலாளர்கள் போன்ற சிறு தொழில் செய்பவர்களுக்கு பிணையில்லா கடன் வழங்குவது ஆகும்.. இதன் மூலம், அவர்கள் தங்கள் தினசரி வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வருமானத்தை அதிகரிக்கவும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது..

ஆதார் கார்டு கடன் ₹50,000 தொகை
ஆனால் இந்த திட்டத்தின் கீழ் ₹50,000 தொகை ஒரே தடவையில் வழங்கப்படுவதில்லை என்பது முக்கியமான உண்மை.. முதற்கட்டமாக ஒரு பயனாளிக்கு ₹10,000 மட்டுமே கடனாக வழங்கப்படும்.. இந்தத் தொகையை 12 மாதங்களுக்குள் சரியாகத் திருப்பிச் செலுத்தினால், இரண்டாம் கட்டமாக ₹20,000 கடன் பெற தகுதி கிடைக்கும்.. அதையும் காலக்கெடுவுக்குள் முடித்தால் மட்டுமே, மூன்றாம் கட்டமாக ₹50,000 வரை கடன் பெற வாய்ப்பு உருவாகும்..
மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 7 சதவீதம் வரை வட்டி மானியம் வழங்கப்படுகிறது.. EMI எனப்படும் மாத தவணைகளை சரியான நேரத்தில் செலுத்தும் பட்சத்தில், அந்த மானியத் தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது..
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி
இதனுடன், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் UPI மூலம் பணம் செலுத்தும் வியாபாரிகளுக்கு மாதத்திற்கு ₹100 வரை, ஆண்டுக்கு ₹1,200 வரை கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது..
இந்தத் திட்டத்தில் கடன் பெற விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.. அதற்காக PM SVANidhi Portal என்ற அதிகாரப்பூர்வமான வெப்சைட்டையும் பயன்படுத்தலாம். அல்லது அருகிலுள்ள பொதுச் சேவை மையங்களுக்கு (CSC) நேரில் சென்று விண்ணப்பத்தை பதிவு செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
கடன் பெற தகுதிகள் என்னென்ன
இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.. மேலும், ஆதார் அட்டை மற்றும் கைபேசி எண் இணைப்பு (eKYC, OTP சரிபார்ப்பு) கட்டாயமாகும்.. அதேபோல், நீங்கள் அந்த நகரில் வியாபாரம் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து பெறப்படும் Letter of Recommendation எனப்படும் பரிந்துரைக் கடிதம் மிகவும் முக்கியமான ஆவணமாகும்..
இந்தக் கடனுக்கான வட்டி விகிதங்கள் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களுக்கு இணங்க வங்கிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன.. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக இந்த கடன் வழங்கப்படுகிறது.
முக்கியமாக, ஆதார் இருந்தாலே தானாக கடன் கிடைக்காது என்பதையும் மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.. தகுதி, ஆவணங்கள் மற்றும் சரியான பதிவு ஆகியவை பூர்த்தி செய்தவர்களுக்கே இந்த உதவி கிடைக்கும்.. பிணையமின்றி எளிய முறையில் கடன் பெற விரும்பும் சிறு வியாபாரிகளுக்கு, இந்த திட்டம் ஒரு பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications