அரசு லேப்டாப்பில்.. கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் படத்தை அழித்தால் வாரண்டி கிடையாது! மாணவர்களே உஷார்!
சென்னை: மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஆனால், லேப்டாப்பில் உள்ள கருணாநிதி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்டிக்கரை மாணவர்கள் சிலர் அழித்து, அதை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். இப்படி செய்தால், லேப்டாபுக்கான வாரண்டி கிடைக்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலவசங்கள் என்பது மக்கள் சோம்பேறிகளாக மாற்றுகிறது என்றும், அரசியல் கட்சிகள் தங்கள் வாக்கு வங்கிக்காக இந்த திட்டங்களை பயன்படுத்துகிறது என்கிற ரீதியிலான விமர்சனங்கள், ரொம்பவும் இயல்பானதாக மாற்றப்பட்டு வருகின்றன.

நலத்திட்டங்களும் மக்களும்
உண்மையில் நலத்திட்டங்கள், இலவசங்கள் என்பது ஒரு சமூக பாதுகாப்புதான். டிவி இல்லாமல் பக்கத்து வீட்டு வாசல் படியில் அமர்ந்து, டிவி பார்த்து வளர்ந்த 90s கிட்ஸுக்கு கலைஞர் டிவி பொக்கிஷம் மாதிரி. தாலிக்கு தங்கம், இலவச மிக்சி, கிரைண்டர் திட்டங்களும் பெண்களின் வாழ்வாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இன்று இதெல்லாம் சாதாரணமாக தெரிந்தாலும், 10-15 ஆண்டுகளுக்கு முன்னர் இதெல்லாம் பெரிய விஷயம்தான்.
அடிப்படை தேவை
மக்கள் நாள் முழுக்க உழைக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கான வாழ்க்கை பாதுகாப்பானதாக இருக்கிறதா? இந்தியாவில் வேளாண் தொழிலுக்கு அடுத்து, 82% பேருக்கு வேலை வாய்ப்பை கொடுப்பது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்தான். ஆனால் இந்த நிறுவனங்களில் வெறும் 12% தான் தங்கள் ஊழியர்களுக்கு காப்பீடு வழங்கியுள்ளன. மொத்த வாழ்க்கையையும் வேலையில் தொலைத்துவிட்டு நிற்கும் உழைப்பாளிகளுக்கு, அவர்கள் உயிரை கூட காப்பாற்றிக்கொள்ள வழி இல்லை என்பது உண்மை.
அந்த இடத்தில் தமிழ்நாடு அரசின் இலவச காப்பீடு திட்டம் என்பது, மக்களை சோம்பேறித்தனமாக்குகிறதா? அத்தியாவசியமாக இருக்கிறதா? என்பதே கேள்வி!
லேப்டாப் திட்டம்
இப்படியான திட்டங்களுக்கு மத்தியில் கவனம் பெற்றதுதான் அரசு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம். இந்த திட்டம் வருவதற்கு முன்னர் வரை, கம்ப்யூட்டர் கோச்சிங் சென்டர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. 12ம் வகுப்பு முடிக்கும் மாணவர்களின் வீடுகளை குறிவைத்து நோட்டீஸ் போடுவார்கள். இந்த சென்டர்களில் கோடிங் எல்லாம் கற்பிக்கப்படாது. சாதாரண MS office உள்ளிட்டவைதான் கற்றுத்தரப்படும்.
தடை அதை உடை
அதுவரை கம்ப்யூட்டரை அணுகாத சமானிய மாணவர்களுக்கு, பணம் கட்டி கோச்சிங் சென்டர் போவதெல்லாம் நடக்காத காரியம். தவிர, மேற்படிப்புக்கு அப்ளை செய்வது, வேலைக்கு ரெசியூம் அனுப்புவது என எல்லாவற்றிற்கும்.. ஏற்கெனவே கம்ப்யூட்டர் அறிவு கொண்ட ஒருவரை நாட வேண்டியதிருந்தது. ஆனால், இலவச லேப்டாப் திட்டம் இந்த மொத்த தடைகளையும் அடித்து காலி செய்தது.
என்ன செய்தது லேப்டாப்?
மாணவர்கள் கைகளில் லேப்டாப் புழங்கும்போது, அவர்கள் அதை சரளமாக பயன்படுத்த தொடங்கினார்கள். படம் பார்க்கிறார்களோ.. கேம் விளையாடுகிறார்களோ.. எல்லாவற்றையும் அவர்களே செய்கிறார்கள். லேப்டாப்பில் லூப் அண்ட் கார்னரை தெரிந்துக்கொள்கிறார்கள். அவர்கள், வேலைக்கு செல்லும்போது கம்ப்யூட்டரை பார்த்து அச்சப்படவில்லை. அங்கும் புகுந்து விளையாடுகிறார்கள். சமானிய குடும்ப பின்னணியிலிருந்து வந்த இளைஞர்களின் மன தடையை இந்த திட்டம் போக்கியுள்ளது.
லேப்டாப் வாரண்டி
இப்படி இருக்கையில் சில மாணவர்கள், லேப்டாப்பில் உள்ள கருணாநிதி, மு.க.ஸ்டாலின் படத்தை நீக்கிவிட்டு, தங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர்களின் படங்களை ஒட்டிக்கொள்கின்றனர். அதை வீடியோவாகவும் எடுத்து சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர். இப்படி செய்வதால் லேப்டாப்புக்கு வழங்கப்பட்ட வாரண்டி கிடைக்காது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
பொதுவாக புதிய லேப்டாப் வாங்கும்போது அதன் வண்ணம் மாறியிருந்தாலோ, பிளாஸ்டிக் பகுதி உடைந்திருந்தாலோ வாரண்டி மறுக்கப்படும். இப்படி இருக்கையில் அரசு முத்திரை உள்ளிட்டவை வேண்டும் என்றே சிதைக்கப்பட்டால், அது வாரண்டிக்கான நிபந்தனைகளை மீறிய செயலாக பார்க்கப்படும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications