சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உன்னதமான உயர்ந்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா.. முதல்வர் ஸ்டாலின், கூட்டணி தலைவர்கள் வாழ்த்து

குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் உன்னதமான உயர்ந்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு வாழ்த்துக்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் உன்னதமான உயர்ந்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு வாழ்த்துக்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Draupadi Murmu VS Yashwant Sinha | மோதும் BJP முன்னாள் நிர்வாகிகள் | Next President Of India *India

    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவி காலம் ஜூலை மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

    எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சிகளை கவிழ்க்க ஒரே பார்முலா!3 ஆண்டுகளில் 4 மாநில அரசுகளை கவிழ்த்த பாஜக! எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சிகளை கவிழ்க்க ஒரே பார்முலா!3 ஆண்டுகளில் 4 மாநில அரசுகளை கவிழ்த்த பாஜக!

    இதனையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் தலைவர் திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதேபோல் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா களமிறக்கப்பட்டார்.

    திரௌபதி முர்மு

    திரௌபதி முர்மு


    திரௌபதி முர்மு கடந்த வெள்ளிக்கிழமை வேட்பு மனுவை தாக்கல் செய்த நிலையில், யஷ்வந்த் சின்ஹா கடந்த திங்கள் கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், இருவரது வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

    யஷ்வந்த் சின்ஹா

    யஷ்வந்த் சின்ஹா

    கேரளாவில் உள்ள பத்மநாதபுரம் கோவில் சாமி தரிசனம் செய்து தனது பிரச்சாரத்தை தொடங்கிய யஷ்வந்த் சின்ஹா, பின்னர் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்காக தமிழகத்திற்கு வருகை தந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் யஷ்வந்த் சின்ஹா சந்தித்து ஆதரவு கோரினார். கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். யஷ்வந்த் சின்ஹாவை வாழ்த்தி திமுக கூட்டணித் தலைவர்கள் பேசினர்.

    கூட்டணி கட்சியினர் ஆதரவு

    கூட்டணி கட்சியினர் ஆதரவு

    சிபிஎம் கட்சியின் தமிழ்நாடு சட்டமன்ற தலைவர் நாகை மாலி பேசும் போது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இது. இதற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமை ஏற்றுள்ளார். ஜனாதிபதி தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. மதவெறி சக்திகளுக்கும் மதசார்பற்ற சக்திகளுக்கும் நடைபெறும் தேர்தல் என்று கூறினார். வெற்றி வேட்பாளருக்கு வாழ்த்துக்கள் என்றும் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பேராதரவை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.

     முக்கியமான தேர்தல்

    முக்கியமான தேர்தல்

    சிபிஐ சட்டமன்ற கட்சித்தலைவர் ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ ஆகியோர் வாழ்த்தி பேசியதோடு ஆதரவையும் தெரிவித்தனர். இது தேர்தல் என்பதையும் கடந்து அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்கான உங்களுடைய பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். இந்த மேடையில் தலைவர்கள் அமர்ந்திருப்பது கருணாநிதியின் இதயம் போல இருப்பதாகவும் அவரும் உங்களை தமிழகத்தின் சார்பில் வாழ்த்துவார் என்றும் கூறினார் விசிக எம்எல்ஏ. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா ஆகியோரும் வாழ்த்துக்களை கூறி ஆதரவினை தெரிவித்தார். குடியரசுத்தலைவர் தேர்தல் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல் என்றும் ஜவாஹிருல்லா குறிப்பிட்டார்.

    English summary
    Chief Minister M.K.Stalin has said that congratulations to the noble leader Yashwant Sinha who is contesting the presidential election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X